அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….நீ எதிர்பார்த்த
நான் எதிர்பார்க்கா,
அது நிகழ்ந்தே போனது….

நீ சென்றே விட்டாய்…
என்னையும் உன் நினைவுகளினையும் விட்டு..
நீ சென்றே விட்டாய்…
இனியும் நீ என்னருகில் இல்லை..

என்றாவது
ஓர் மழைக்காலத்தில்
நீ உன் கணவனையும், நான் என் மனைவியையும்-
அறிமுகப்படுத்தும் துர்ப்பாக்கியம்
“ இவர் என் கிளாஸ்மேட்” எனும் விழுங்கலுடன்-
ஆரம்பிக்கலாம்.

பிரார்த்தித்துக்கொள் பெண்ணே
அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….
__________________

Comments

kavithai arumai..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html
Jana said…
மழையும் இயற்கையும் ரொம்ப லொள்ளு காரங்க.. ஸோ..காத்திருந்து பாருங்க..அந்த மழைக்காலம் வராமல் போகாது.
//பிரார்த்தித்துக்கொள் பெண்ணே
அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென//

மக்களே எல்லோரும் தெரிஞ்சிகோங்க "கிளாஸ்மேட்"ன்னு இனி யாரையாவது[எவளையாவது] அறிமுக படுத்துனா அது கண்டிப்பா முன்னாள் காதலர்னு தெரிஞ்சிகோங்க....
நன்றி கருன், மற்றும் ஜனா அண்ணா

மனோ! வம்புல மாட்டாதீங்க, ஏன்பா, இந்த நாரதர் வேலை? குடும்பங்களுக்குள்ள கும்மி அடிக்க என்ன பலி கொடுக்கிறீங்களே சார்... வேணாம் விட்டுடுங்க..... அழுதுடுவன்
ஆயிஷா said…
கவிதை அருமை.
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!