Posts

Showing posts from April, 2012

7500 ரூபாய்களில் குடும்பம் நடத்த அமைச்சரின் வழியில் ஒரு டிப்ஸ்

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், 3 பேர் குடும்பம் ஒன்றுக்கு மாசத்திற்கான செலவுகளை மேற்கொள்ள 7500.00 இலங்கை ரூபாய்கள் போதும் என தெரிவித்த கருத்து இப்போது இலங்கையின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
விலைவாசி கிடு கிடு என ஏறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் 7500.00 ரூபாய்கள் மூன்று பேர் உள்ள குடும்பத்துக்கு போதும் என ஒரு கல்வி அமைச்சர். முன்னாள் பொருளியல் ஆசிரியர் கூறுகின்றார் என்றால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கத்தான் செய்யும் என அனைவரும் புரிந்து கொள்ள் வேண்டும். அதை விட்டு அவரை கேலி செய்வது, 7500 க்கு அவரை குடும்பம் நடத்த சொல்றது எல்லாம் நாகரீகம் அல்ல.
7500 ரூபாய்க்கு மாசத்தினை ஒட்ட அவர் என்ன நம்மை போல சாதாரண, வேலையற்ற நாட்டுக் குடிமகனா? இலங்கையின் அரச எந்திரத்தின் முக்கிய கடையாணி அவர். அதோடு அவருக்கு எத்தனையோ ராச காரியங்கள் இருக்கும்…
இருக்கட்டும்! அமைச்சர் சொன்ன 7500 ரூபாய்க்குள் எப்படி ஒரு மாத்தத்தினை ஓட்டுவது எனப்பார்ப்போம். குடும்ப உறுப்பினர்கள் : 3 பேர்மூன்று வேளை உணவாக பாண் ( Bread ) மாத்திரம் உண்ண வேண்டும். பாண் தொண்டைக்குள் சிக்கினால் தண்ணி குடிக்கலாம் அது…