Monday, October 31, 2011

7,000,000,000 : நீருக்காக சண்டையிட தயாராகுங்கள்..


இன்றிலிருந்து உலகின் சனத்தொகை இதுதான்- 700 கோடி!!! ஒவ்வொரு முறையும் சனத்தொகை கோடிகளைக் கடக்கின்ற தருணங்களில், அனைவரும் பேசுகின்ற விடயங்கள்,
     
வளப்பற்றாக்குறை.


இதோ இப்போதும் ஆரம்பித்துவிட்டது. இன்றைய நாளிதழ்கள் அனைத்தினை திறந்தாலும் இதுவே செய்தி / தலைப்பு புள்ளிவிபரங்கள் , படங்கள், எதிர்வு கூறல்கள் ,அறிஞர்களின் கருத்துக்கள் என அமர்க்களப்படுகின்றது. இவை எல்லாம் ஒரு வித திருவிழா மூட் போல, இரு தினங்களுக்கு பின் அனைத்தும் மறந்து அவரவர் அன்றாட தலையிடிகளுக்குள் அடங்கிவிடுவோம்.

வளப்பற்றாக்குறை தொடர்பான கவலை நமக்குள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது. அதற்கு காரணம். வளம் தொடர்பான நமது கண்ணோட்டம். தண்ணீர் ஒரு வளம் என்றால், நமது ஊர்களில் என்ன சொல்லுவார்கள்?? சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் இப்போது மிக முக்கியமாக பேசப்படும் வளப்பற்றாகுறைகளில் நீர்வளம் தொடர்பான பிரச்சினைகள் முதன்மை பெறுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி,
     
  • நீர் வளப்பற்றாக்குறையினால் உலகில் உள்ள சனத்தொகையில் மூவருக்கு ஒருவர் பாதிக்கபடுகின்றனர்.
  • கிட்டத்தட்ட 1.2 Billion உலக சனத்தொகையினர் நீரினை பெற்றுக்கொள்வதில் பௌதீகரீதியான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
  • அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் உலக சனத்தொகையின் காற்பங்கு மக்கள், அங்குள்ள, சீரற்ற உட்கட்டுமானங்களினாலும், இன்ன பிற குறைபாடுகளினாலும் நீரினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
  • மேலும், சுத்திகரிக்கப்படாத , சுகாதாரமற்ற் நீரினை குடிநீராக பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர்.என உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் சுகாதாரமற்ற நீரினை அதிகமான மக்கள் குடிநீராக பயன்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது. சூடானில் 12.3 மில்லியன் மக்கள் இவ்வாறான நீரினையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுத்தமான குடிநீரினை பெற இப்போது உலக நாடுகள் பல்வேறு திட்டங்களையும் நிடியினையும் செலவிட்டு வருகின்றன. இஸ்ரேல் சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற நாடுகள் வடிகட்டல் செயன்முறக்கான பெரிய கூடங்களை நிறுவி தமது நீர் வள நெருக்கடிக்கான குறைந்தளவான மாற்றீடுகளை பெறமுயற்சிக்கின்றன. இதே போல் இந்தியா சீனா போன்ற நாடுகளும் இவ்வாறான செயன்முறைகளில் கவனம் செலுத்தி வருவதோடு சிறியளவில் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கான மூல காரணம் வளத்தட்டுப்பாடே,
கிணற்றிலிருந்து சும்மாதானே கிடைக்குது என நாம் எண்ணிக்கொண்டால் அது மிக தவறு. அதுவும் ஒரு வளம் என்பதை புரிந்து இனி வரும் நாட்களில் சிக்கனாமாக செலவளிப்போம்.

எனவே தோழர்களே நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~

இனி வரும் காலங்கள் யுத்தங்களுக்கான காரணம் எண்ணை என்பதை தாண்டி நீராக இருக்கலாம் என யாரோ சொன்னது நினைவு கூரத்தக்கது.

நன்றி – WHO , Wikipedia .Google


Saturday, October 29, 2011

முரளி இன்றி திணறும் இலங்கை…



ஓய்வினை அறிவித்த போது, டெஸ்ட் கிரிக்கட்டில் இனி இலங்கை தடுமாறும் என்று பலர் ஆருடம் கூறினாலும், முரளி இல்லாமல் எங்களால் முடியாதா, அவரின் பங்களிப்பின்றி கூட டெஸ்டில் இலங்கை வெற்றி பெறும் என்று கூறினர். இவ்வாறான மதிப்பீடுகள் அனேகமாக, விளையாட்டு என்பதையும் தாண்டி , முரளியின் சாதனைகளை அவரின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட தூண்டுகின்ற பேச்சுக்களாகவே இருந்தன.

பெரும்பான்மை துவேசிகளுக்கு , தமிழர் ஒருவரில் இலங்கை அணி தங்கி இருப்பதா?> என்ற பொறாமைதான் அதிகமாக இருந்தது. அதையே, இவர் போனால் நாங்கள் தோற்றுவிடுவோமா? என்ற அலட்சியமாக கூட வெளிப்பட்டது.

ஆனால், இன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் நிலை, பாய்மரமில்லா படகு போலத்தான். துடுப்பாட்டத்தில் சில வேளைகளில் சொதப்பினாலும் எப்படியோ மீளும் இலங்கை அணி, பந்துவீச்சில் இன்னும் முன்னேறவில்லை. முரளியின் இடம் இன்னும் காலியாகவே இருப்பது அவரின் ஓய்வுக்கு பின்னரான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளில் இருந்தே தெரியக்கூடியதாக உள்ளது.

10 wickets
Jul 18-22, 2010
drawn
Jul 26-30, 2010
5 wickets
Aug 3-7, 2010
drawn
Nov 15-19, 2010
drawn
Nov 23-27, 2010
drawn
Dec 1-5, 2010
inns & 14 runs
May 26-30, 2011
drawn
Jun 3-7, 2011
drawn
Jun 16-20, 2011
125 runs
Aug 31-Sep 3, 2011
drawn
Sep 8-12, 2011
drawn
Sep 16-20, 2011
drawn
Oct 18-22, 2011
9 wickets
Oct 26-30, 2011
(நன்றி – Cricinfo )

ஜூலை 18 இந்தியாவுடனான முரளியின் இறுதி டெஸ்ட் வெற்றியின் பின்னர், இதுவரை 13 டெஸ்ட்களில் 4 போட்டிகளில் தோற்றுள்ளது . ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

கடைசியாக இன்று முடிந்த பாகிஸ்தானுடனான போட்டியில், அவர்களை ரன் எடுப்பதில் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் திணறினர். பாகிஸ்தானை குறைந்த ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்திருந்தால், இலங்கை இப்போட்டியினை சமநிலைக்கோ , வெற்றி க்கோ கொண்டு சென்றிருக்கலாம்.

இனி வரும் கால்ங்களிலும் முரளியின் இடம் வெற்றிடமாகவே இருக்குமானால், இலங்கையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வெற்றிவாய்ப்புகள் குறைந்து செல்லக்கூடிய நிலையே உண்டு. இனவாதம், அரசியல் என அனைத்தையும் தாண்டி திறமைக்கு முன்னுரிமை கொடுத்து, இன்னும் பல திறமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியம் இப்போது இலங்கை கிரிக்கட்டுக்கு உண்டு.




சிங்களத்தி கெழட்டுக்குயிலே…………



தலைப்ப பார்த்ததும் யோசனையா இருக்குல்ல.. என்ன செய்றது? எழுத நெனைக்கிற மேட்டர தொடங்கினா இதுதான் நினைவுக்கு வருது.. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு நிறைய இது பற்றி தெரிந்திருக்கும். ஒன்றுமில்லை இங்கிருக்கும் சிங்கள கெழவிகளின் தொல்லைகள்தான். ( பின்ன இதுகள் கொமரிகளா )

  • தொப்பை, அதுவும் விவேக் திரைப்படங்களில் பகடி பண்ணும் ஆண்களின் தொப்பையினை ஒத்தவாறு.

  • அந்த தொப்பை வெளியில் அசிங்கமாக பிதுங்கி தெரியுமளவுக்கு ஒரு இறுக்கமான ரீ சேர்ட். அதுவும் பச்சை, கருஞ்சிவப்பு போன்ற பிரகாசமான கலர்களில்

  • கூந்தலைப் பாடாய்ப்படுத்தி, பந்து போல, பந்தல் போல எல்லாம் செய்திருக்கும் , பார்க்கவே சகிக்காது,

  • போட்டிருக்கும் ரீ சேர்ட்டுக்கு சம்பந்த சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பாவாடை, அதுவும் ரொம்ப உயரத்தில்.

  • இதுல மூஞ்சியிலே லிப்ஸ்டிக் வேற,அதுவும் பெயின்ட் அடிச்சிட்டு அத தேச்ச மாதிரி ஒட்டாம துருத்திக்கு நிற்கும்

  • கால்ல போடுவாங்க ஒரு ஹீல்ஸு… யப்பா.. நெனச்சிப்பாருங்க மக்கள்ஸ் – தொப்பையோட ஹீல்ஸ் போட்டுக்கு நடந்து வந்தா எப்பூடி இருக்கும்… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

  • இதுக்கெல்லாம் சிகரம் போல கூலிங்க் கிளாஸ் வேற..


இப்பிடி மேற்சொன்ன சர்வ லட்சணங்களும் பொருந்தி ஒரு கெயவி (*&$%!!!!!!!) நடந்து வந்தா, ஒரு சந்தேகமும் இல்ல, அது இலங்கையின் சிங்கள பெண் தான்.

இதுல இன்னொரு பிரச்சினை என்னான்னா, நமக்கு தெரியும் அது சிங்கள பெண்கள் என, ஆனா , பொதுவா இங்கு சொல்லும் போது, இலங்கை பெண்கள் என்றுதானே சொல்லுவார்கள்??

ஏன் இப்பிடி உங்கள் நாட்டுப் பெண்கள் அசிங்கமா ட்ரெஸ் பண்றாங்க ன்னு யாராவது கேட்டா,
பல்லக்கடிச்சிக்கு, நான் அப்பிடி உடுக்க சொல்லல்ல, விரும்பினா நீ அவங்களுக்கிட்ட போய் கேளு ன்னு சிரிச்சிக்கே சொல்லிடுவேன்.

வேற என்ன செய்ய??

ஆனா இந்த எருமைகளிடம் யார் போய் சொல்றது? இல்ல சொன்னாத்தான் வெளங்கிடுமா?

கண்டா காத தூரம் ஓட வேண்டியதுதான்.. நான் அதைத்தான் செய்கின்றேன்.






Friday, October 28, 2011

வேலாயுதம் ; சிறுகுறிப்புகள்



இப்பதான் வேலாயுதம் பார்த்திட்டு வந்தேன், ச்சும்மா தோணிச்சு ஒரு சிறு குறிப்பு, மக்கள்ஸ் இது விமர்சனம் இல்லை..

  • வழமையான விஜய்..
  •  
  • ஹன்சிகா ஆஆஆ…. ரொம்ப தான் கிளுகிளுப்பா இருந்துச்ச்சுப்பா.. இடைக்கிடை தொப்பை ஆடும் போதுதான் கொஞ்சம் நெருடலா இருந்துச்சு, இருந்தும் ஓக்கே!!!!!!
  •  
  • ஜெனிலியா, இதில்தான் பொண்ணுக்கு லூசு கேரக்டர் இல்லைன்னு நெனக்கிறேன்.
  •  
  • காமெடி பட்டாளம்- சந்தானம் சூப்பர். அதிலும் , அந்த மயக்கமா கலக்கமா பாட்டுக்கு சந்தானம் கொடுக்கும் ரியாக்ஸன் சூப்ப்பர்ப்..
  •  
  • சரண்யா, பொண்ணு தொடர்ந்து தங்கச்சியாவே பீல்ட்டில் நிலைச்சிடுமோன்னு கவலையா இருக்கு. கண்ணு, ஹீரோயினாயிடு, ரசிகர் மன்றத்த நான் பார்த்துக்கிறேன்.
  •  
  • அம்மாவை பார்க்க சொல்லி தங்கச்சிய கண்ணாடியில காட்டுறது. துணிஞ்ச கதை.. யப்ப்ப்ப்ப்ப்பா… ரொம்ப அலுத்திடுச்சுப்பா. இன்னும் எத்தனை தமிழ் படத்துக்கு பார்க்கிறது.
  •  
  • கடைசியா விஜய் கொடுக்கிற லெக்ஸர் ரொம்ப அலட்டல்டா சாமி, அவர் தொடங்ககுள்ளேயே மக்கள்ஸ் எல்லாம் எழும்ப ரெடியாயிட்டாங்க.
  •  
  • நான் கடவுள் வில்லன் ( பேர் என்னாப்பா ) , மத்த வில்லன் என அல்லா வில்லனுகளும் விஜயிடம் அடி வாங்கியே சாகின்றானுகள், ஆனா ஏனோ தெரியல மத்த அடியாட்களை எல்லாம் ஒரே குத்தில் சாகடிக்கும் ஹீரோ மெயின் வில்லனுகளை அடித்தே கொல்லுகின்றார்.

  • மோசடிக்காசை ஏதோ கடையில் பிஸ்கட் வாங்குவது போல ஏமாந்த மக்களுக்கு திருப்பி கொடுக்கிறார்.
  •  
  • எப்பவும் போல  முஸ்லிம் தீவிரவாதி. மினிஸ்டரையே ஆட்டி வைக்கும் தீவிரவாதி, விஜயிடம் கடைசியில் வெட்டுப்பட்டு சாகின்றார்.



கடைசியா படம் முடிஞ்சு வெளியே வரும்போது வந்த டவுட்டு ; நாட்டை தீவிரவாதியிடமிருந்து காப்பாற்றும் பொறுப்பை விஜயகாந்திடமிருந்து விஜய் பொறுப்பேற்றிருக்காரா?????????????


டவுட்டினை கன்பர்ம் பண்ண அடுத்த தளபதி படம் வரை காத்திருக்கும்
தல ரசிகன்



Wednesday, October 26, 2011

தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)



இந்தப் பண்டிகை காலத்தில் நீங்கள் வாங்கும் அனைத்து ஆபரணத் தங்கங்களுக்கும் நிச்சயமான பரிசுகள்.
5,000 திர்ஹம்களுக்கு மேல் கொள்வனவு செய்தால் ஒரு தங்க நாணயம் பரிசு…
பண்டிகையினை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்

இது இந்த வார நாட்களில் இங்குள்ள தினசரி பத்திரிகைகளில் ஒரு நகைக் கடையின் விளம்பரம். ஏன் சன் டீவி தொடக்கம் அனைத்து தமிழ் சனல்களிலும் இதே பாட்டுத்தான்.

எனக்கும், நகை வாங்கும் தேவை இருந்ததால், இப்போது வாங்கினால்த்தான் என்ன! அதுவும் இதே ஜூவலரியில் வாங்கினால், தங்க காசு, பரிசு என கிடைக்குமே என்ற பேராசையில் ( பேராசைதான் வேறு என்ன?? ) நேற்று அங்கு போனேன்.

கடைக்குள் நுழைந்தால், ஒரே குழப்பமாகிவிட்டது. இது நகைக்கடைதானா? இல்லை மீன் சந்தையாவென!! அப்பிடி ஒரு சனத்திரள், பெண்கள்… பெண்கள்.. பெண்கள்.. கணவர்கள் வழமை போல, பில்லுக்கு பணம் கட்டிக்கொண்டும், குழந்தைகளுக்கு பராக்கு காட்டிக் கொண்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

தங்க நாணயம் கொடுக்கிறான்தானே அதான் இவ்வளவு கூட்டம் என எண்ணிக் கொண்டே, ஒரு அகலமான பெண் , கௌண்டரை விட்டு விலகிய இடம் பார்த்து இடம் பிடித்துக் கொண்டேன். அப்பா!! நமக்குத்தான் தெரிவதில் நிறைய சிக்கல் இருப்பதில்லையே! ஐந்து நிமிடங்களுக்குள் பில் கட்ட ரெடி. மனம் முழுக்க அவன் தரப்போகும் தங்க நாணயமும் , பரிசும் தான் நிறைந்திருந்தது.

காட்சிக்கு வைத்திருந்த நகைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கண்ணாடி கூண்டினுள் நிறைய தங்க நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

ஓ! இதுதான் எனக்கு கிடக்கப் போகின்றதா! என ஒரே சந்தோசம்..

அப்படி என்ன தரப்போகின்றான் என்ற ஆவல் இன்னும் வேகமாக வளர, விற்பனையாள் என்னை நோக்கி வந்தான்.

“ஐயா, இதோ உங்களது நகை மற்றும் பில்” என்றான்.

அது கெடக்கட்டும் கழுத, எங்கடா என்ட தங்க நாணயமும் மற்ற பரிசும் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.
திடீரென குனிந்து ஒரு அட்டையினை எடுத்து என்னிடம் நீட்டினான். விசிட்டிங்க் கார்ட் போல இருந்தது.
இவன் தங்க நாணயத்தை தரமாட்டான் போல  என எண்ணிக் கொண்டே. 

எங்கே என் கோல்ட் கொயின் என கேட்டேன்.

அதுதான் சார் இது என பதில் வந்தது ….

என்னாது???

லெமினேற் பண்ணப்பட்ட ஒரு அட்டையின் நடுவில் சிறிய ஒரு பொட்டு போல அது இருந்தது. நிறை 250 மில்லி கிராம்!!!!!!!! அடப்பாவிகளா!! 

இதுதானாடா தங்க நாணயம்!! நாசமா போயிடுவீங்களா! என திட்டிக்கொண்டே

வலிக்காத மாதிரியே மொகரைய வச்சிக்கு எங்கடா என் கிப்ட் என்றேன்.

அது உள்ளே உள்ளது என பதில் வந்தது.

அதாவது தேறுமா என வெளியில் வந்து பார்த்தேன்.

லட்டு பாக்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லாருங்கடே!!!!!!!!!!!!! வேற என்னத்த சொல்ல .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


நீதி : வெளம்பரம் பார்த்து போவியா?? போவியா?? 


Tuesday, October 25, 2011

பால்யகால நண்பன் TIN TIN ஐ காணப் போகின்றேன்


7 ஆம் அறிவு , வேலாயுதம் என தீபாவளி தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை கிளறிக்கொண்டிருக்கின்றது. இது போதாதென்று RA-On வேறு. நாளை யிலிருந்து இவை பற்றி நிறைய நிறைய சேதிகள் தெரிந்து கொள்ளலாம்.


நவம்பர் 3னை மிக ஆவலாக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். அன்றுதான் என் சிறுபராய ஹீரோ TIN TIN திரைக்கு வருகின்றான். அதுவும் முப்பரிமாணத்துடன்.. 


தனிப்பட்ட சினிமா சினிமா ரசிகனாக, 7 ஆம் அறிவு , ரா ஒன் எல்லாவற்றினையும் ஓரங்கட்டிவிட்டு நான் காத்திருக்கும் நாள் அதுதான். சிறுபராய நினைவுகள் அத்தனையும் அள்ளிச் சுமந்து கொண்டு வரும் Adventure of TIN TIN ஐ சந்திக்க இப்போதே நாட்களை எண்ண தொடங்கிவிட்டேன்.


கார்ட்டூன் தொடராக, காமிக்ஸாக கண்ட TIN TIN ஐ திரையில் முப்பரிமாணத்தில் காண்பது ஒரு அலாதி அனுபவமாகத்தான் இருக்கும்.


90 காலப்பகுதிகளில் , எங்கள் ஊருக்குள் தொலைக்காட்சி என்பதே அரிதான , பணக்கார அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. ரீவி இருக்கும் வீடு என்றால் பணக்காரர்கள் இதுதான் எளிய சமன்பாடு. 


அப்போதெல்லாம் தேசிய தொலைக்காட்சி மட்டும்தான். மாலை ஐந்து மணியிலிருந்து அரை மணித்தியாலங்கள் கார்ட்டூன் ஒளிபரப்புவார்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொன்று. இன்னும் நினைவிருக்கின்றது. TIN TIN வியாழன், CASPER – புதன். இதற்காகவே TV இருக்கும் வீடுகளில் எப்போதும் சுற்றி திரிவோம். எப்படியாவது கெஞ்சி கூத்தாடி, கடைக்கு போவது தண்ணீர் அள்ளி கொடுப்பது போன்ற சின்ன சின்ன வேலைகள் 5 மணிக்கு ரீவி போடனும் என்ற ஒப்பந்தத்துடன்  செய்து கொடுத்து எப்படியாவது பார்த்துவிடுவேன். அதிலும் TIN TIN ஒளிபரப்பாகும் போது வரும் ஆரம்ப இசை ஏற்படுத்துகின்ற உற்சாக / கொண்டாட்ட மனநிலை. பின்னொரு போதும் எனக்கு ஏற்படவில்லையோ என்ற சந்தேகம் இப்போது எனக்கு உண்டாகின்றது.


ஸ்னோவி போல எனக்கும் ஒரு நாய் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணங்களில், பல தடவை வீட்டில் அடிவாங்கிய நிகழ்வுகளும் இன்னும் நீங்காமல் உண்டு. வீட்டில் நாய்க்கு அனுமதி இல்லை!


பேராசிரியர் கல்குலஸ்ஸின் அலாதி கண்டுபிடிப்புக்கள், அவரது சின்ன சின்ன தவறுகள், கேப்டன் கெட்டோக் ன் முரட்டுத்தனம், கோபம் , தொம்ஸன் & தொம்ப்ஸனின் நகைச்சுவை கலாட்டாக்கள் என அனைத்தையும் கண்டு களிக்கும் பரபரப்பு இப்போதே என்னிடத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது.


பண்டிகையினை எதிர்பார்த்திருக்கும் ஒரு சிறுவனின் மனநிலையில் நான் காத்திருக்கின்றேன்..

இதோ ட்ரைலர்: