Thursday, May 08, 2014

மலையாளிக் களவானிகள்!

லைசன்ஸ் எடுப்பதற்கான முஸ்தீபுகள் அமீரகத்தை பொறுத்த வரை ராணுவ நடவடிக்கை போல.! நிறைய தடைதாண்டல்கள் உண்டு. ஒரு வழியாக தப்பிப் பிழைத்து, இறுதிப் படிக்கு வந்துவிட்டேன். அடுத்தது, குறைந்தது 10 மணித்தியாலங்கள் , வீதியில் ஒரு ட்ரைனர் உதவியுடன் ஓடிப் பழகிய பின்னர், இறுதிச் சோதனை. 

எனது துரதிஷ்டம் , எனது பயிற்றுவிப்பாளர் மலையாளி! வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அதிகாலையும் 2 மணித்தியாலங்கள் ஓடிப் பழகுவது என தீர்மானித்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கினேன். மலையாளிகள் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் வழங்கவே இல்லை.

ஆமாம்! என்னை எப்போதும் அதைரியப்படுத்துவதிலேயே அவன் குறியாகவிருந்தான். எதற்கு இதைச் செய்கின்றான் என குழம்பிய எனக்கு விடை அடுத்த கிழமை கிடைத்தது.
பாஸாக பொலிஸ் இருக்கு 4000 திர்ஹம் குடுத்தா கன்பர்ம் பாஸ் என்றவாறு தொடங்கினான். அது சரி,! என்றவாறு ஆர்வமில்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தேன்.

அவன் விடுவதாய் இல்லை. ரீ.வி விளம்பரம் போல 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்காமல், சரி லைசன்ஸ் கிடைக்காதுவிட்டால் அந்த 4000 திர்ஹம் என்ன ஆகும்? எனக் கேட்டேன். இப்போது அவனுக்கு மகிழ்ச்சி, வலைக்குள் இரை சிக்கியது என எண்ணியிருப்பான். 80% பாஸ்தான், அப்பிடி கிடைக்காவிட்டால் பைசா வை திருப்பித் தந்துவிடுவேன் என்றான். அதாவது, எனது அவ நம்பிக்கையினை மூலதனமாக்கி அவன் நோகாமல் 4000 திர்ஹம் சுருட்ட முனைவது தெளிவாக விளங்கியது.

டேய் @#$#%#!!! மலையாளி! எங்கடா இதெல்லாம் படிச்சிக்கு வாறயல் என எண்ணிக் கொண்டே,

" சேட்டன் நாட்டுல எங்க படிச்ச?" என்றேன் கொச்சை தமிழ் + மலையாளத்தில்..
தொடர்பில்லாமல் ஏன் இதைக் கேட்கின்றான் என குழம்பிக் கொண்டே, ஏதோ ஹை ஸ்கூல என சொன்னான்.

" அங்க போய் விசாரிச்சுப் பார், அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அக்கரைப்பற்றானா இருப்பான்" என்றேன் முகத்தை கடுமையாக்கிக் கொண்டே..

"எந்தா?? எந்தா.. ?" என்றான் புரியாமல்.

தலையை திருப்பாமல் வீதியினை கூர்ந்து பார்த்தவாறு அக்ஸிலேட்டரை கொஞ்சம் அழுத்தினேன்...

No comments: