Posts

Showing posts from January, 2011

அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….

நீ எதிர்பார்த்த நான் எதிர்பார்க்கா, அது நிகழ்ந்தே போனது….
நீ சென்றே விட்டாய்… என்னையும் உன் நினைவுகளினையும் விட்டு.. நீ சென்றே விட்டாய்… இனியும் நீ என்னருகில் இல்லை..
என்றாவது ஓர் மழைக்காலத்தில் நீ உன் கணவனையும், நான் என் மனைவியையும்- அறிமுகப்படுத்தும் துர்ப்பாக்கியம் “ இவர் என் கிளாஸ்மேட்” எனும் விழுங்கலுடன்- ஆரம்பிக்கலாம்.
பிரார்த்தித்துக்கொள் பெண்ணே அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென………. __________________

பைசாவுக்காக சட்டை துறந்த இந்திய கிரிக்கட் வீரர்கள்

Image
வருகின்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பிரதான அனுசரனையாளர்களில் ஒன்றான பெப்சி விளம்பரத்திற்காக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மற்றும் சில வீரர்கள் வெற்றுடம்போடு தோன்றியுள்ளனர்.
ம்ம்…… பைசா படுத்தும் பாடு……………..
பசங்க மேல கண்ணு வச்சிடாதீங்க... குடும்பக்காரப் பய புள்ளைங்க!!!!!!!!!இம்புட்டு வெகுளியாவா இருந்திருக்கோம்!!!!!!!!!!!

காலம் என்பது எபோதும் எதையாவது கற்றுத்தந்து கொண்டே இருக்கின்றது இல்லையா?அதுவும் கடந்து போன வாழ்க்கையினை திரும்பிபார்க்கின்ற போது, மேலே உள்ள டயலாக் பாதிக்கு மேல் நம்மக்களுக்கு வந்திருக்கும். ஒத்துக்கிறீங்களா? “அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு மாதிரி” என்னு யாரோ ஒரு பெரிசு சொன்னது எத்தின உண்மை.
மனிசனோட மனிசனா பழக - எத்தின முகமூடி தேவை அதுவும் எந்த இடத்துக்கு எந்த முகமூடி, முன்ன உள்ளவன் என்ன முகமூடியோட இருக்கான். அவனோட எண்ணம் என்ன ஏன் அவன் அதைப்பற்றி சொல்றான். அவன் கதைப்பது நெசமா…………………….ஐயோ!! ஐயோ!!!! முடியலடா சாமி.. இதுக்குள்ள இம்புட்டு மேட்டர் இருக்கா என்னு நெனச்சா மலைப்பா இருக்கு. ஆனா அந்த கெரகமும் இப்பதான் நம்ம மண்டைக்கு ஒறைக்குது.
இம்புட்டு நாளா, நாம நெனைக்கிற மாதிரித்தான் நம்ம கூட இருப்பவங்களும் நெனைப்பாங்க.. நாம எத நெனைச்சு சொல்றோமோ அத அவங்களும் புரிஞ்ச்சிப்பாங்க… எல்லாரும் நல்லவய்ங்கதான் என்னுதான் காலம் தள்ளியிருக்கம்.. என்னா ஒரு வெகுளித்தனம்………யப்பா!!!!!!! அப்ப, நமக்கு எது நடந்தாலும், அது என்னவோ போகட்டும்னு லூஸ்ல வீட்டுர்ரது. இது ஏன் நடக்குது? காரணம் என்னா என்ன…

கடிதங்களினையும் காக்கைகளினையும் தின்ற தொலைபேசிகள்

96, 97 களில் கூட தகவல் தொழில் நுட்பம் மனிதர்களை ஆளத் தொடங்கவில்லை. ஒரு வீட்டில் தொலை பேசி இருக்கின்றது என்பதே – ஒரு வகையான பணக்காரத்தனத்தின் குறியீடு போலத்தான் பார்க்கப்பட்டது. தொலைபேசிக்கான தேவைகள் அப்போது அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை. அவசரம் என்றால், தந்தி. அல்லது கடிதம். இதையும் தாண்டினால்த்தான் தொலைபேசி. 
தொலைபேசினால் அது பற்றிய கதையாடல்கள் குடும்பம் பூராகவும் ஓரிரண்டு வாரங்களுக்கு உலா வரும். அதோடு அது ஒரு ஆடம்பரம் எனும் தோற்றப்பாடும், பெருமையாகவும் வர்ணிக்கப்படுவதுண்டு.
தொலைதூர உறவுகளுக்கிடையிலான பாலமாக- கடிதங்களே பயணப்பட்டன. அவற்றை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள் ஒரு வித பரபரப்புடன் கழியும். உறவுகளின் கடிதம் தவிர வேறு எந்த ஒரு தொடர்புகளும் இல்லை. அவர்களின் கடிதம் மட்டுமே, அவர் அங்கு இன்னும் இருக்கின்றார் என்பதற்கான ஒரே சாட்சி என்பதை இப்போது எண்ணிப்பாருங்கள்- அதில் ஒரு அசாத்தியம் அல்லது அசாதரணம் தொக்குகின்றதல்லவா?? ஆனால், இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றோம். அக்காலங்களில் தூர உறவுகளின் அருமை, உறவின் வலிமை என்பன மிக்க உறுதியாக இருந்திருக்கின…

மிதக்கும் கிழக்கிலங்கை...

Image
மழை என்றால்... வானம் பொத்துவிட்டதோ என எண்ணும் அளவிற்குள்ளதாம்... இன்னும் ஊற்றிக்கொண்டே இருக்கின்றது. சாட்சிக்காக சில படங்கள்..திடீர் நதி...இங்க வடிகான் இருந்திச்சே எங்க போச்சு!!!!!!!!!!!!!!!!


எங்க ஊரும் இப்ப வெனிஸ்தான்..... ஆனா நாங்க படகெல்லாம் விடமாட்டோம் ...


எல்லாத்தையும் இப்பவே கழுவிக்கங்கப்பா, மழை காசு ஒன்னும் கேக்காது...
அழையா விருந்தாளி.. கதவை அடைச்சாலும், ச்சும்மா பூந்து புறப்படுவோமில்ல!!!!


அப்பா!!!!!!!! படகு வாங்கியாச்சு... விடு ஜூட்........

ஹய்யா ஸ்கூல் லீவு... ஆனா எங்கும் போக முடியா...


மழைய நிறுத்தச் சொல்லி சாமிய வேண்டப் போனா...!!!!!!!!!!!இயற்கையும் துரத்துகின்றதே.. 


நண்பர்களே! இது உங்கள் பார்வைக்காக, இயலுமானவர்கள், முடிந்தவகையில் தங்களது பங்களிப்பினை வழங்கலாம்.


இலங்கைப் பதிவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொள்ளும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் கரங்களை பலப்படுத்துவோம், ஆகக்குறைந்தது பிரார்த்தனைகளிலாவது.

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்.. துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்
*******
இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை உன் தொலைபேசி அழைப்பிலும், முத்தமொன்றின் அவசரத்திலும் ஏன் மௌனங்களின் இறுதி கூட, என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..
********
உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி நான் பிரகடனம் செய்த மறுகணம்- நீ தொடர்ந்தாய் துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..

IPL 4 : விலை போன வீரர்களும், விலை போகா சரக்குகளும்

Image
IPL 4 ற்கான வீரர்கள் ஏலம் ஜரூராக ஆரம்பித்துவிட்டது. ஏதோ பண்டம் பாத்திரம் வாங்குவது போல மனிதர்கள் ஏலம் விடப்படுவது சிரிப்பை வரவைத்தாலும் கொடுக்கப்படும் விலையினை பார்க்கின்ற போது.. யப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!! இதோ வீரர்களினை வாங்கிய அணியும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலையும். ( டொலரில் உள்ளதை பெருக்கி பார்த்துக்கோங்கோ மக்களே! இதய பலவீனம் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டாம்… )) )
முதலில் ஏலம் விடப்பட்ட வீரர் Gambhir பலத்த போட்டியின் மத்தியில் Kolkata அணி $2.4 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது தற்போதுள்ளதன் படி இதுவே அதி கூடிய ஏலத்தொகையாகவும் உள்ளது.
சென்ற முறை வெற்றிகரமாக சொதப்பிய Dilshan இம்முறை Bangalore அணியினால் 650,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார. அதோடு Zaheer Khan ம் அதே அணிக்காக $900,000 ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் Ross Taylor Rajasthan Royal அணியினால் $1 million விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டார்..
அதிரடி துடுப்பாட்ட வீரர் Yusuf Pathan க்கான ஏலம் அனைத்து அணிக்கிடையிலும் பெரும் போட்டியாக இருந்தது. அனைத்து அணியும் அவரை வாங்குவதில் மும்ம…

ஒரு ரூபாய்

Image
பாடசாலைக் கால மதிய உணவு. நண்பர்களிடையே பணக்கார அடையாளம் பக்கத்துக்கடை ஐஸ்பழம் அடித்துவிட்டு அப்பா தரும் அன்பு. முத்தம் வாங்க தாத்தா தரும் லஞ்சம். பெருநாட் காலங்களில் நிகழும் அற்புதம் கடைக்குச் செல்ல கிடைக்கும் போக்குவரத்துக்கூலி இன்று, நினைவுகள் மீட்கும் ஞாபகச் சின்னம்