நான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா!!!!!

இன்று காலையில் செய்திப்பக்கங்களினை இணையத்தில் மேயும் போது ஒரு சுவாரசியமான செய்தி. ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டு இணையத்தில் வெளியானது பற்றி இருந்தது. அட! என எண்ணிக்கொண்டே ச்சும்மா கூகிளினை தட்டினேன். இதோ ஐஸ்வர்யாவின் கடவுச்சீட்டு என் முன்னால். 

ஆஹா, இத நம்ம வலைப்பூவில் பதிவேற்றினா சூப்பரா இருக்குமே என்ற அவாவில் அப்போது மனதில் தோன்றிய தலைப்புடன். ( தேவதைகளுக்கும் பாஸ் போட் இருக்குமா?) பதிவேற்றினால்.. விளைவுகள் வேற மாதிரி போய்க்கொண்டிருந்தது.
சைபர் கிரைம்… இத ஏன் செஞ்ச்சீங்க? அது இது என பல பல பக்கங்களில் இருந்தும் அம்புகள் – அன்பின் காரணமாக.. இதுல கோவி. கண்ணன் இப்பிடி எல்லாம் மனுசர் பயப்படுத்துகிறார்.

கோவி.கண்ணன்
ஏற்கனவே அவங்க சைபர் க்ரைமில் விண்ணப்பம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்காங்க. இந்த நிலையில் நீங்கள் அவர்களின் கடவு சீட்டை வலையேற்றுவது உங்களுக்கு சட்டப் சிக்கலை ஏற்படுத்தலாம். அடுத்தவர்கள் வெளி இட விரும்பாத தகவல்களை கிடைத்ததே என்பதற்காக வெளி இடுவது நாகரீகம் இல்லை. “

யப்பா! ஆளவிடுங்கடா சாமிகளா! நாமக்கெல்லாம் தமிழ்லயெ பிடிக்காத ஒரே வார்த்தை – கிரைம்தான்.. அதுலயும் இது சைபர் கிரைமாம். காலைலிலேயே வயிற்றுக்குள்ள கொஞ்சம் புளி கரைத்தது. வேலியில போற ஓணான எடுத்து வேட்டிக்க உட்ட கதையா போயிருமோ என்று பயம் வேற.. இதுல, சைபர் கிரைம் பொலீஸ் நம்மள கைது செய்து கொண்டு போற மாதிரியும், பேப்பர்களில், “ ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டினை தனது வலைத்தளத்தில் பதிவேற்றிய அழகிய ( ???? ) இளம் (!@#@!??) வாலிபர் கைது “ என செய்திகள் வருவது போலவும் கற்பனைகள் வேறு.

எதுக்கு இத்தன வம்புகளும், அப்பதிவினை அழித்துவிட்டேன். 

ஆனாலும் கூகிளில் , Aishwarya passport” சேர்ச்சினால், அப்பிரதிகள், பல்வேறு வடிவங்களில் தரங்களில் கொட்டுகின்றன. அப்படியானால் அதை எல்லாம் எப்பிடி தடுப்பார்கள். அவர்களுக்கும் சட்டச்சிக்கல்கள் வருமா?

ஆனா, நான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா!!!!!!

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!