ஒரு ரூபாய்


பாடசாலைக் கால மதிய உணவு.
நண்பர்களிடையே பணக்கார அடையாளம்
பக்கத்துக்கடை ஐஸ்பழம்
அடித்துவிட்டு அப்பா தரும் அன்பு.
முத்தம் வாங்க தாத்தா தரும் லஞ்சம்.
பெருநாட் காலங்களில் நிகழும் அற்புதம்
கடைக்குச் செல்ல கிடைக்கும் போக்குவரத்துக்கூலி
இன்று,
நினைவுகள் மீட்கும் ஞாபகச் சின்னம்

Comments

This comment has been removed by the author.
நினைவு மீட்டு
தாண்டியவற்றில்
ஏக்கமுடன்
மீண்டும் தோய வைக்கிறது
Lakshmi said…
மனதிற்குள் எத்தனை ஞாபகச்சின்னங்களோ.
Jana said…
அருமை...
Rafiq Raja said…
வாழ்க்கை ஓடங்களை நினைவுகூற வைத்த வரிகள். நன்றி துயரி

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!