Saturday, June 05, 2010

சுஜாதா : தமிழில் தவிர்க்க முடியா ஆளுமை

சில வாரங்களிற்கு முன் ஆன்ந்தவிகடனில், சுஜாதா 25 என சுஜாதா பற்றிய சுவாரசியமான குறிப்புகள் 25 னை பிரசுரித்திருந்தனர். சுஜாதாவின் கணேஸ் வசந்த் பற்றி, அவரது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பற்றி , இன்னும் பல சுவாரசியமான சுஜாதா பற்றிய விடயங்கள்.. அந்த மெக்சிகோகாரி ஜோக் பற்றியும் இருந்தது.

சுஜாதா.. வசீகரமான எழுத்தாளர். எனக்கு அவரது கணேஸ் வசந்தினை மிக்க பிடிக்கும். அது மட்டுமல்லமால். கற்றதும் பெற்றதும்.. ஆன்ந்த விகடனின் முத்தாரங்களில் ஒன்று. சம்பவங்களை சுஜாதா விபரிக்கும் அழகே தனி … அதற்கு அவரது பல படைப்புகள் சான்று. சட்டென எனக்கு நினைவுக்கு வருவது – பேப்பரில் பேர்.. கிரிக்கட் ஆட்டம், அக்கால ஸ்ரீரங்கம், அவரது நண்பர்கள் பற்றிய வர்ணிப்புக்கள் மிக்க சுவாரசியமாக 
இருக்கும்.

விஞ்ஞான விடயங்களினை எல்லோரும் புரியும்படி சுவாரசியமாக சொல்வதிலும் அவர் வல்லவர்.. அதற்கு அவரது, “விஞ்ஞானப் பார்வையிலிருந்து” நூல் ஒரு சான்று. இன்னும் பல நூற்களினை சொல்லலாம்.

சில எழுத்தாளர்கள் எம்மை பாதிப்பதை போல வேறு யாரும் பாதிப்பதில்லை. அவ்வாறே எனக்கு சுஜாதா. அவரது ஒரு சிறுகதை என்னை இன்னும் சிறைப்படுத்தி வைத்துள்ளது. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன் இது ஆன்ந்த விகடனில் வந்திருக்க வேண்டும். கதையின் பெயர் மறந்து விட்டது. ஆனால் அதன் உள்ளடக்கம் இன்னும் என்னுள் உள்ளது. கதை இதுதான் :

“ஒரு இளம் மனைவி காலையில் எழும்பியதிலிருந்து மிக மகிழ்ச்சியாக உணர்கின்றாள். அவளுக்கு பிடித்தமான விடயங்களாக நடக்கின்றன. அன்றிரவு விமானப்பயணம் மேற்கொள்ள இருக்கும் கணவன், அவளை அவளது அம்மாவின் வீட்டுக்கு அழைத்துச்செல்கின்றான். இப்படி அவளிற்கு அன்று திகட்ட திகட்ட மகிழ்ச்சி கிடைக்கின்றது. கணவனை வழி அனுப்பிவிட்டு, அந்த மகிழ்வோடு உறங்கச் செல்கின்றாள். சிறிது நேரம் கழித்து , அவள் வீட்டு தொலைபேசி மணி ஒலிக்கின்றது.”

இதோடு அக்கதை முற்றுப்பெறுகின்றது. ஆனாலும், அத்தொலைபேசியில் அழைப்பில் என்ன செய்தி வந்திருக்கும் என்ற ஆர்வம். அது கெட்ட செய்தியாக இருக்கக்கூடாது எனும் பதைபதைப்பும் இப்போதும் எனக்குள் இன்னும் உண்டு,

இது சுஜாதாவால் மட்டுமே முடியும்..

அவர்.. அவரேதான்.. வேறு யாரும் அவ்விடத்தினை தொடுவது கடினம்…


3 comments:

மதுரை சரவணன் said...

சுஜாதா பற்றி அருமையான பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

வாத்தியாரை பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்... தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத ஆளுமை அவரது எழுத்துக்கள். அவரை படித்தானாலேயெ தமிழ் நம்மோடு இனிமையாக இருக்கிறது..நம்மாலும் வலையில் எதாவது எழுதவும், எல்லாவற்றையும் ரசிக்கவும் முடிகிறது...வாழ்த்துக்கள்..

fathik said...

சுஜாதாவை எனக்கு தெரியாது...அவரின் விபரீதகோட்பாட்டை பார்க்கும் வரைக்கும்.......நண்பனின் அறையில் தற்செயலாக பார்க்க் கிடைத்தது அந்தப்புத்தகம்.........அதில் இருந்து சுஜாதாவில் பைத்தியமாகிஅவரின் அனைத்து செய்திகள்,புத்தகம் என பார்த்து வருகிறேன். நண்பர் கூறியது போல் சுஜாதா தமிழில் தவிர்கமுடியாத ஆளுமைதான்