Posts

மலையாளிக் களவானிகள்!

Image
லைசன்ஸ் எடுப்பதற்கான முஸ்தீபுகள் அமீரகத்தை பொறுத்த வரை ராணுவ நடவடிக்கை போல.! நிறைய தடைதாண்டல்கள் உண்டு. ஒரு வழியாக தப்பிப் பிழைத்து, இறுதிப் படிக்கு வந்துவிட்டேன். அடுத்தது, குறைந்தது 10 மணித்தியாலங்கள் , வீதியில் ஒரு ட்ரைனர் உதவியுடன் ஓடிப் பழகிய பின்னர், இறுதிச் சோதனை. 

எனது துரதிஷ்டம் , எனது பயிற்றுவிப்பாளர் மலையாளி! வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அதிகாலையும் 2 மணித்தியாலங்கள் ஓடிப் பழகுவது என தீர்மானித்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கினேன். மலையாளிகள் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் வழங்கவே இல்லை.

ஆமாம்! என்னை எப்போதும் அதைரியப்படுத்துவதிலேயே அவன் குறியாகவிருந்தான். எதற்கு இதைச் செய்கின்றான் என குழம்பிய எனக்கு விடை அடுத்த கிழமை கிடைத்தது.
பாஸாக பொலிஸ் இருக்கு 4000 திர்ஹம் குடுத்தா கன்பர்ம் பாஸ் என்றவாறு தொடங்கினான். அது சரி,! என்றவாறு ஆர்வமில்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தேன்.

அவன் விடுவதாய் இல்லை. ரீ.வி விளம்பரம் போல 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்காமல், சரி லைசன்ஸ் கிடைக்காதுவிட்டால் அந்த 4000 திர்ஹம் என்ன ஆகும…

பிரம்பைக் கொடுத்து...

Image
அலுத்துக் களைத்து அறை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.. இருப்பது 6 வது மாடியில் என்பதால், படிக்கட்டுகளைப் பற்றி எப்போதும் எண்ணிப்பார்ப்பதில்லை. (உடம்பு இளைத்தால் என்ன ஆவது!! ) பல நேரங்களில் லிப்டிற்குள் இடம் பிடிப்பதென்பது அக்கரைப்பற்று கல்முனை பஸ்ஸில் சீட் கிடைப்பது போல ரொம்ப அபூர்வம். ஆனால், இன்று ஏனோ யாரும் இல்லை. தனியனாக லிப்டினை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன். 

வாய் பிளந்து நின்ற லிப்டில் ஏறி, கதவை மூட முயலும் போது, மூச்சிரைக்க இரைக்க ஒரு நடுவயது மதிக்கத்தக்க நபர், கைகளை ஆட்டியவாறு வாயில் பக்கம் இருந்து லிப்டினை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். பார்க்கும் போது, பாவமாக இருந்ததால், லிப்டினை மூடாமல் அதன் விசையினை அவருக்காக அழுத்திக் கொண்டிருந்தேன். அடடா! நமக்கும் ஒரு பொதுச்சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்ற எண்ணம் இன்னும் நெஞ்சை விம்மச் செய்திருந்தது.

அருகில் வந்தவர், கைகளில் வைத்திருந்த பொதி ஒன்றினை அவசரத்தில் தவறவிட்டார். உள்ளிருந்த ஐந்தாறு ஆப்பிள்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதற, அதைப் பொறுக்கி எடுப்பதில் மும்மூரமாக இருந்தார். உண்மையில் அவருக்காக காத்திருந்த அந்த ந…

மான் கராத்தே..!

Image
மான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம். 

அதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,

1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்
2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு
3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்... 

கை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்

பின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கரா…

ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்கே!

Image
முழுவதும் மீசை ,தாடி , கர கர என குரல்கள் என கேட்டுக் கொண்டிருந்த எங்களது அலுவலகத்திற்கு புதிதாக ஒரு குயில் கூவ வந்திருந்தது. ஆகா……. இருந்த வாலிப வயோதிப அன்பர்கள் அனைவருக்கும் ஏக குஷி! அது ஏனோ தெரியவில்லை. பால் ஈர்ப்பு என்பது எப்போதும் ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமோ என பல தடவைகளில் எண்ணியதுண்டு. 

அவள் – 25 வயதுக்குள் இருக்கும். அழகியும் இல்லை, சுமாராகவும் இல்லை. பொறுத்துக் கொள்ளலாம் ;).  இருப்புக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு (Inventory Control) வந்திருந்தாள் – மும்பையை சேர்ந்தவள். நுனி நாக்கு ஆங்கிலமும், அதிகாரமும் கொஞ்சம் தூக்கலாக இருந்தன. ஆனாலும், ரசிகர்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. அதிலும், சிலர் தீவிர விசிறியாக அல்லது விசிறியாக்கப்பட்டிருந்தனர்.  அந்த தீவிர விசிறிக்கூட்டத்தில் ஒருவர் எனது நண்பர். நண்பர் காணும் போதெல்லாம், அவளைப்பற்றிய துதிபாடல்களை பாடிக்கொண்டே இருந்தார். அதற்கு இன்னும் ஒரு காரணம் அவளின் மேசைக்கு பக்கத்து மேசைக்காரர் நண்பர். இது எங்கு போய் முடியப்போகின்றதோ என்ற எண்ணம் எனக்கு. 

கடந்த சிலவாரங்களில் நண்பரிடம் துதி குறைந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்ததில…

பேஸ்புக்கில் கலக்கும் சூப்ப்ர ஸ்டார்!

Image
என்ன ஆச்சரியமாக இருக்குதா? உண்மைதான். நம்ம தலைவரின் ஸ்டைலினை வைத்து நிறைய கெப்ஸன்கள் இப்போது பேஸ்புக்கில் வலம் வர ஆரம்பித்துள்ளன. எல்லாம் ரசிக்கும் படி உள்ளதோடு. நகைச்சுவையாகவும் இருக்கின்றன.
தலைவா!! YOU ARE GREAT……..
எனக்கு பிடித்த சில உங்கள் பார்வைக்கு..
கண்ணா உன்னால முடியாது. ரொம்ப வாலாட்டினா அமெரிக்கா கூட ஜூஜூபி....
ஹா..ஹா கண்ணா நீ மட்டுமில்ல ரொம்ப பேர நான் ஆசிர்வதிச்சிருக்கேன். WWE பசங்கல்லாம் யாருன்னு நெனச்ச?
இது ச்சும்மா!! பொரி உருண்டைக்கு...டோன்ட் டச்!! ஹா..ஹா யாருக்கிட்ட  லோக்கல் ட்ரைனா? கேட்டேல்ல..  ரோமிங் சார்ஜ்  அப்ளையாகும்டா
அது என் நாய் புரியுதா?

தலைவா !!! யூ ஆர் கிரேட்

விஜய் டீவியின் ஜூனியர் சுப்பர் சிங்கர் : முன்தீர்மானங்களுடன் நகர்கின்றதா? ( எனது பார்வையில் )

Image
அழுதுவடிக்கும் சீரியல் கொடுமைகளை தாண்டி விஜய் டீவி வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை தருவதால் அதன் நிகழ்ச்சிகளில் எப்போதும் பரீட்சயம் உண்டு. முக்கியமாக – ஜூனியர் சுப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா?

இரு நிகழ்ச்சிகளும் முன்பிருந்ததை விட தற்போது வேறுபாதையில் செல்வது போல இதன் நெடுங்கால பார்வையாளர்களுக்கு தோன்றக்கூடிய சாத்தியங்கள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன. அத்லும் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3  ன் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சி மீதான எனது தனிப்பட்ட பற்றினை குறைத்துக் கொண்டே வருவதாக படுகின்றது. இது என்னைப் போன்ற பலரின் கருத்தாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
டொப் 10 போட்டியாளர்கள் தற்போது  7 ஆக குறைந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படுகின்ற போட்டியாளர்கள் இருப்பவர்களை விட சிறப்பாக பாடக் கூடியவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
-ஆஜித்-ரக்சிதா-செபி-அகிலேஷ் போன்ற நல்ல திறமை உள்ள குழந்தைகள் தட்டிக்கழிக்கப்பட்டு யாரோ ஒருவருக்காக இப்போது இந்நிகழ்ச்சி கொண்டு செல்லப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.
ஆஜித் – அந்த சிறுவன் பாடுவது மட்டுமல்ல அவனது ஸ்டைல் அங்க சைஅவுகள் என அனித்தும் ரசிக்கும் படி இருக்கு…

ஆளில்லா கடையில் டீ ஆத்த நடைபெறும் சண்டைகள் : மாகாண சபைத் தேர்தல் எனது பார்வையில்

தேர்தல் என்றால் ஒருவித திருவிழா மனநிலையே பெரும்பாலான நம்மவர்களிடம் காணப்படுகின்றது. அதற்கு காரணம் என எனக்கு தோன்றுவது. மாறி மாறி வாரி இறைக்கப்படும் அவதூறுகள கேட்பதில் உள்ள ஆர்வமும் வேடிக்கை பார்க்கும் மனநிலையும்தான். இது தவிர்த்து எமக்குள் இன்னும் பரவலான ஒரு அரசியல் பார்வை வந்துவிடவில்லை.
சிலர் ஏற்கனவே முடிவெடுத்து வைத்துவிட்ட வேட்பாளருக்கான வாக்கை இடுகின்றனர். இது அவர்களின் கொள்கைகளுக்கோ கட்சிப்பற்றுதலோ அல்லாமல் அதையும் தாண்டி இன்னபிற தேவைகளாக இருக்கலாம். மேலும் சிலர் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானம் இன்றி இடுகின்றனர்.  எப்படி பார்த்தாலும் இனம், சமூகம் சார் கொள்கைகள் அபிவிருத்தி மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களுக்காக வாக்களிப்பதும் அதை முன்னிறுத்தி வேட்பாளர்கள் வாக்கு கேட்பதும் இப்போது மிக குறைந்தே விட்டது. அதற்கான அரசியல் நாகரீகத்திற்குள் நாம் நுழைய இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம்.
மாற்றுக்கட்ட்சி / கருத்தினரி மதிப்பதோ அவர்களின் விவாதங்களுக்கு குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பதற்கோ எந்த ஒரு தரப்பும் தயாராக இல்லை. அதற்கு பதிலாக அனைவரும் கையில் எடுப்பது வன்முறையும் அவதூறுக…