

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில்
பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம்
பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி
போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே
என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.
சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக
மலையாளிகளின் உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா
போக முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட் போனா, “
தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….” பாட்டுத்தான் சில
சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால்
பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி
இசையோடு.. அதோட நம்ம பசி பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!
ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு
போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்..
ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து
வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த
வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!
ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா,
எவனாவது கூட படிச்சவன் மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல
எவன் எவள கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட இருக்கிறவன்ட
கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்.ஐயோ முடியல வேற ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை
பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா.. ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து
விருச்சிககாந்த், சாம் அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா,
மச்சான் ஒரு அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு மாமாங்கம்
கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே………………….
இப்பிடி ஒரு நெடிய
லிஸ்ற்றே இருக்குங்க!! என்னா செய்றது. இப்பிடி பொலம்பிக்கிட்டு, இவனுகளோட அட்ஜஸ்ட்
பண்ணிக்கு போக வேண்டியதுதான்.. அவனுகள திருத்தவும் முடியாது. நமக்கும் இத மாற்ற முடியாது…
இதானே வாழ்க்கை….
என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!!!!!!!!!!
14 comments:
நல்லா சொன்னீங்க சகோ…
நீங்கள் சொன்ன காரணங்களை நினைத்து
பல்லை கடித்துக் கொண்டு அனுசரித்து போக வேண்டியிருக்கு
thulithuliyaai.blogspot.com
முதல் 2 மேட்டரும் சூப்பர்...
// நல்லா சொன்னீங்க சகோ…
நீங்கள் சொன்ன காரணங்களை நினைத்து
பல்லை கடித்துக் கொண்டு அனுசரித்து போக வேண்டியிருக்கு //
அதேதான் சகா!! வேற என்னத்த செய்றது??
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.. தொடர்ந்திருங்கள்..
// Mohamed Faaique said...
முதல் 2 மேட்டரும் சூப்பர்.. //
கருத்துக்கு நன்றி சகா..
தொடர்ந்து வாருங்கள்
நீங்கள் பட்டியிலிட்ட எல்லா விஷயங்களும் முற்றிலும் உண்மை. அதிலும் ஸ்கைப் பற்றி சொன்னது டாப். ஆனால், நான் உங்களிடம் கண்டிப்பாக குத்து வாங்குவேன். ஏனென்றால், நான் பேசியே ஆளைக் கொல்லும் ரகம். ஹி..ஹி..
நல்ல பதிப்பு, நன்றி ஷரூன்.
ஹா ஹா,, இவங்க மாதிரி ஆக்கள் மாட்டினா என் சார்பிலையும் எச்ட்ரா குத்துக்கள் ரெண்டு குடுங்கோ...
ஹா ஹா,, இவங்க மாதிரி ஆக்கள் மாட்டினா என் சார்பிலையும் எச்ட்ரா குத்துக்கள் ரெண்டு குடுங்கோ...
ஹிஹி ரசனையான பகிர்வு...நல்லா குத்துங்குறாங்க ஹிஹிஹி
// LOSHAN said...
ஹா ஹா,, இவங்க மாதிரி ஆக்கள் மாட்டினா என் சார்பிலையும் எச்ட்ரா குத்துக்கள் ரெண்டு குடுங்கோ.//
அதே மாதிரி உங்களுக்கு மாட்டினா, என் சார்பில 4 குடுங்கோ லோசன்..)))
கருத்துரைக்கு நன்றிகள்
// யாழினி said...
நீங்கள் பட்டியிலிட்ட எல்லா விஷயங்களும் முற்றிலும் உண்மை. அதிலும் ஸ்கைப் பற்றி சொன்னது டாப். ஆனால், நான் உங்களிடம் கண்டிப்பாக குத்து வாங்குவேன். ஏனென்றால், நான் பேசியே ஆளைக் கொல்லும் ரகம். ஹி..ஹி..
நல்ல பதிப்பு, நன்றி ஷரூன்.//
மிக்க நன்றி யாழினி, தொடர்ந்து வாருங்கள் )))
// மைந்தன் சிவா said...
ஹிஹி ரசனையான பகிர்வு...நல்லா குத்துங்குறாங்க ஹிஹி //
எங்கே சகா குத்த வாய்ப்பு கிடைக்குது?? இப்பிடி பொலம்பிவிட்டு போக வேண்டியதுதான்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
நல்லா குத்துங்க எசமான்...
போன வருஷம் ஒரு பதிவர் இன்னொரு பதிவரை மூக்கில் குத்து விட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பின சமாசாரம் தெரியுமா? பழய பதிவர்களை விசாரியுங்கள்.
வாய்ப்ப நாமதான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
Post a Comment