சாதாரண இரு தமிழ் சினிமா ரசிகனான எனக்கு, சர்வதேச சினிமா பற்றியோ, அதிலுள்ள அழகியல்ல், இசம் இன்னும் பிற எது பற்றியோ அக்கறை ஒரு போதும் இருந்ததில்லை. ஆனாலும் இம்முறை நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அவருடன் இத்திரைப்படம் பார்க்க செல்ல நேரிட்டது.
அதிலும் முப்பரிமாண திரப்படங்கள் தருகின்ற அனுபவங்கள் எனக்கு எப்போதும் ஒரு கிளர்ச்ச்சியினை ஏற்படுத்தும். இது அவதார் திரப்ப்படத்தில் ஏஎற்பட்டு இத்திரைப்படத்துடன் மூன்றாவதாக மாறியுள்ளது.
சரியாக திரைப்படம் தொடர்பான கதைக்கோ அல்லது அது தொடர்பான விமர்சனங்களுக்குள்ளோ நான் வரவில்லை.முப்பரிமாணத்தில் அது தந்த காட்சியனுப்பவங்களின் பிரமிப்பு இன்னும் அகலவில்லை, அதன் பாதிப்பே இது.
வேற்று கிரக வாசிகளாக வரும் அப்பிரமாண்ட உருவங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கும் திறமை!! வியக்க வைக்கின்றது.. அதிலும் உருவங்களின் பிரமாண்டங்களை ரசிகனுக்கு உணர்த்த கைக்கொள்ளப்ப்படுகின்ற உத்திகள் சுவாரசியமானவை. மனிதர்களுக்கும் அந்த ராட்சச எந்திரங்களுக்குமான அளவாகட்டும், அந்த எந்திரங்களுக்கிடையில் உள்ள உருவ வேற்றுமையாகட்டும், அவை செல்கின்ற விண்வெளி ஓடங்களின் அளவாகட்டும் அப்பா!!!!!!!!!! அவர்கள்ன் உழைப்பு தெரிகின்றது.
கடைசி ஒரு மணித்தியாலம் காட்சிகளின் உச்சம் என்றே சொல்லலாம். அந்த பிரமாண்டத்தினை வார்த்தைகளால் விவரிப்பதை விட, பார்க்க வேண்டும். இதே அனுபவம் இரு பரிமாண திரைப்படத்தில் கிடைக்குமா என தெரியாது. அந்த பிரமாண்ட உருவங்களுக்கிடையில் மூளும் சண்டையில் மனிதர்கள் சிறு சிறு புழுக்கள் போல மிதி படுகின்ற போது ஏற்படுகின்ற உணர்வுகள் , சில வேளைகளில், நிஜமோ என எண்ணத் தோன்றுகின்றது. குண்டுகள் பாய்கின்ற போது சில வேளகளில் நாம் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் மறந்து தலை தானாகவே தாழ்ந்து போகின்ற சந்தர்ப்பங்களும் உண்டாகின என்றால் எந்தளவுக்கு அத்திரைப்படத்தின் காட்சிகளில் மூழ்கி இருந்திருக்க வேண்டும் என்பதை பாருங்கள்.
நிச்சயமாக அவதார் - காட்சியனுபவங்களின் உச்சம் என்றால், TRANSFORMER அதற்கு அடுத்தது என்றே சொல்லலாம். இத்திரைப்பட குழுவினரின் உழைப்பு இதன் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக உணர முடிகின்றது.
குழந்தைகளைக் கூட்டிச்சென்று மகிழ வேண்டிய ஒரு திரைப்படம் .. ஓரிரு முத்தக்காட்சிகள் உண்டு, அவ்வளவே!
ட்ரெய்லர் இதோ; ( முடிந்தால் தியேட்டர் சென்று 3Dயில் பாருங்கள்..)
1 comment:
ம்ம்ம்... நாங்க இரப்பது யாழ்ப்பாணத்தில் நண்பா. ஒரு தாசாரண தமிழ் படம் பார்க்கவே இங்கத்தை தியேட்டர்களிலை முடுடியலை.. இதிலை 3டீ எல்லாம் பார்ப்பது எப்ப?
Post a Comment