Wednesday, June 30, 2010

ஒர் பிறந்த நாளுக்காய்.....................

இது காலம் கடந்ததாக இல்லை.
இன்னும் நான்,
உன் பிறந்த நாளில் குடியிருக்கிறேன்.

ஒர் நினைவின் தொல்லை
இன்னும் என்னுள் அவஸ்தையாகி
உன் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களை
எனக்குள் ஒவ்வொரு நாட்களும் விதைத்து விடுகின்றன.




சும்மா சிரிக்க.............

1) “ செய்... அல்லது செத்துமடி... ” ---- நேதாஜி..
“ படி.. அல்லது பன்னி மேய்... ” --- எங்க பிதாஜி.... 




2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கமுடியவில்லையோ

அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்... 





3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 




4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டுஇருப்பியே...

இப்ப பாரு... அவ 470 மார்க்... நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா.... நீ +2 படிக்கிரடா

 


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம் ? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்.... 



6) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
( ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....) 





7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம் ’ க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற ?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா .. 





8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்....
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “ செல் ” லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா... ? 





9) லவ் லட்டருக்கும் , எக்ஸாம் ’ க்கும் என்ன வித்தியாசம் ?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி ? 




10) கணவன்: காலெண்டர் ’ ல என்னப் பாக்குற ?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது ?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல... 





11) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்மஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர்சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில்நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.... ? 





12) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போதுதூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்கமுயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்துநீந்தி சென்று படிக்கிறார்...
“ இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம். ” 





13) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக்எப்படி இருக்கும் ?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில் ’ லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++ 




14) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.( Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க ? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
__________________

Tuesday, June 29, 2010

கடைக்காரர் பாடு முடியல.....

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,

5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். கடைக்காரர் கடைதட்டியில் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் போத்தலை மிக சிரமப்பட்டு கதிரை மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு போத்தலை வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல.........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் போத்தலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், எனற நிம்மதியுடன், மிட்டாய் போத்தலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..

கடைக்காரர் பாடு
_______________

இயந்திரமாய்ப்போன பழங்கள்

உலகம் இயந்திரமாக மாறவில்லை - ஆப்பிளும் , ப்ளக் பெர்ரியும் பழங்களாக மட்டும் இருந்தவரை….



Monday, June 28, 2010

நான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா!!!!!

இன்று காலையில் செய்திப்பக்கங்களினை இணையத்தில் மேயும் போது ஒரு சுவாரசியமான செய்தி. ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டு இணையத்தில் வெளியானது பற்றி இருந்தது. அட! என எண்ணிக்கொண்டே ச்சும்மா கூகிளினை தட்டினேன். இதோ ஐஸ்வர்யாவின் கடவுச்சீட்டு என் முன்னால். 

ஆஹா, இத நம்ம வலைப்பூவில் பதிவேற்றினா சூப்பரா இருக்குமே என்ற அவாவில் அப்போது மனதில் தோன்றிய தலைப்புடன். ( தேவதைகளுக்கும் பாஸ் போட் இருக்குமா?) பதிவேற்றினால்.. விளைவுகள் வேற மாதிரி போய்க்கொண்டிருந்தது.
சைபர் கிரைம்… இத ஏன் செஞ்ச்சீங்க? அது இது என பல பல பக்கங்களில் இருந்தும் அம்புகள் – அன்பின் காரணமாக.. இதுல கோவி. கண்ணன் இப்பிடி எல்லாம் மனுசர் பயப்படுத்துகிறார்.

கோவி.கண்ணன்
ஏற்கனவே அவங்க சைபர் க்ரைமில் விண்ணப்பம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்காங்க. இந்த நிலையில் நீங்கள் அவர்களின் கடவு சீட்டை வலையேற்றுவது உங்களுக்கு சட்டப் சிக்கலை ஏற்படுத்தலாம். அடுத்தவர்கள் வெளி இட விரும்பாத தகவல்களை கிடைத்ததே என்பதற்காக வெளி இடுவது நாகரீகம் இல்லை. “

யப்பா! ஆளவிடுங்கடா சாமிகளா! நாமக்கெல்லாம் தமிழ்லயெ பிடிக்காத ஒரே வார்த்தை – கிரைம்தான்.. அதுலயும் இது சைபர் கிரைமாம். காலைலிலேயே வயிற்றுக்குள்ள கொஞ்சம் புளி கரைத்தது. வேலியில போற ஓணான எடுத்து வேட்டிக்க உட்ட கதையா போயிருமோ என்று பயம் வேற.. இதுல, சைபர் கிரைம் பொலீஸ் நம்மள கைது செய்து கொண்டு போற மாதிரியும், பேப்பர்களில், “ ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டினை தனது வலைத்தளத்தில் பதிவேற்றிய அழகிய ( ???? ) இளம் (!@#@!??) வாலிபர் கைது “ என செய்திகள் வருவது போலவும் கற்பனைகள் வேறு.

எதுக்கு இத்தன வம்புகளும், அப்பதிவினை அழித்துவிட்டேன். 

ஆனாலும் கூகிளில் , Aishwarya passport” சேர்ச்சினால், அப்பிரதிகள், பல்வேறு வடிவங்களில் தரங்களில் கொட்டுகின்றன. அப்படியானால் அதை எல்லாம் எப்பிடி தடுப்பார்கள். அவர்களுக்கும் சட்டச்சிக்கல்கள் வருமா?

ஆனா, நான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா!!!!!!