Wednesday, June 30, 2010

ஒர் பிறந்த நாளுக்காய்.....................

இது காலம் கடந்ததாக இல்லை.
இன்னும் நான்,
உன் பிறந்த நாளில் குடியிருக்கிறேன்.

ஒர் நினைவின் தொல்லை
இன்னும் என்னுள் அவஸ்தையாகி
உன் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களை
எனக்குள் ஒவ்வொரு நாட்களும் விதைத்து விடுகின்றன.




சும்மா சிரிக்க.............

1) “ செய்... அல்லது செத்துமடி... ” ---- நேதாஜி..
“ படி.. அல்லது பன்னி மேய்... ” --- எங்க பிதாஜி.... 




2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கமுடியவில்லையோ

அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்... 





3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 




4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டுஇருப்பியே...

இப்ப பாரு... அவ 470 மார்க்... நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா.... நீ +2 படிக்கிரடா

 


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம் ? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்.... 



6) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
( ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....) 





7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம் ’ க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற ?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா .. 





8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்....
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “ செல் ” லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா... ? 





9) லவ் லட்டருக்கும் , எக்ஸாம் ’ க்கும் என்ன வித்தியாசம் ?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி ? 




10) கணவன்: காலெண்டர் ’ ல என்னப் பாக்குற ?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது ?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல... 





11) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்மஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர்சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில்நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.... ? 





12) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போதுதூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்கமுயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்துநீந்தி சென்று படிக்கிறார்...
“ இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம். ” 





13) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக்எப்படி இருக்கும் ?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில் ’ லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++ 




14) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.( Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க ? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
__________________

Tuesday, June 29, 2010

கடைக்காரர் பாடு முடியல.....

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,

5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். கடைக்காரர் கடைதட்டியில் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் போத்தலை மிக சிரமப்பட்டு கதிரை மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு போத்தலை வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல.........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் போத்தலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், எனற நிம்மதியுடன், மிட்டாய் போத்தலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..

கடைக்காரர் பாடு
_______________

இயந்திரமாய்ப்போன பழங்கள்

உலகம் இயந்திரமாக மாறவில்லை - ஆப்பிளும் , ப்ளக் பெர்ரியும் பழங்களாக மட்டும் இருந்தவரை….



Monday, June 28, 2010

நான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா!!!!!

இன்று காலையில் செய்திப்பக்கங்களினை இணையத்தில் மேயும் போது ஒரு சுவாரசியமான செய்தி. ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டு இணையத்தில் வெளியானது பற்றி இருந்தது. அட! என எண்ணிக்கொண்டே ச்சும்மா கூகிளினை தட்டினேன். இதோ ஐஸ்வர்யாவின் கடவுச்சீட்டு என் முன்னால். 

ஆஹா, இத நம்ம வலைப்பூவில் பதிவேற்றினா சூப்பரா இருக்குமே என்ற அவாவில் அப்போது மனதில் தோன்றிய தலைப்புடன். ( தேவதைகளுக்கும் பாஸ் போட் இருக்குமா?) பதிவேற்றினால்.. விளைவுகள் வேற மாதிரி போய்க்கொண்டிருந்தது.
சைபர் கிரைம்… இத ஏன் செஞ்ச்சீங்க? அது இது என பல பல பக்கங்களில் இருந்தும் அம்புகள் – அன்பின் காரணமாக.. இதுல கோவி. கண்ணன் இப்பிடி எல்லாம் மனுசர் பயப்படுத்துகிறார்.

கோவி.கண்ணன்
ஏற்கனவே அவங்க சைபர் க்ரைமில் விண்ணப்பம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்காங்க. இந்த நிலையில் நீங்கள் அவர்களின் கடவு சீட்டை வலையேற்றுவது உங்களுக்கு சட்டப் சிக்கலை ஏற்படுத்தலாம். அடுத்தவர்கள் வெளி இட விரும்பாத தகவல்களை கிடைத்ததே என்பதற்காக வெளி இடுவது நாகரீகம் இல்லை. “

யப்பா! ஆளவிடுங்கடா சாமிகளா! நாமக்கெல்லாம் தமிழ்லயெ பிடிக்காத ஒரே வார்த்தை – கிரைம்தான்.. அதுலயும் இது சைபர் கிரைமாம். காலைலிலேயே வயிற்றுக்குள்ள கொஞ்சம் புளி கரைத்தது. வேலியில போற ஓணான எடுத்து வேட்டிக்க உட்ட கதையா போயிருமோ என்று பயம் வேற.. இதுல, சைபர் கிரைம் பொலீஸ் நம்மள கைது செய்து கொண்டு போற மாதிரியும், பேப்பர்களில், “ ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டினை தனது வலைத்தளத்தில் பதிவேற்றிய அழகிய ( ???? ) இளம் (!@#@!??) வாலிபர் கைது “ என செய்திகள் வருவது போலவும் கற்பனைகள் வேறு.

எதுக்கு இத்தன வம்புகளும், அப்பதிவினை அழித்துவிட்டேன். 

ஆனாலும் கூகிளில் , Aishwarya passport” சேர்ச்சினால், அப்பிரதிகள், பல்வேறு வடிவங்களில் தரங்களில் கொட்டுகின்றன. அப்படியானால் அதை எல்லாம் எப்பிடி தடுப்பார்கள். அவர்களுக்கும் சட்டச்சிக்கல்கள் வருமா?

ஆனா, நான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா!!!!!!

Sunday, June 27, 2010

நான்தான்…… நான்தான்…….. ஏமாந்த சோணகிரி………

காலையில் அலாரம் அலறும் போது ஆரம்பிக்கும் வெறுப்பினை, எனது மனேஜரின் மீதான வசை பாடலுடன் ஆரம்பித்துவிடுவேன் ஏதோ பள்ளி எழுச்சி போல.. 

அவர் ஒன்றும் அப்படி மோசமில்லை என்பது போல்த்தான் தோன்றும்.. ஆள் எமகாதகன்.. கொடுத்த வேலையினை சரியாக முடிக்கும் வரை விடமாட்டார் அதன் தீவிரம் கோப்புக்களின் வரிசைக்கிரமம் வரை தொடரும். அதனால் அதிகம் அழுவது (வடிவேலுவைப்போல்….. அவ்…… முடியல..) நானாகத்தான் இருக்கும். 

அன்று வியாழக்கிழமை என்பதால் எல்லோரும் சுறுசுருப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். வேறொன்றுமில்லை நாளை வெள்ளி அல்லவா…….. அதுதான்அவசர அவசரமாக வேலைகளினை முடித்து விட்டு மதியத்துடன் ஓடிவிடும் பரபரப்பு எல்லோர் முகத்திலும் ஒவ்வொரு வியாழனும் காணப்படும். ஆனால் அதிலும் ஒரு பரிதாபம் என்னவென்றால் நிதிப்பிரிவு மட்டும் இதற்கு விதிவிலக்கு ( மீண்டும் ஒரு …….. அவ்…………….) 

எல்லாம் அந்த நாசமத்துப்போவான் படுத்திற பாடு 

வேற என்ன செய்ய? சத்தம் வரமால் திட்ட வேண்டியதுதான். 

இந்த வியாழன் படம் பார்க்க திட்டம் எல்லாம் தீட்டி டிக்கட் ரிசர்வ் செய்துவிட்டு நண்பர்களினை தயாராக இருக்க சொல்லிவிட்டு வேறு வந்துள்ளேன். இப்போது எப்படி நழுவுவது.. என்ன சொல்லிவிட்டு நழுவலாம்? என்று பலவகையில் யோசித்தாலும் ஒன்றும் தட்டுப்படவில்லை.( பல ஐடியாக்கள் இருந்தாலும், எல்லாம் ஏற்கனவே பயன்படுத்தியாச்சே……… மீண்டும் ஒரு அவ்…………………..) 

நீண்ட யோசனையினை தொலைபேசி மணி கலைத்தது. அவர்தான்.
அவரது கேபினுக்கு அழைக்கிறார். சரி முடிந்தது இன்றைக்கும் 7 மணிதான் என எண்ணிகொண்டே உள்ளே நுழைந்தேன்.

மனிசன் வேலையில் மூழ்கி இருந்தார். நான் வந்ததையும் கவனிக்கவில்லை.

எஸ் மிஸ்டர் அலா..என்ற என் குரல் கேட்டே நிமிர்ந்தார்.

ஓ சொறி..என்றவாறு என் பக்கம் திரும்பினார்.

இப்போது எதுவும் முடிக்க வேண்டிய வேலைகள் உமக்கு உண்டா?” என்ற அவரது கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மையமாக தலையசைத்தேன். 

சரி இன்று எனக்கு இரு பங்க்சனுக்கான அழைப்பு வந்துள்ளது. இரண்டிலும் கலந்து கொள்ள எனக்கு நேரமில்லை.. எனவே, ஒன்றில் என் சார்பாக நீங்கள் கலந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே ஏற்பாட்டாளர்களிடம் அறிவித்துவிட்டேன். இதில் உமக்கு ஏதும் தடங்கல் உண்டா?” 
எல்லாத்தையும் முடிவு செஞ்சு போட்டு எனக்கு தடங்கல் உண்டா எனக்கேட்டால் நான் என்ன செய்வது??

இல்லை மிஸ்டர்……” 

சரி மகிழ்ச்சி.. இதோ அழைப்பிதழ், நீங்கள் விரும்பினால், இன்று நேரத்துடன் வீடு செல்லலாம் 

அடப்பாவி…. விரும்பினாலா?????? அதுமட்டும்தாண்டா விருப்பம்
இன்றைக்கு அந்த மனுசண்ட வேலை என்பதால் நேரத்துடன் செல்ல அனுமதி………. 
ம்ம்ம்…..

படம் பார்க்க தயாராக இருந்த நண்பர்களின் முகம் இடையில் வந்து வயிற்றில் புளியயை கரைத்தது. ப்ரோகிராம் மாற்றம் எண்டா கூடி நிண்டு கும்மி அடிப்பானுகளே.. என்ற கவலை. 

முன்பே ஒரு ப்ரோகிராம் அரேஞ்ச் பண்ணினா அதனை சொதப்பி வேறு ஒன்றாக்குவதில் நான்தான் முதலிடம் என்ற நல்ல???? பெயர் வேறு எனக்கு. இதுல இன்னும் ஒரு மகுடம்?? வேறு என்ன செய்வது…… என்ற யோசனையுடன் கையில் இருந்த அழைப்பிதழினை ஏதேச்சையாக பார்த்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி……
அட துபாயில் ஒரு பெரிய ஹோட்டலில் நிகழ்ச்சி என்றும் அதில் ஒரு அழைப்பிதழுடன் இரு நபர்கள் அனுமதி என்றும் போட்டிருந்தது.. 
அப்பாடாஇவனுகளிடம் இருந்து தப்பிக்க நல்ல வாய்ப்பு

படம் எப்பவும் பாத்துக்கலாம் இது ஒரு நாளும் கிடைக்காது.. அந்த ஹோட்டலுக்குள்ள போற சான்ஸ் போகலாம் அது இது என் பில்டப் கொடுத்து ஆக்கள அமைதிப்படுத்தி கூட்டிக்கி போக வேண்டியதுதான். என்ற திட்டம் மனதில் ஒரு உற்சாகத்தினை கொடுக்க வேகமாய் வீடு நோக்கி செல்லலானேன்.

அறைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே நண்பர்களின் சத்தமும் சிரிப்பொலியும் நாளைய விடுமுறையினை உறுதிப்படுத்தியது. அந்த ஒரு நாளுக்காகத்தானே மீதி நாட்கள் வாழ்வதே

என்னைக் கண்டதும் .. எல்லோரும் வினோதமாக விளித்தனர்புரிந்துவிட்டது.. 

இன்னைக்கு என்னடா நேரத்தோட?????????? ஓபிசில் பவர் கட்டா??” என்று சத்தமாக ஒருவன் சிரிக்கவும் மற்றவர்களும் இணைந்து கொண்டனர். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்றது

சரி என்ன ப்றோகிறாம்?” என்று சொல்லி வாயினை மூடு முன் எங்கிருந்தோ ஒரு புத்தகம் தலையினை சீவிக்கொண்டு சென்றது. 

“ …
தணிக்கை வசனங்கள்……… படம் பார்க்க எல்லாம் ரெடி பண்ணிட்டு இப்ப என்ன ப்றோகிறாமா? … தணிக்கை வசனங்கள்……… “ என்றவாறு கொலை வெறியுடன் நிற்கும் அவனை பார்த்ததும் பீதி மீண்டும் பீடித்துக்கொண்டது

சற்று சுதாரித்துக்கொண்டே ….. எப்படி ஆரம்பிப்பது என்ற எண்ணத்துடன்.. எனது அகிம்சாவாதி நண்பனை நோக்கி திரும்ம்பினேன்.. ( மற்றவனுங்க அடிச்சே காலி பண்ணிடுவானுகள்…….. அவ்…. ) 

அதில்லடா றிசாட்………. படம் எப்பவும் பார்த்துக்கலாம்……….” 
என்று இழுத்தவுடன் புரிந்துவிட்டது அவர்களுக்கு………. வண்டி வண்டியாக வசவுகள் குவியத்தொடங்கி விட்டன…….. 

காப்பாற்றுடா……. என கண்களால் அவனை கெஞ்ச தொடங்கி விட்டேன்……… 

எப்படியோ ஆசுவாசப்படுத்தி விசயத்தை சொன்னவுடன்……. போட்ட பிளான் 
நிறைவெறவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் அந்த ஆடம்பர ஹோட்டலுக்கு செல்லப்போகின்றோம் என்ற ஆர்வம் அவர்களின் முகங்களில் மின்னியது.

டேய் உண்மையா அங்கதானா?????” என்றான். என்னை சற்று முன்பு வரை , என்கு குத்தினால் எனக்கு வலிக்கும் என யோசித்துக்கொண்டிருந்த என் நண்பன். ஆஹா சிக்கிச்சிடா சிறுத்த என மனசுக்குள்ள சத்தமாக சிரித்துக்கொண்டே,,

ஓம்டா அதான்….” என்றேன்.. திருப்தியாக தலையாட்டிக்கொண்டான்.

இப்போது எங்கள் மூவருக்கும் படம் பார்க்கும் பிளான் இருந்தாக ஞாபகமே இல்லை. அந்த ஹோட்டலுக்கு செல்லும் ஆர்வமே மேலோங்கிக்காணப்பட்டது..

விருந்துக்கு செல்வதற்கான ஆயத்தப்பணிகள் மும்மூரமாக தொடங்கப்பட்டன.
அத என்னத்த சொல்றது…………… எப்படியோ 8 மணிக்கெல்லாம் தயாரகிவிட்டோம்.

இப்போது அடுத்த பிரச்சினை தொடங்கியது

அடுத்த நாள் விடுமுறை என்பதால், வீதிகள் வாகன நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது. 9 மணிக்கு நிகழ்ச்சி என்பதால் எப்படியாவது போய்ச்செரவேண்டும் இருக்கும் நேரத்திற்குப்புறப்பட்டால்தான் சரியான நேரத்திற்கு போய்ச்சேரலாம். 

ஒரு டாக்சியும் நிற்பது போல் தெரியவில்லை. வீதியில் அரைமணிநேரம் செலவாகிவிட்டது. 

எப்படியாவது போய்ச்செரவேண்டும் என்ற பதைபதைப்பு மூவரையும் பீடித்துக்கொண்டது. 

திடிரென ஹிஸ்டீரியா வந்தது போல தலையாட்டி ஒரு லுக் விட்டான். சமீர். “ இன்னைக்கு நடந்தாவது போற வா போவம்” என்றவாறு எங்கள் பதிலினை எதிர்பார்க்காமல் நடக்கத்தொடங்கினான். அவ்ன் கொஞ்சம் உடல் வாகானவன் அதனால் வேகமாக நடக்கத்தொடங்கி விட்டான். ஆனால் எனக்கோ, றிசாட்டுக்கோ கொஞ்சம் உடம்பு ( ??? ) அதனால், அவனது நடைக்கு ஈடு கொடுக்க நாங்கள் ஓட வேண்டியதாயிற்று.

ஒருவாறாக , நாக்குத்தள்ள தள்ள ஹோட்டலினை அடைந்தோம். மணி 9.30. இதற்குள் நிகழ்ழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து பல தடவைகள் அழைப்புகள். நிகழ்வு மற்றும் உபசரிப்புப் பற்றி பல எதிர்பார்ப்புகளினை கூட்டிவிட்டது.

ஒரு பிரமிப்புடன் உள்ளே நுழைந்தோம்.. ( ஊரில் சொல்லுவாங்க……… பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிறது போல.) 

அழைப்பிதழினை காண்பித்ததும் கிடைத்த வரவேற்பு ஒரு கணம்,, மகாராஜாக்கள் போல உணர வைத்தது.

ஒரு பிரமாண்டமான ஹோலினுள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் ஒரு ஓரத்தில் அமர்த்தப்பட்டோம்.. இன்னும் பட்டிக்காடான் மிட்டாய் கடை முடியவில்லை 

ஹல்லோ வெல்கம்’’… என்ற கம்பீர வார்த்தைகள் எங்களை உலகுக்கு கொண்டு வந்தது..

சிரித்த முகத்துடன் ஒரு அரபிஅனேகமாக லெபனாக இருக்க வேண்டும்..
கையிலிருந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்துவிட்டு.. 

வாருங்கள்.. இன்று நீங்கள் எங்களின் விருந்தாளிகள்..என்றார் புன்முறுவலுடன்.. 
எனக்கு பெருமை பிடிபடவில்லை.. நண்பர்களினை பெருமையுடன் நோக்கினேன்…. ( பின்னுக்கு இருக்கும் ஆப்பு தெரியாமல்..)

அவர் முன்னே செல்ல அவரினை பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தோம்.. மெல்லிய இசையில் அவ்விடம் மூழ்கிக்கொண்டிருந்ததுஅறை முழுவதும் 5 பேர் அமரக்கூடிய வாறு மேசைகள் ஒழுங்குப்டுத்தப்பட்டிருந்தன.. அவற்றீல் அதிகமானவை நிரம்பி இருந்தன.

எங்களினை கூட்டிச்சென்ற நபர்.. காலியாக இருந்த மேசையினை நோக்கி சென்றார்
ஆஹா சாப்பாடு ரெடிடா மச்சான் அப்படியே அடிச்சிட்டு மாறுவம் எடத்தப்புடிஎன்று காதில் கிசுகிசுத்தவாறே உட்கார்ந்து கொண்டான் றிஸாட்..
சம்பிராதாய குசல விசாரிப்புகள்,, என ஒரு பதினைந்து நிமிடங்கள் கரைந்தன.. அதற்குள் 20 முறை புffஎற் கவ்ண்டர காணல்லயே!!! என்ற சந்தேகத்தினை முதலில் வந்து இடம்பிடித்த நண்பன் கேட்டுக்கொண்டே இருந்தான்.. 

அப்பாடா…. ட்ரிங்க்ஸ் வந்துவிட்டது.. மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுமூன்றே மிடரில் காலி செய்துவிட்டு காலி கோப்பயினை பார்த்துக்கொண்டோம்.. ஆனாலும் இதை எதுவும் கவனியாது ஏதோ பைலினை நோண்டிக்கொண்டிருந்தார் வந்தவர்.

தொண்டையினை செருமிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தார்இப்போது அவரது ஆரம்பம் ஒரு செயற்கை தனத்துடன் தொடங்கியதாக எனக்கு அப்போது பட்டது.. 

நண்பர்களே, இந்த ஒன்று கூடலின் நோக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார்..

அந்த இழவெல்லாம் எமக்கென்னத்துக்கு…. ஓசியில கெடச்சத எஞ்சாய் பண்ணா வந்தா ரொம்ப அறுப்பான் போலிருக்கே…” என்று எண்ணிக்கொண்டேன்.. 

என் நண்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்???????? திரும்பிப்பார்த்தால்…. எக்ஸாம் ஹோலில் முதல் 10 நிமிஸம் எப்பிடி இருப்பானுகளோ அப்படியே என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. 
அவருக்கு புரிந்துவிட்டது.. 

நண்பர்களே, இது ஒரு சர்வதேச முகவர் நிலையம், நாங்கள் புதிதாக இங்கு எங்களது கிளையினை திறக்கும் முகமாக, இந்நிகழ்வினை நடத்துகின்றோம், இது முடிந்ததும் உங்களுக்கு ஒரு பரிசும் காத்திருக்கின்றது.என்றதும் எங்களது முகங்கள் பிரகாசிக்கத்தொடங்கின

பரிசு…..!!!!!!!!!!!

பின்பு தொடங்கியது அந்நபரின் சொற்பொழிவு (அத வேற எப்படி சொல்றது என்று 
எனக்கு தெரியவில்லை) அவர்களின் நிறுவனம் நிறுவனத்தின் விபரங்கள்.. என இன்னும் பல விடயங்கள் ஒரு 40 நிமிடங்களினை விழுங்கியதுஎனது நண்பர்களுக்கு சூடு ஏறிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. 

பக்கத்திலிருந்து கொண்டு அடிக்கடி எனது காலினை எவ்வளவு முடியுமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழுத்த்த்த்த்த்த்த்த்திக்கொண்டிருந்தான்.. அவ்……………..

மேட்டருக்கு வாயெண்டா என்று கெஞ்சாத குறையாக கண்களால் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தோம். 

சரி விடயத்திர்கு வருகின்றேன் 

அப்பாடா!!!!! முடிச்சிருவான்.. இனி சாப்பிட இன்வைற் பண்ணுவானுகள்..
அதான் இல்லை..

நண்பர்களே, இங்கு நாங்கள் எங்களது நிறுவனப்பணிகளினை ஆரம்ப்பிப்பதால் நாங்கள் ஒரு பிரயாணப்பொதியினை மலிவான விலைக்கழிவுடன் வழங்குகின்றோம், நீங்கள் அதனை பெற விரும்புகின்றீர்களா? அல்லது அதனைப்பற்றி அறிய விரும்ம்புகின்றீர்களா?”

என்றபோதுதான் விளங்கியது.. எதுக்கு இவ்வளவு நேரமும் இத்தன ததிங்கிணத்தோம் என்று…..

எனது மறு பக்கத்தில் உஸ்ணம் தாங்க முடியவில்லை.. 

ஏண்டா இப்படி என்ன சோதிக்கிற கடவுளே……… அவ்வ்………

மன்னிக்க வேண்டும்,, நாங்கள் அதற்கு தயாரக வரவில்லை,, அது பற்றி எமக்கு அறிவிக்கப்படவில்லை.. வெகு சீக்கிரத்தில் அது தொடர்பாக நாங்கள் உங்களினை தொடர்பு கொள்கின்றோம்என்றேன்அவசரமாக் முடித்துக்கொள்ளும் நோக்கில்
அந்நபர் புன்னகையுடன் தோள்களினை தூக்கிவிட்டுக்கொண்டார்.. அப்பாடா முடிச்சிட்டாண்டா 

இதற்குள் ஒரு மணித்தியாலம் கரைந்து போய்விட்டது.

பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்துவிட்டதுஎப்படா? டின்னருக்கு கூப்பிடுவான் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது தெளிவாக முகங்களில் தெரிந்தது,,

அவர் எழுந்து கொண்டார், 

சிரித்த முகத்துடன், “ உங்களது இனிய மாலைப்பொழுதினை எங்கழுடன் பகிர்ந்தமைக்காக மிக்க நன்றிகள். எங்களது நிறுவனம் உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய காத்திருக்கின்றது. மீண்டும் உங்களினை சந்திக்க நாம் ஆவலாக உள்ளோம். நன்றிகள்….”

அடப்பாவிகளா!!!!!!!!!!! முடிச்சிட்டான்யா!!!!!!!!!!! 

போகச்சொல்றான் என்பது என்னைவிட என்நண்பர்களுக்கு கொஞ்சம் தாமதமாகப்புரிந்து என்னை நோக்கி திரும்பும் போது,, நான் வாசலை நோக்கி ஓடமும் நடையுமாக சென்று கொண்டிருந்தேன்…. என் மனேஜரினை திட்டிக்கொண்டே

அன்றிரவு மட்டும் எனக்கு விடியவில்லை.. வீட்டிற்கு வந்ததும் எனக்கு மட்டும் 

தனிக்கச்சேரி நடந்தது தனிக்கதை…. அவ் ………….. முடியல

அதோட விட்டானுகளா? இதுவரைக்கும் இதச்சொல்லியே என்ன கேலி பண்ணிக்கொண்டிருக்கானுகள்..




Thursday, June 24, 2010

கவியரசனின் ஜனன தினம் இன்று.


சிறுகூடல் பட்டியில் சாத்தப்பன் விசாலாட்சி தம்பதி பெற்றெடுத்த தமிழ் முத்தையா அவன் முத்தையா. பின்னர் கண்ணதாசனாகி கவியரசனாகி, இன்னும் தமிழ் மனங்களில் நிறைந்து நிற்கும் அம்மார்க்கண்டேயனுக்கு இன்று 83 வது பிறந்த தினம்.

“ கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.. “ என்ற கட்டியத்துடன் ஆரம்பித்த கவியரசரின் திரையிசை வாழ்க்கை. அதிலிருந்து கொஞ்சமும் பிசகவில்லை. இன்னும் எத்தனையோ ரசிகர்களினை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும், அவரின் பாடல்கள் பற்றி அவர் அறிந்ததால்தானோ என்னவோ,

“ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.” என பாடிச்சென்றான்.

இலகுவான வார்த்தைகளில் ஆழமான தத்துவ விசாரங்களினை படைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். அதுதான் அவரை உழைப்பாளி வர்க்கத்திற்கும் கொண்டு சேர்த்தது.

“பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு,
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால்-
அவன்தான் இறைவன்.” 
என்ற பாடலின் நெடுநாளைய காதலன் நான். எவ்வளவு எளிமையான வரிகள்! ஆனால் அதன் அர்த்தங்கள். எதையெல்லாம் தொட்டு நிற்கின்றன.

சொல்ல சொல்ல இனிக்கும் பாடல்களும் சுவாரசியங்களும் நிறைந்த ஒரு புதையல் அவர். எப்போதும் அவரின் பிறந்த நாளினையே நான் கொண்டாடுகின்றேன். அவரின் மறைவு பற்றி எனக்கு தெரியாது.

“ படைப்பதனால் என் பெயர் இறைவன்” என பிரகடனம் செய்தவன் அவன்.

அந்நிரந்தரமானவனுக்கு, இந்த ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Tuesday, June 22, 2010

என் மறதிகள் வளரும் காலங்களில்

என் மறதிகள் வளரும் காலங்களில்
எப்போதும் போல்
உன்னிடமிருந்து ஓர் அழைப்பு வரும்
ஓர் கத்தி போல
என் மறதிகளை அறுவடை செய்ய.



சும்மா கிறுக்கியவைகள்

கனவுகளே!
தள்ளிச் செல்லுங்கள்
என் குழந்தை தூங்குகின்றது.

#################################################################################

இன்னும்
எனக்குள் பெயர்க்குழப்பங்கள்
நானொரு –
முன்னாள் காதலன்,
இந்நாள் கணவன்.

#################################################################################

என் நினைவுகள் 
ஊருகின்றன
நெடுஞ்சாலையில் 
ஓர் நத்தை போல..

#################################################################################

உன் கண்களின் மீது
சத்தியம் செய்கின்றேன்
இப்போதும்
வலியுடனே வாழ்கின்றேன்.

##################################################################################


Sunday, June 20, 2010

மீண்டும் தொடங்கிற்று

உன் ஞாபகக் காயங்கள் ஆறிப்போகும் காலங்களில்
ஓர் இலையான் போல
உன் தொலைபேசி அழைப்புகள்
என் மனசின் காயங்களை சுரண்ட..


மீண்டும் தொடங்கிற்று
மறதிக்கும் உன் ஞாபகங்களிற்குமிடையிலான சண்டை.


என்றோ மறந்த,
உன் புன்னகைகள்
உன் முத்தங்கள்
அடிக்கடி சந்திக்கும் அப்பூமரம்
கல்லூரி வாசிகசாலை
என எல்லாம்
தூசு தட்டப்படுகின்றன.
உன் அழைப்பினால்.


முடிகின்ற உறவில்
இன்னும் நீ முற்றுப்புள்ளி இடவில்லையா?
அழுது கொண்டு
நீ சொன்ன ஓர் மழை நாள் கூட
இன்று போல் உள்ளது.

யூனிவர்சிட்டி போன முதல் நாள்

போறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு..... 

அப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம். பாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான்.

பாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான்? இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்? என்ற என் ஈனக்குரலுக்கு, திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.

ஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....

பல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள் வருமுன் அனுப்பமாட்டானா என நேர ஆரம்பிக்கும் போது எல்லாம் முடிந்து விட்டது. கிட்ட வந்துட்டானுகள். இனி ஒண்டும் நடக்காது. சலாம் வரிசைதான் என எண்ணி திரும்பினால்.................

அட! நம்ம ஜாதி...... சே! அப்பாடா!...ம்...போடாங்.... மனசுக்குள் ஆயிரம் பீலிங்க்ஸ் ஓடி மறைந்தது..
நீங்களும் பெஸ்ட் இயரா? நாங்களும்தான்.. உள்ள தனிய போக பயமா இருக்கு அதான் உங்கள கூப்பிட வந்தம்.. என்றான் வந்தவர்களில் ஒருவன் ( அவன்தான் சம்மாந்துறை சறூக்- பிற்காலங்களில் எனது வலது கை இடது கை. எல்லாம். பிற்காலங்களில் கென்ரீனில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் அவனை கொறிப்போம்)

அஸ்கரினை பார்த்தேன்.... தற்காலிக நிம்மதி .........

பக்கத்தில் இருந்த ஆட்டோவினை வாடகைக்கு அமர்த்தி உள்ளே போனோம்.
__________________

என் முதல் பிரமிப்பு நீதான் அப்பா

உனக்கு என் அக்காள்கள் வைத்த பெயர்-
அவனின் புகார் பெட்டி.
இன்றுவரையிலுந்தான்.

அம்மா சொல்வாள்
இப்பவும் குழந்தைப்பிள்ளையா அவன் என...
நீ சிரிப்பாய்.
அப்போது உன் கண்ணில் மின்னும் ஒளி 
இன்றுதான் அதன் அர்த்தம் புரிகிறது.

எல்லோருக்கும் சம பங்கு
என்னைத் தவிர..
உன்னதும் எனக்குத்தானே...

கண்டிப்பான கணக்கு வாத்தியார்- பள்ளியிலே
ஆனால் எனக்கும்..
நீ ஆசான் தான்
எத்தனை பாடங்கள் உன்னிடமிருந்து கற்றேன்?

உன் கைகள் தலையணையாகி,
உன் அருகில் தூங்கிய நாட்கள்

எப்போதாவது அடித்துவிட்டு,
இரவு முழுதும்
தூக்கம் மறந்து முற்றத்தில் உலவுவாய்..
அதன் பின்னும் 
என் கோபம் மறைய நீ செய்யும் பிரயத்தனங்கள்.

என் முதல் பிரமிப்பு நீதான் அப்பா
உனக்கான உன்னதங்களில்
நான் பொக்கிழம்.
எனக்கு தெரியும்
உனக்காக நான் செய்வதெல்லாம் ஒரு பிரார்த்தனை
என் இறைவனே!
அவரை என்னோடு இருக்க வை.
என் ஒரே ஒரு தோழனையும் என்னிடமிருந்து எடுத்துவிடாதே
__________________