Posts

Showing posts from November, 2010

வாழ்க்கையின் பயங்கள்

Image
இருட்டோடு கலக்கின்றது என் கருமையும் எதற்காக ஒளிய எத்தனிக்கின்றேன்? இன்னும் புரியவில்லை. நான் ஒரு கொலைகாரனா? பாவியா? கோழையா? எட்டாத தூரத்தில் எங்கோ ஒட்டி நிற்கும் வான் நோக்கும் என் வினாக்களுக்கு அர்த்தம் இல்லை. இன்னும் – பயங்கள் மட்டும் ஒட்டிக்கொள்ள மீண்டும், ஒளிய எத்தனிக்கின்றேன். வாழ்க்கையின் புதிர்களுக்கு என்னிடம் விடையில்லை. தேடும் எத்தனிப்புகள் பற்றிய கவலை இன்னும் தோன்றாமல்,

பலதும் பத்தும் - III

Image
தமிழ்மன்றில்பாரதி என்ற புனைப்பெயரில் எழுதி வரும் முருக பூபதி அண்ணாவினை சந்தித்தேன். எவ்வளவு இனிமையன மனிதர்! எளிமையான அர்த்தமாக பேசுகின்ற விடயங்கள் இன்னும் அவரோடு பேச வேண்டும் என்று தோன்றியது. விருந்தோம்பலில் கூட மனிதர் எவ்வளவு அக்கறை. கொஞ்சம் சுகவீனத்துடன் இருந்தேன். கூடவே கூட்டிச்சென்று மருந்து வாங்கித்தந்த்திலிருந்து ( பங்கஜ கஸ்தூரி.. ) சங்கீத சைவ உணவகத்தில் பஞ்சாபி “தாலி”  சாப்பிட்டது வரை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே நாளில் முதல் அறிமுகத்தில் இவ்வளவு விருந்தோம்பலோடு கவனிக்க முடியுமா? இன்னும் நான் அவரின் கவனிப்புக்களில் இருந்து விலகவில்லை. பிரியாவிடை பெற்று அறைக்கு வந்து சேருமுன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேனா என அழைத்துக் கேட்டதில் இருந்த அக்கறை!  அண்ணா! அண்மையில் என்னை வியக்க வைத்த மனிதர்களில் நீங்கள்தான் பெஸ்ட். இப்படி ஒரு உறவினை ஏற்படுத்தித் தந்த மன்றிற்கு மீண்டும் ஒரு சல்யூட்.
nick vujicicஎன்ற மனிதர் பற்றிய வீடியோ ஒன்றினை காண நேர்ந்தது. கொஞ்ச நேரம் உறைந்து போய் உட்கார்ந்து விட்டேன். நாம் எந்தளவு அவநம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்பதை எண்ணும் போது வெட்கமாக இருந்தது. கைகளோ க…

அம்பானியின் ஆடம்பர மாளிகை

Image
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஸ் அம்பானி. தனக்கென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 27 மாடிகளினை கொண்ட ஆடம்பர மாளிகையினை கட்டி முடித்துள்ளார். வரலாற்றில் தனிநபர் ஒருவர் கட்டிய அதிக செலவு மிக்க வாசஸ்தலம் இதுதானாம் ( ம்ம்….. ) அவரது குடும்பத்தில் உள்ள ஆறு பேர் வசிப்பதற்கான இவ்வீட்டினை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் எடுத்துள்ளன.
சாதாரண கட்டிடங்களினை பொறுத்தவரையில் 60 மாடிகளினை கட்டக்கூடிய உயரம் கொண்ட்தாக இம்மாளிகை இருந்தாலும், கூரைகளிஅனி உயர்த்தி 27 மாட்கள் கொண்டதாக இது கட்டுப்பட்டுள்ளது. மொத்த பரப்பு 37,000 சதுர மீற்றர்கள் !!!
ஒவ்வொரு அறைகளும் பிரத்தியேகமான அலங்காரம் மற்றும் வசதிகளுடன் காணப்படுகின்றனவாம். 9 லிப்ட்கள்மற்றும், உடற்பயிற்சிக்கூடங்கள் விருந்தினர் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளதோடு, முதல் மூன்று மாடிகளும் கார்கள் நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளதோடு, மேல்தளம் மூன்று உலங்கு வானூர்திகள் தரை இறங்குவதற்கான தளத்தினை கொண்ட்தாகவும் இருக்கின்றது.
அதோடு, அம்பானி மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகள் அதோடு அவரது தாயர் ஆகிய அறுவருக்கும் பணிக்கென இப்புதிய மாளிகையில் 600 பேர்…

உன் மறதிகளுக்கு என் வாழ்த்துக்கள்

எழுத எண்ணும் எதுவும் தாள்களில் ஒட்டாமல் தூர நிற்கின்றன. உன் நினைவுகள் போல,
நலமாய் இருக்கும் உன்னிடம் மிண்டு கேட்க எதுவும் இல்லை இருந்தும் கேட்கின்றேன் – என் தொல்லைகள் இன்றி சுகமாய் இருக்கின்றாயா? சுவர்க்கோழிகள் கூவும் இரவொன்றில், உன் நினவுகள் என்னைத் தட்டி எழுப்பிற்று. பெரும் பிரயத்தனங்களுடன் உன் பிம்பம் தேடி கண்களினை இறுக மூடியும், எம் காதலின் இறுதி ஊர்வலம் மட்டுமே மீண்டெழுகின்றது.
சொல்ல வேறொன்றுமில்லை, உன் மறதிகளினை வாழ்த்துவதை தவிர!

பதிவுலகில் காப்பி பேஸ்ட் கலகங்கள்

பதிவரசியல் எங்கிறாங்க.. காப்பி –பேஸ்ட் எங்கிறாங்க! எதுவுமே புரியல! இருந்தும் ஏதோ எனக்கு தோண்றத சொல்றன். பெரியவுங்க தப்பா இருந்தா சொல்லுங்கோ. இந்த சிறுவன மன்னிச்சிடுங்கோ!!
ங்கில தளங்களில் உள்ளதை மொழிமாற்றி தமிழில் வெளியிடுவது தொடர்பான ஒரு சர்ச்சை தற்போது தமிழ் பதிவர்களிடையே தோன்றியுள்ளது. இது பற்றிய எனது கருத்துக்க்ளை பதியலாம் என எண்ணுகின்றேன். தகவல்கள் கடத்தப்பட மொழி ஊடகமாக் இருக்கின்றது. இங்கு தகவல் தகவலினை கொண்டு சேர்ப்பவரும் ( வழங்கி ) அதைப்பெறுபவரும் ஒத்த அலைவரிசையில் இருக்கும் பட்சத்திலேயே அந்த செயன்முறை பூர்த்தி அடைகின்றது / வெற்றி பெறுகின்றது. இங்கு ஒத்த அலைவரிசை என்பது என்னைப்பொறுத்த வரையில் மொழி. அது தெளிவு. ஆகவே கிடைக்கும் தகவல்களினை மற்றவர்களும் பயன்படும் நோக்கில் பொதுவான ஒரு அலைவரிசை ஊடாக மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தவறு எதும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் எனில் தாய்மொழியில் ஒரு விடயத்தினை விளங்குகின்ற / கிரகிக்கின்ற வேகம், ஏனைய இரண்டாம் மொழிகள் மூலம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.
அந்த வகையில் பதிவர் சசி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த ஒர…

இனித்த பெருநாட்கள்

Image
இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன பெருநாட்களின் நினைவுகளில், அதிகாலை தொடங்கும் குளியலுடன், தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும். புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன். ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும் கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி.. பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக… கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு,  மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!!

நுண்ணிய உணர்வினை கிளறிவிடும் Vodofone விளம்பரங்கள்

இன்னைக்கு ஒரு விளம்பரம் பார்க்க கிடைத்தது. Vodofone ன் புதிய விளம்பரம்… கொஞ்ச நேரம் பாடசாலைக்காலங்களினையும் பழைய நட்புக்களையும் மீட்டிப்பார்க்க வைத்தது… ஒரு நிமிடத்திற்குள் ஒரு சிறுகதை போல முடிகின்ற அது இன்னும் ஒரு வித உற்சாகத்தை தந்து கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு/
பாடசாலைக்காலங்களில் ஏற்படும் நட்பு வட்டங்களில் விசேடமாக ஒருவன் மட்டும் நம்மில் மிக்க அக்கறையோடு இருப்பான்.. வகுப்பறையில் பக்கத்தில் இடம் பிடித்து வைப்பது, காக்கா கடி , விளையாடும் போது ஏதாவது சண்டைகளில் சப்போர்ட் என எப்போதும் அந்த ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். முக்கியமாக நடைபெறும் கேங்க் வார்கள் பாடசாலைகளில் ரொம்ப முக்கிய அம்சம். சுவாரசியம்தான்.
உண்மையில் நம்மை ஒருவர் முக்கியத்துவப்படுத்துகின்றார் எனும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி எல்லோரும் வேண்டி நிற்கும் ஒன்று. அந்த உணர்வினை மிக குறுகிய நேரத்துள் ஒரு சிறு கதைக்கான நேர்த்தியுடன் படமாக்கியீருக்கும் விதம் அழகு. நீங்களும் பார்த்து மகிழுங்கள்....
அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

Image
பலர்மேற்சொன்னஅரசியலுக்குள்அகப்பட்டிருக்கலாம், ஏன்அதைநடத்திக்கொண்டேஇருக்கலாம். என்பங்கிற்குசும்மாஒருபதிவு. உண்மையில்அரசியலுக்குஎன்னஅர்த்தம்என்றுஎனக்குதெரியாது. ஆனால்இப்போதுள்ளநிலையில்ஒன்றுமட்டும்புரிகின்றது

Inception : கனவுத்திருடர்கள் விட்டுச்சென்ற வினாக்களும், சில பிரமிப்புகளும்

Image
Inception திரைப்படம் நேற்று “ கனவு வேட்டை” என்ற பெயரில் தமிழில் பார்க்க கிடைத்தது முன்பு ஆங்கிலத்தில் பார்த்திருந்தாலும் தமிழ் பெயர்ப்பு இன்னும் பட்த்தினை சுவாரசியப்படுத்தியதாகவே எனக்குப்பட்ட்து. இப்படி ஒரு நுண்ணிய கதைக்களம், நுட்பமான கரு என படம் பிரமிக்க வைக்கின்றது. பதிவுலகம் ஏற்கனவே இப்பட்த்தினை போட்டு தேய்த்து எடுத்துவிட்ட்தால் நான் விமர்சனம் செய்ய் வரவில்லை. அதன் அனுபவம் எனக்கு புதிய ஒன்றாக இருக்கின்றது/ இருந்து கொண்டிருக்கின்றது.

எந்த ஒரு கலைப்படைப்பும் வாசகனை/ ரசிகனை தாக்க வேண்டும். அதனால் அவன் சூழப்பட வேண்டும். அந்த வகைஇல் ஒரு ரசிகனாக இத்திரைப்படம் எனக்கு அவ்வனுபவத்தை தந்தது.

உள்ளே….உள்ளே இறங்கிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு திரைப்பட்த்தினை காணும் போது ஏற்பட்டது. கனவு, கனவுக்குள் கனவு. அதற்குள் ஒரு கனவு. அப்ப்ப்பா!!!!!!!!! மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். இப்போது ஆங்கிலத்தில் பார்த்தால் ஓரளவு கதையினை தொடராலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

சாதாரணமாக நாம் காணும் கனவுகள் அடிமனதின் ஆசைகள் அல்லது எண்ணங்கள். ஆகவே அது தனி ஒருவரின் பிரத்தியேகமான விடயம். ஆகவே அதனை திருடலாம் என்ற சிந்தனை சுவார…