Posts

Showing posts from June, 2012

விகாரமாகிக் கொண்டிருக்கும் மனிதமும். மனதுகளும்.

Image
பாலர் வகுப்பிலிருந்து படித்து வந்த வாழ்க்கை சமூகம் பற்றிய கற்பிதங்கள், நிஜமான உலகில் பிரவேசித்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகின்றது. அதிலும் இன்றிருக்கும் நிலை இன்னும் பயமாக இருக்கின்றது. மனங்களின் விகாரங்கள் காலையில் கண் விழித்ததில் இருந்து பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டே இருக்கின்றன.
செய்திகளை புரட்டினால், மனசு இன்னும் சுருங்கிப் போய் இருக்கும் கவலைகளுடன் உலகம் பற்றிய சிறிய ஒரு வருத்தமும் தொற்றுவதை தவிர்க்க இயலவில்லை. அந்த வருத்தமும் சொந்த கவலை ஒன்று வரும்போது இல்லாமலே போய் விடும்.
மரணம் பற்றிய எமது நிலை இன்று வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. நான் சாவிற்கு அஞ்சுபவனில்லை என்பது வீரமா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் நிறைய உண்டு. மரணத்திற்கு நீ அஞ்ச வேண்டும். நித்தியமாக நாம் யாரும் வாழ வரவில்லை. நாள் குறிப்பிடாமல் நிச்சயிக்கப்பட்ட மரணம் எங்கோ எமது வழிப்பயணத்தில் எம்மை சந்திக்கலாம். நமக்கும் அதற்குமான தூரம் பற்றி எந்த ஒரு தகவலும் எம்மிடம் இல்லை. இதோ நான் கூட அதை அண்மித்திருக்கலாம். யாரறிவார்?      “ என் மரண நாட்காட்டியில் இன்றொரு நாள் கிழிக்கப்படுகின்றது” என்று…