தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)இந்தப் பண்டிகை காலத்தில் நீங்கள் வாங்கும் அனைத்து ஆபரணத் தங்கங்களுக்கும் நிச்சயமான பரிசுகள்.
5,000 திர்ஹம்களுக்கு மேல் கொள்வனவு செய்தால் ஒரு தங்க நாணயம் பரிசு…
பண்டிகையினை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்

இது இந்த வார நாட்களில் இங்குள்ள தினசரி பத்திரிகைகளில் ஒரு நகைக் கடையின் விளம்பரம். ஏன் சன் டீவி தொடக்கம் அனைத்து தமிழ் சனல்களிலும் இதே பாட்டுத்தான்.

எனக்கும், நகை வாங்கும் தேவை இருந்ததால், இப்போது வாங்கினால்த்தான் என்ன! அதுவும் இதே ஜூவலரியில் வாங்கினால், தங்க காசு, பரிசு என கிடைக்குமே என்ற பேராசையில் ( பேராசைதான் வேறு என்ன?? ) நேற்று அங்கு போனேன்.

கடைக்குள் நுழைந்தால், ஒரே குழப்பமாகிவிட்டது. இது நகைக்கடைதானா? இல்லை மீன் சந்தையாவென!! அப்பிடி ஒரு சனத்திரள், பெண்கள்… பெண்கள்.. பெண்கள்.. கணவர்கள் வழமை போல, பில்லுக்கு பணம் கட்டிக்கொண்டும், குழந்தைகளுக்கு பராக்கு காட்டிக் கொண்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

தங்க நாணயம் கொடுக்கிறான்தானே அதான் இவ்வளவு கூட்டம் என எண்ணிக் கொண்டே, ஒரு அகலமான பெண் , கௌண்டரை விட்டு விலகிய இடம் பார்த்து இடம் பிடித்துக் கொண்டேன். அப்பா!! நமக்குத்தான் தெரிவதில் நிறைய சிக்கல் இருப்பதில்லையே! ஐந்து நிமிடங்களுக்குள் பில் கட்ட ரெடி. மனம் முழுக்க அவன் தரப்போகும் தங்க நாணயமும் , பரிசும் தான் நிறைந்திருந்தது.

காட்சிக்கு வைத்திருந்த நகைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கண்ணாடி கூண்டினுள் நிறைய தங்க நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

ஓ! இதுதான் எனக்கு கிடக்கப் போகின்றதா! என ஒரே சந்தோசம்..

அப்படி என்ன தரப்போகின்றான் என்ற ஆவல் இன்னும் வேகமாக வளர, விற்பனையாள் என்னை நோக்கி வந்தான்.

“ஐயா, இதோ உங்களது நகை மற்றும் பில்” என்றான்.

அது கெடக்கட்டும் கழுத, எங்கடா என்ட தங்க நாணயமும் மற்ற பரிசும் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.
திடீரென குனிந்து ஒரு அட்டையினை எடுத்து என்னிடம் நீட்டினான். விசிட்டிங்க் கார்ட் போல இருந்தது.
இவன் தங்க நாணயத்தை தரமாட்டான் போல  என எண்ணிக் கொண்டே. 

எங்கே என் கோல்ட் கொயின் என கேட்டேன்.

அதுதான் சார் இது என பதில் வந்தது ….

என்னாது???

லெமினேற் பண்ணப்பட்ட ஒரு அட்டையின் நடுவில் சிறிய ஒரு பொட்டு போல அது இருந்தது. நிறை 250 மில்லி கிராம்!!!!!!!! அடப்பாவிகளா!! 

இதுதானாடா தங்க நாணயம்!! நாசமா போயிடுவீங்களா! என திட்டிக்கொண்டே

வலிக்காத மாதிரியே மொகரைய வச்சிக்கு எங்கடா என் கிப்ட் என்றேன்.

அது உள்ளே உள்ளது என பதில் வந்தது.

அதாவது தேறுமா என வெளியில் வந்து பார்த்தேன்.

லட்டு பாக்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லாருங்கடே!!!!!!!!!!!!! வேற என்னத்த சொல்ல .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


நீதி : வெளம்பரம் பார்த்து போவியா?? போவியா?? 


Comments

MANASAALI said…
லட்டையாவது முழுசா கொடுத்தாங்களா? இல்லன பூந்திய காட்டி லட்டுன்னு சொன்னாங்களா?
Mohamed Faaique said…
தொப்பி...தொப்பி...
Mohamed Faaique said…
அந்த பரிசையும் போட்டோ எடுத்து போட்டிருக்கலாமே!!!
bandhu said…
நல்ல வேளை.. தங்க காசை பார்க்கறதுக்கு ஒரு பூதக்கண்ணாடி கொடுக்காம விட்டாங்களே.. (கொடுத்துருந்தா அது தான் கிப்ட் என்றிருப்பார்கள்!)
//MANASAALI said...
லட்டையாவது முழுசா கொடுத்தாங்களா? இல்லன பூந்திய காட்டி லட்டுன்னு சொன்னாங்களா? //

லேட்டானவங்களுக்கு அதுதான் கெடச்சிருக்கும் போல..

நல்லவேளை லட்டா கெடச்சிச்சே ஹீ...ஹீ ))))))))))

நன்றி கருத்துக்கு
//Mohamed Faaique said...
தொப்பி...தொப்பி...

அந்த பரிசையும் போட்டோ எடுத்து போட்டிருக்கலாமே!! .//

ஏன் ஏன்.. ஏன் இந்த கொ.வெ????? வலிக்குது விட்டுடுங்க?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//bandhu said...
நல்ல வேளை.. தங்க காசை பார்க்கறதுக்கு ஒரு பூதக்கண்ணாடி கொடுக்காம விட்டாங்களே.. (கொடுத்துருந்தா அது தான் கிப்ட் என்றிருப்பார்கள்!) //

லட்ட விட அதுக்கு வெல ஜாஸ்தின்னு செய்யாம விட்டிருப்பானுக வேற ஒண்ணும் இல்ல தலைவரே ))))))))

வருகைக்கு நன்றிகள்

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!