Posts

Showing posts from March, 2012

மூங்கிலால் செய்த பரண்கள்..

எப்போதும் போல் இன்னும் நிறைகின்றது பரணின் மீதான பாரங்கள். இறக்கி வைக்கும் ஒன்றினை தாண்டி, ஏறும் எண்ணிக்கை மடங்காகி போக. எப்போதும் அது தன்னை கிள்ளிக் கொள்ளும் எப்போதும் அது சிரித்துக் கொள்ளும் இன்னும் உடையாமல் இருப்பதை எண்ணி. பாரங்கள் பற்றிய கவலைகள் ஒரு போதும் தீண்டாதிருக்க, கனவுகளோடு பேசிக்கொள்ளும்.
கனதி தாங்கி வளையும் பரண்கள் இன்னும் சுமப்பதையே சிந்திக்கின்றன. உடைகின்ற வலிமை அதற்கில்லை என்ற, பாரங்களின் நம்பிக்கை ஒரு போதும் பொய்ப்பதில்லை. மூங்கிலாய் மாறுகின்ற பரண்களை எப்போதும் அவன் சுமப்பவர்களுக்கே தருகின்றான்.
அனைத்துக்கும் நன்றி அவனுக்கும், அது சுமக்கும் சுமைகளுக்கும்.






நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி!!! கேள்விகள் இதோ!

Image
நம்மவர்களுக்கு ஒலக அறிவு மத்த அறிவு என என்னென்ன அறிவு இருக்கோ எல்லா அறிவையும் தட்டி கொட்டி கொட்டி தொறந்து பார்க்க நம்ம சூர்யா குதிச்சிருக்காரு. என்னா கேள்வி!! என்னா கேள்வி!! ச்சும்மா பார்க்கும் போதே புல்லரிக்குதே!
இனி ஒவ்வொரு தமிழனும் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தோடதான் உலாவ வரும் போல கிடக்கு. என்னவோ போடா மாதவா!!!!
ஆரம்பிக்கும் போது கொடுத்த பில்டப்பு எல்லாம் டப்புக்குத்தான்னு இப்பதானே புரியுது. பைசாதான் மேட்டர் னாலும் அதுக்கு இப்படியா மொளகா அரைக்கிறது?
இது இன்னொரு வகையில் சூர்யாவின் மீது இருக்கின்ற அபிமானத்தை குறைத்துவிடுமோ என்றும் அஞ்சக்கிடக்கின்றது. “சிகரம்அறக்கட்டளை” அது இது என ஒரு மாற்று பிம்பம் சூர்யா பற்றி இருக்கும் என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு. இந்நிகழ்ச்சி கொஞ்சம் அல்ல நிறைய அதிர்ச்சிதான்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – கவனமா கீழே உள்ள கேள்விகளைப் பார்த்து, விடைகளை சரியா தயார் பண்ணிக்கோங்கோ மக்கள்ஸ், விடை தெரியாட்டி, பக்கத்துல இருக்கிற லைப்ரரி/ வெப்சைட்/ என தேவையான எல்லா வளங்களையும் பயன்படுத்த தயங்க வேண்டாம். வாழ்த்துக்கள் இனி ஒரு கேடி.. சே!! Sorry… கோடி உங்களுக்குத்தான். …