Posts

Showing posts from August, 2011

அதென்ன டெஸ்ட் கிரிக்கட்???

நேற்று இந்தியா டெஸ்டிலும் தோற்றுவிட்டது, தனது முதலிடத்தினையும் பறி கொடுத்துவிட்டது.
இன்னிக்கு ஆபிஸ்ல நல்ல அவல்தான், 
மாட்டினீங்கடா மலையாளிகளா! இதோ வர்ரன் என கறுவிக்கொண்டே ஆபிஸ் சென்றேன். 
ஏனிந்த கொலைவெறி என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் அவனுகள்ர ஆட்டம்தான், வேல்ட்கப் பறி கொடுத்ததன் பின் இவனுகள் போடும் ஆட்டம் சகிக்க இயலவில்லை. இனி கிரிக்கட்டில் இந்தியாவை எவனாலும் வீழ்த்த முடியாது அது, இது ன்னு வெட்டி ஜம்பம் வேற..
இருங்கடா வர்ரன், ஆபீஸ் நுழைந்தால், அனைவரும் வேலையில் படு மும்மூரம். 
காலையிலேயே இவ்வளவு அமைதியா ஒரு நாளும் இருந்ததே இல்லை. வணக்கம் வைத்தாலும், கொம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே பதில் வணக்கம் சொல்றானுகள்.
..ஆஹா, பசங்க முன் ஏற்பாடுகளோடதான் வந்திருக்கானுகள், எப்பிடி ஆரம்பிக்கலாம்? என யோசித்துக் கொண்டே , எப்போதும் சந்தைக் கடை போலவே இருக்கும், விற்பனை பகுதியை பார்த்தால், வெறிச்சோடி கிடந்தது. ஒரே ஒரு பிலிப்பினி மட்டும் கணினியில் லேட்டஸ்ட் கணினி விளையாட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“ஹாய்!” என்றவாறு அவனிடம், “ எங்கே மற்றவர்கள் ? “ என வினவினேன், 
அனைத்து தன்மான சிங்கங்களும் தமது வாடிக்கையா…