Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Wednesday, December 28, 2011

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……



அண்ணா, நான் கவுஜை எழுத போறேன்

நீயுமா?????

அதென்ன நீயுமா?

இல்லடா, எல்லாரும் தொடங்கிட்டாங்களே நீயுமா ன்னு கேட்டேன்.

அதுல என்ன இருக்கு நானும் எழுதத்தான் போறேன்

என்ன மாதிரி கவிதை எழுதப் போறாய்?

இதெல்லாம் ஒரு மேட்டரா? மானே தேனே ன்னு போட்டு கீழ கீழ எழுதினா கவுஜை.

போடாங்க்…………

அப்போ???

டேய் கவுஜை னா.. வாசிக்கிறவன் தலைய பிச்சிக்கணும்.. ஏதோ இருட்டுக்க இருக்கிற பீல் வரணும்.. அதான் கவுஜ..

ஓ……..!! அது நமக்கு வராதே!!!!!!!

அப்ப நீ சரிப்பட்டு வரமாட்டே!!

இல்ல.. நான் எழுதியே ஆகுவேன்…….. ம்ம்… சரி .. நான் நம்ம TR மாதிரி ட்ரை பண்ண போறேன்..

கிழிஞ்சிடும்….டேய் தம்பி அதெல்லாம் வேணாம்.. நெறைய படி, பொறகு கவுஜை எழுத ட்ரை பண்ணு என்ன?

ஏன் +2 போதாதாண்ணா?

ஐயோ!!!!!!!!!!!!
பாரதிய பார்……….

யாருண்ணா அது, என்ன படம் நடிச்சிருக்காரு…….

@@#@##$#@$^&!!!!!!!!!!!!!!!!#$%^