Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Monday, December 19, 2011

போட்டிருக்கிற இமேஜ் முதற்கொண்டா காப்பி அடிப்பீங்க.....



அதேதான்.. பதிவு திருட்டு..

நாமளே, யாரும் இல்லாத டீக்கடையில டீ ஆத்திக்கு இருக்கோம். அதுக்குள்ளேயே திருடினா எப்பிடி பாஸ்? பிச்சைப் பாத்திரத்துக்குள்ள சைத்தான் புகுந்த மாதிரின்னு ஊருல சொல்லுவாய்ங்க அதுதான் நடந்துக்கு இருக்கு இங்க..

இதுல என்ன காமெடின்னா, ஒரு எழுத்து பிசகாமல் அப்படியே காப்பி பண்ணி போடுறது சரி, ஆனா இங்க – நான் போட்டிருக்கின்ற அதே படங்களையும் காப்பி பண்ணியிருக்காரு நண்பர் ஒருவர். ஹா…ஹா.. என்னா கொடுமை இது சரவணா???

பண்றதுதான் பண்றமே, அதை கொஞ்சம் மாற்றித்தான் போடக்கூடாதா? எதுக்கும் நீங்களும் பார்த்துக்கோங்கோ மக்களே உங்க பதிவுகளும் அவரின் வலைப்பூவில் இருக்கலாம். அதை நீங்க ரொம்ப ஈசியா தெரிஞ்சிக்கலாம். உங்க ப்ளாக்ல இருக்கிற இமேஜ் அவர்ர ப்ளாக் தெரிஞ்சா கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..

எப்பா, ராசா.. நான் தனிப்பட்ட முறையில கொமண்ட் போட்டாலோ, செய்தி அனுப்பினாலோ பதில் சொல்றாய் இல்ல. இதப் பார்த்தாவது திருந்திக்கோ கண்ணு!!

2010 May ல் நான் எழுதிய பதிவு :

அவரின் ப்ளக்கில் உள்ள எனது பதிவு :

2010ல் மே ல் மின்னஞ்சலில் வந்ததை அப்படியே போட்டது ( நாமளே காப்பி பண்றோம், அதையே இவனுங்க அப்படியே ஈயடிச்சான் கொப்பி பண்றானுங்க..)

அவரின் ப்ளக்கில் உள்ள எனது பதிவு :


இன்னும் இருக்கலாம் தேட நேரமில்லை. நீங்களும் பார்த்துக்கோங்க நண்பர்ஸ்..








Wednesday, July 13, 2011

பதிவுலகில் நட்பை பெற, மனதை திறந்து வையுங்கள்…


நண்பர்கள் எனக்கு தேவை. ஆனால், நான் அவர்களுக்கு கிடைக்க கூடியதாய் இருக்கின்றேனா?

நிதர்சனம் அப்படித்தான் இருக்கின்றது தோழர்காள்! பள்ளிக்கால நட்பு, கல்லூரி நட்பு, ஊர் நட்பு என பல வட்டங்கள் தாண்டி இங்கு நான் சொல்ல வருகின்ற நட்பு – வலையுலக நட்புக்கள். இன மத நாடு போன்ர எல்லைகளுக்கு அப்பால்  நின்று நட்பினால் பின்னப்பட்ட இந்த வலாஇயுலகில் நானும் ஒரு சிறு அங்கம் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இன்னும் உள்ளே உண்டு. அது – நான் தலைப்பாக இட்டுள்ள கேள்விதான்!! இங்கு எப்போதும் ஒரு வாசகனாய் இருப்பதில் எனக்கு நிறைய சௌகரியங்கள் இருக்கின்றன. பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள் எதுவும் தேவையில்லை எனும் அளவிற்கு எனக்கு அவர்களை தெரியும், ஆனால் எத்தனை பேருக்கு என்னை தெரியும்???


நிச்சயமாக இதற்கு காரணம் நான் தான்..அதுவும் எனக்கு தெரியும். நிச்சயமாக இந்தப் பதிவு என் போல் உள்ள பல பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம். அதற்காகவே இதை எழுதுகின்றேன். தனிப்பட்ட ஒருவரின் குண நலன்கள் இப்பதிவுலகில் – பதிவர்கள் என்றவகையில் பிரதிபலிக்கின்றன என்றால் மறுப்பதற்கில்லை அல்லவா?? இது என்னை வைத்துத்தான் சொல்கின்றேன்..


மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் சிறிது தயக்கம் கொண்ட என் போன்றவர்களால், இணைய உலகில் ஒரு நட்பு வட்டத்தினை உண்டாக்குவதென்பது முடியாத காரியம். மற்றவர்களிடம் சென்று தானே நட்பினை உண்டாக்கும் அளவிற்கு திராணி எனக்கு இது வரைக்கும் வந்ததில்லை. (இப்போது என்னவோ ஒரு வேகம் வந்துள்ளது பார்க்கலாம்!!) இது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மைதான் அல்லவா/ மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என எண்ணுவதிலேயே என் போன்றவர்களின் காலம் கழிந்து விடுகின்றது ((.


ஆனாலும் எதிர்பார்ப்புகளிற்கு பஞ்சம் இல்லாமல் இல்லை. நாம் எழுதும் பதிவுகளுக்கு மற்றவர்கள் எதீர்வினை செய்ய வேண்டும் என எண்ணுகின்ற நியாயம் நாம் ஏன் அதை செய்வதில்லை என்ற கேஎள்விக்கு, நம்ம கருத்தெல்லாம் ஒரு பெரிய விசயமா என்ற சமாதானப்படுத்தலுடன் முற்றுப் பெறுகின்றது. இது பலருக்கு புரியலாம்.

ஆரோக்கியமான பதிவுலக நட்புக்கள், அவர்களுக்கிடையிலானுறவுப் பிணைப்புக்கள் என எல்லாம் பார்க்கின்ற போது நாமும் அதற்குள் இணைய மாட்டோமா என்ற ஏக்கம் எழத்தான் செய்கின்றது. ஆனாலும் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்கின்ற யதார்த்தம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்கத் தொடங்கியுள்ளது,

என் போன்றுள்ள பதிவர்காள் கேளுங்கள், ஆரோக்கியமான நட்புக்களை பதிவுலகில் பெற வேண்டுமா ஒன்றும் செய்ய தேவை இல்லை,

முதலில் – தாழ்வுச்சிக்கலோ, நான் பெரியவன் என்ற மமதையோ இன்றி திறந்த மனசுடன் ஆரம்பிக்கலாம் , வாசல் கதவு திறந்திருந்தால்தானே விருந்தாளிகள் உள்ளே வருவார்கள்??

இன்னும், பாராட்டு என்பது அனைவருக்கும் தேவையானது, வேண்டி நிற்பது. அதை செய்ய ஒரு போதும் தயங்க கூடாது. எனக்கும் அது தேவை எனும் போது, நானும் கொஞ்சம் கொடுத்தால்தானேஎ, எனக்கும் கிடைக்கும். நான் எனதை என்னிடமே வைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது நியாயமில்லை அல்லவா?

புதிதாக வருகின்ற சில பதிவர்கள் வெகு சீக்கிரத்தில் தமக்கென்று ஒரு தனி முத்திரையினை பதிப்ப்பதை அவதானிக்கலாம். அவர்களை அவதானித்தால் மேற் சொன்ன இரு விடயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
இது இத்தனை வருட எனது தனிப்பட்ட பதிவுலக அனுபவங்களில் இருந்து நான் படித்தது. இன்னும் நான் இதை பின் பற்றவில்லை. இனி நானும் முயலப் போகின்றேன்..

நண்பர்களே காத்திருங்கள் இதோ ஒருவன் உங்களை தேடி வரப் போகின்றான்.. கூடை நிறைய நட்புக்களோடு…

நட்போடு மகிழ்ந்திருப்போம்….   




Tuesday, July 13, 2010

தமிழிஸ் : என்னை ஏத்துக்கோ, ஏத்திக்கோ.


ஒண்ணுமில்ல மக்களே, வலைப்பூ ஆரம்பித்து நீண்ட காலம் ஆனாலும், சில மாதங்கள் முன்பிருந்தே சில, பல பதிவுகளினை இட ஆரம்பித்துள்ளேன். அதில் அனேகமானவற்றினை தமிழிஸ் திரட்டியுனூடாகவே, நண்பர்கள் பலர் எனக்கு அறிமுகமானார்கள்.

ஆனாலும் ஒரு குறை, இன்னும் எனது எந்த ஒரு பதிவும் பிரபல பதிவுகளில் வந்ததே இல்லை. நானும் அத இத எண்டு முடிஞ்ச முயற்சியெல்லாம் செய்றன். ம்ஹூம்…….. முடியல…. மத்த திரட்டிகளில் வந்திருந்தாலும், தமிழிஸ் இல் இனும் வரவில்லையே என்ற குறை என்னை அரித்துக்கொண்டே இருக்கின்றது.

பிரபல இடுகை பெற அல்லது அதிக வாக்குகள் பெற ஏதாவது கோர்ஸ் இருக்கா மக்கா??????? இருந்தா சொல்லுங்கோ….


Thursday, June 10, 2010

பதிவுலகம் பாக்கலியோ பதிவுலகம்

அடிச்சிக்கிறாங்க
பிடிச்சிக்கிறாங்க..
அனானியா வந்து தாக்குறாங்க..
அத்தனையும் இங்கதாங்க..

ஒன்ன சொன்னா..
ரெண்டாக்கி,,
பின்ன அத புண்ணாக்கி..
பின்னூட்டி.,
பித்துப்பிடிக்க வைக்கானுக..

“இசம்”கள் சொல்ல ஒரு கூட்டம்,
அத துவம்சம் செய்ய ஒரு கூட்டம்,
ரசிகர் தேடி ஒரு கூட்டம்,
ஆளில்லா கடையில் டீ ஆத்திக்கொண்டு ஒரு கூட்டம்..
இன்னும் இன்னும்
கூட்டம் கூட்டமா
பதிவுலகம் பாக்கலியோ
பதிவுலகம்..

வண்டியா வண்டியா குப்பைகள்
வகை வகையா தகவல்கள்
அரசியல் சொல்ல ஒரு குறூப்..
கிசு கிசு, கிச்சு கிச்சு, அடிதடி
வேண்டியது எல்லாம்..
கிடைக்குமிங்கு..
பதிவுலகம் பாக்கலியோ
பதிவுலகம்..

Thursday, June 03, 2010

அது சரி பதிவுலக அரசியல் பதிவுலக அரசியல் எங்கிறாங்களே அப்பிடீன்னா என்னா?

வலைப்பூ தொடங்கி நான்கு வருசமானாலும், இப்போதான் இப்பதிவுலகினுள் ஓரளவு பிரவேசிக்க முடிந்துள்ளது. முடிந்த வரை பல பதிவர்களின் வலைப்பூக்களுக்குள் மேய்ந்து கொண்டிருக்கின்றேன். அங்கெல்லாம அடிக்கடி பிரயோக்கிக்கப்படும் வார்த்தை – பதிவுலக அரசியல்.

அப்பிடீன்னா என்னாங்க? எப்பிடியான அரசியல் அது? கருத்தாடல்களில் என்ன அரசியல் வரப்போகுது? பிடிச்சா ஏத்துக்குவாங்க.. பிடிக்கலேன்னா விட்டுட்டு போக வேண்டியதுதானே? மிஞ்சிப்போனா ஏதாவது ஒரு பின்னூட்டம்.. இதுல எங்க அரசியல் வரப்போகுது?

தனிப்பட்ட தாக்குதல் ரொம்ப கேவலமானது. சிலரின் எழுத்துக்களில் வன்மம் மட்டும்தான் தெரியுது.. இதான் நீங்க எல்லோரும் சொல்ற அரசியலா? எதுக்கு இப்பிடி எல்லாம்? இதால யாருக்கு லாபம்? ஜாலியா வந்தமா படிச்சமா போனமா? நமக்கு புரிஞ்ச மாதிரி, தெரிஞ்ச மாதிரி ரெண்டு பதிவ போட்டமா? யாரையாவது ச்சும்மா கலாய்ச்சமா? எண்டில்லாம என்னாதிது சின்னப்புள்ளத்தனமா??

கருத்து மோதல்கள் , நிச்சயமா தேவை. அது ரொம்ப ஆரோக்கியமா இருந்தா எல்லோருக்கும் நன்மை. அப்பிடி இல்லாம – குழாயடி சண்ட போல இருந்தா எப்பிடீங்க?

ஆனாலும், இதுல சண்டைதானே இருக்கு- அரசியல் எங்க வருது? ஒருவேள சண்டை போடுறதுதான் பதிவுலக அரசியலோ??

பெரியவங்க நிறைய இருக்கிற இப்பதிவுலகத்தில சிறியவன் மனசுல பட்டத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்கோ ஐயாமாரே…………………