ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..


Comments

Jana said…
இது சும்மா தோணி வருவதாக தெரியவில்லையே??? அத்தனை அனுபவங்கள்????
துயரி said…
நன்றி தர்ஷன்

எப்படி ஜனா அண்ணா?? சரி சரி.. கண்டுக்காதீங்க.. நமக்குள்ளே இருக்கட்டும்...

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.