Saturday, May 21, 2011

இனி நான் அந் நுண்மைக்குச் சொந்தக்காரன்.


இனி நான் அந் நுண்மைக்குச் சொந்தக்காரன்.
கருமை படர்ந்து கண்களில் காதல் அப்பி,
எப்போதும் படர்கின்ற நுண்மைகளில் வாழ பழகுகின்றேன்,
என் வானில் கருமை படர்ந்து, வெப்பம் தகிக்கும் வேளைகளில்
எப்போதும் போல், அவற்றினை சுற்றி காதல் காப்பாற்றுகின்றது.
இடையில் மழை போல கனிவு மாற மீண்டும் அவை படர்கின்றன.

அடம்பிடித்து அழ ஆரம்பிக்கும் நுண்மைகளின் மீதான கோபங்கள்,
அதற்கான காரணங்களறிந்து பறந்து விட,
கொடிக்கம்பாய் நான் மாறி,
படரும் காலங்கள் பற்றி அதோடு புகாரிடத்தொடங்குகின்றேன்.


Tuesday, May 17, 2011

வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்



அழகான பெண்களினை
எப்போதும் என் கண்கள் தொடர்கின்றன.
அலைகின்ற மனசைக் கூட்டிக்கொண்டு.

வீதிகளில் நிறைகின்ற அழகுகளில்
கண்களும் மனமும் சருகாய் அலைய
நான் மட்டும் வேறாகி

கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு.

கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்


( ஒரு மீள் பதிவு,,,, ஏதாவது கிறுக்கலாம் எனும் ஆசையுடன் )