பால்யகால நண்பன் TIN TIN ஐ காணப் போகின்றேன்


7 ஆம் அறிவு , வேலாயுதம் என தீபாவளி தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை கிளறிக்கொண்டிருக்கின்றது. இது போதாதென்று RA-On வேறு. நாளை யிலிருந்து இவை பற்றி நிறைய நிறைய சேதிகள் தெரிந்து கொள்ளலாம்.


நவம்பர் 3னை மிக ஆவலாக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். அன்றுதான் என் சிறுபராய ஹீரோ TIN TIN திரைக்கு வருகின்றான். அதுவும் முப்பரிமாணத்துடன்.. 


தனிப்பட்ட சினிமா சினிமா ரசிகனாக, 7 ஆம் அறிவு , ரா ஒன் எல்லாவற்றினையும் ஓரங்கட்டிவிட்டு நான் காத்திருக்கும் நாள் அதுதான். சிறுபராய நினைவுகள் அத்தனையும் அள்ளிச் சுமந்து கொண்டு வரும் Adventure of TIN TIN ஐ சந்திக்க இப்போதே நாட்களை எண்ண தொடங்கிவிட்டேன்.


கார்ட்டூன் தொடராக, காமிக்ஸாக கண்ட TIN TIN ஐ திரையில் முப்பரிமாணத்தில் காண்பது ஒரு அலாதி அனுபவமாகத்தான் இருக்கும்.


90 காலப்பகுதிகளில் , எங்கள் ஊருக்குள் தொலைக்காட்சி என்பதே அரிதான , பணக்கார அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. ரீவி இருக்கும் வீடு என்றால் பணக்காரர்கள் இதுதான் எளிய சமன்பாடு. 


அப்போதெல்லாம் தேசிய தொலைக்காட்சி மட்டும்தான். மாலை ஐந்து மணியிலிருந்து அரை மணித்தியாலங்கள் கார்ட்டூன் ஒளிபரப்புவார்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொன்று. இன்னும் நினைவிருக்கின்றது. TIN TIN வியாழன், CASPER – புதன். இதற்காகவே TV இருக்கும் வீடுகளில் எப்போதும் சுற்றி திரிவோம். எப்படியாவது கெஞ்சி கூத்தாடி, கடைக்கு போவது தண்ணீர் அள்ளி கொடுப்பது போன்ற சின்ன சின்ன வேலைகள் 5 மணிக்கு ரீவி போடனும் என்ற ஒப்பந்தத்துடன்  செய்து கொடுத்து எப்படியாவது பார்த்துவிடுவேன். அதிலும் TIN TIN ஒளிபரப்பாகும் போது வரும் ஆரம்ப இசை ஏற்படுத்துகின்ற உற்சாக / கொண்டாட்ட மனநிலை. பின்னொரு போதும் எனக்கு ஏற்படவில்லையோ என்ற சந்தேகம் இப்போது எனக்கு உண்டாகின்றது.


ஸ்னோவி போல எனக்கும் ஒரு நாய் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணங்களில், பல தடவை வீட்டில் அடிவாங்கிய நிகழ்வுகளும் இன்னும் நீங்காமல் உண்டு. வீட்டில் நாய்க்கு அனுமதி இல்லை!


பேராசிரியர் கல்குலஸ்ஸின் அலாதி கண்டுபிடிப்புக்கள், அவரது சின்ன சின்ன தவறுகள், கேப்டன் கெட்டோக் ன் முரட்டுத்தனம், கோபம் , தொம்ஸன் & தொம்ப்ஸனின் நகைச்சுவை கலாட்டாக்கள் என அனைத்தையும் கண்டு களிக்கும் பரபரப்பு இப்போதே என்னிடத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது.


பண்டிகையினை எதிர்பார்த்திருக்கும் ஒரு சிறுவனின் மனநிலையில் நான் காத்திருக்கின்றேன்..

இதோ ட்ரைலர்:
Comments

Mohamed Faaique said…
கெஸ்பர் பார்த்திருக்கிறேன். டின் டின் மீது அவ்ளோ ஈர்ப்பு இல்லை..

வரட்டும் ஒரு கை பார்த்திடலாம்
பகீ said…
நீண்டகாலமாகவே படக்கதைகள் வாசித்து வந்தாலும் TinTin மிகப்பிந்தியே எனக்கு அறிமுகம். 15 வயது இருக்கலாம். ஒரே மூச்சில் அனைத்து புத்தகங்களையும் வாசித்து முடித்த பின் எனக்கு வந்த கவலை ஏன் இது இன்னமும் தமிழில் வரவில்லை என்பது.

அது நிற்க, மிகவும் நல்ல தகவல். வௌிவந்தவுடன் பார்ப்பதென்று இருக்கின்றேன். ரெயிலரில் தொம்சன் அன்ட் தொம்ப்சனை காணவில்லை. படத்தில் இருப்பார்கள் என நம்புகின்றேன்.

அன்புடன்
ஊரோடி பகீ.

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

மலையாளிக் களவானிகள்!

கவியரசனின் ஜனன தினம் இன்று.