Saturday, October 29, 2011

முரளி இன்றி திணறும் இலங்கை…



ஓய்வினை அறிவித்த போது, டெஸ்ட் கிரிக்கட்டில் இனி இலங்கை தடுமாறும் என்று பலர் ஆருடம் கூறினாலும், முரளி இல்லாமல் எங்களால் முடியாதா, அவரின் பங்களிப்பின்றி கூட டெஸ்டில் இலங்கை வெற்றி பெறும் என்று கூறினர். இவ்வாறான மதிப்பீடுகள் அனேகமாக, விளையாட்டு என்பதையும் தாண்டி , முரளியின் சாதனைகளை அவரின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட தூண்டுகின்ற பேச்சுக்களாகவே இருந்தன.

பெரும்பான்மை துவேசிகளுக்கு , தமிழர் ஒருவரில் இலங்கை அணி தங்கி இருப்பதா?> என்ற பொறாமைதான் அதிகமாக இருந்தது. அதையே, இவர் போனால் நாங்கள் தோற்றுவிடுவோமா? என்ற அலட்சியமாக கூட வெளிப்பட்டது.

ஆனால், இன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் நிலை, பாய்மரமில்லா படகு போலத்தான். துடுப்பாட்டத்தில் சில வேளைகளில் சொதப்பினாலும் எப்படியோ மீளும் இலங்கை அணி, பந்துவீச்சில் இன்னும் முன்னேறவில்லை. முரளியின் இடம் இன்னும் காலியாகவே இருப்பது அவரின் ஓய்வுக்கு பின்னரான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளில் இருந்தே தெரியக்கூடியதாக உள்ளது.

10 wickets
Jul 18-22, 2010
drawn
Jul 26-30, 2010
5 wickets
Aug 3-7, 2010
drawn
Nov 15-19, 2010
drawn
Nov 23-27, 2010
drawn
Dec 1-5, 2010
inns & 14 runs
May 26-30, 2011
drawn
Jun 3-7, 2011
drawn
Jun 16-20, 2011
125 runs
Aug 31-Sep 3, 2011
drawn
Sep 8-12, 2011
drawn
Sep 16-20, 2011
drawn
Oct 18-22, 2011
9 wickets
Oct 26-30, 2011
(நன்றி – Cricinfo )

ஜூலை 18 இந்தியாவுடனான முரளியின் இறுதி டெஸ்ட் வெற்றியின் பின்னர், இதுவரை 13 டெஸ்ட்களில் 4 போட்டிகளில் தோற்றுள்ளது . ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

கடைசியாக இன்று முடிந்த பாகிஸ்தானுடனான போட்டியில், அவர்களை ரன் எடுப்பதில் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் திணறினர். பாகிஸ்தானை குறைந்த ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்திருந்தால், இலங்கை இப்போட்டியினை சமநிலைக்கோ , வெற்றி க்கோ கொண்டு சென்றிருக்கலாம்.

இனி வரும் கால்ங்களிலும் முரளியின் இடம் வெற்றிடமாகவே இருக்குமானால், இலங்கையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வெற்றிவாய்ப்புகள் குறைந்து செல்லக்கூடிய நிலையே உண்டு. இனவாதம், அரசியல் என அனைத்தையும் தாண்டி திறமைக்கு முன்னுரிமை கொடுத்து, இன்னும் பல திறமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியம் இப்போது இலங்கை கிரிக்கட்டுக்கு உண்டு.




No comments: