Thursday, June 24, 2010

கவியரசனின் ஜனன தினம் இன்று.


சிறுகூடல் பட்டியில் சாத்தப்பன் விசாலாட்சி தம்பதி பெற்றெடுத்த தமிழ் முத்தையா அவன் முத்தையா. பின்னர் கண்ணதாசனாகி கவியரசனாகி, இன்னும் தமிழ் மனங்களில் நிறைந்து நிற்கும் அம்மார்க்கண்டேயனுக்கு இன்று 83 வது பிறந்த தினம்.

“ கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.. “ என்ற கட்டியத்துடன் ஆரம்பித்த கவியரசரின் திரையிசை வாழ்க்கை. அதிலிருந்து கொஞ்சமும் பிசகவில்லை. இன்னும் எத்தனையோ ரசிகர்களினை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும், அவரின் பாடல்கள் பற்றி அவர் அறிந்ததால்தானோ என்னவோ,

“ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.” என பாடிச்சென்றான்.

இலகுவான வார்த்தைகளில் ஆழமான தத்துவ விசாரங்களினை படைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். அதுதான் அவரை உழைப்பாளி வர்க்கத்திற்கும் கொண்டு சேர்த்தது.

“பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு,
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால்-
அவன்தான் இறைவன்.” 
என்ற பாடலின் நெடுநாளைய காதலன் நான். எவ்வளவு எளிமையான வரிகள்! ஆனால் அதன் அர்த்தங்கள். எதையெல்லாம் தொட்டு நிற்கின்றன.

சொல்ல சொல்ல இனிக்கும் பாடல்களும் சுவாரசியங்களும் நிறைந்த ஒரு புதையல் அவர். எப்போதும் அவரின் பிறந்த நாளினையே நான் கொண்டாடுகின்றேன். அவரின் மறைவு பற்றி எனக்கு தெரியாது.

“ படைப்பதனால் என் பெயர் இறைவன்” என பிரகடனம் செய்தவன் அவன்.

அந்நிரந்தரமானவனுக்கு, இந்த ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


2 comments:

அன்புடன் நான் said...

கவியரசரின் பிறந்த தின வாழ்த்துக்கள்.

Unknown said...

நண்பா கண்ணதாசன் பிறந்தது எந்த இடம் என்பது நீங்கள ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு வேண்டும் என்றால் வரலாறு தரவா நண்பா ? இதோ. தமிழ் நீங்கள்தான் முதலில் கண்டுபிடித்த மாதிரி எழுத வேண்டாம் நண்பா பிறப்பு முத்தையா
ஜூன் 24 1927
சிறுகூடல்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு அக்டோபர் 17 1981 (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியர்
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்) சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்) பொன்னழகி
பார்வதி
ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர் பிள்ளைகள் 13 . திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம் இது போதுமா? இன்னும் வேண்டுமா?