தமிழ்மன்றில் பாரதி என்ற புனைப்பெயரில் எழுதி வரும் முருக பூபதி அண்ணாவினை சந்தித்தேன். எவ்வளவு இனிமையன மனிதர்! எளிமையான அர்த்தமாக பேசுகின்ற விடயங்கள் இன்னும் அவரோடு பேச வேண்டும் என்று தோன்றியது. விருந்தோம்பலில் கூட மனிதர் எவ்வளவு அக்கறை. கொஞ்சம் சுகவீனத்துடன் இருந்தேன். கூடவே கூட்டிச்சென்று மருந்து வாங்கித்தந்த்திலிருந்து ( பங்கஜ கஸ்தூரி.. ) சங்கீத சைவ உணவகத்தில் பஞ்சாபி “தாலி” சாப்பிட்டது வரை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே நாளில் முதல் அறிமுகத்தில் இவ்வளவு விருந்தோம்பலோடு கவனிக்க முடியுமா? இன்னும் நான் அவரின் கவனிப்புக்களில் இருந்து விலகவில்லை. பிரியாவிடை பெற்று அறைக்கு வந்து சேருமுன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேனா என அழைத்துக் கேட்டதில் இருந்த அக்கறை! அண்ணா! அண்மையில் என்னை வியக்க வைத்த மனிதர்களில் நீங்கள்தான் பெஸ்ட். இப்படி ஒரு உறவினை ஏற்படுத்தித் தந்த மன்றிற்கு மீண்டும் ஒரு சல்யூட்.
nick vujicic என்ற மனிதர் பற்றிய வீடியோ ஒன்றினை காண நேர்ந்தது. கொஞ்ச நேரம் உறைந்து போய் உட்கார்ந்து விட்டேன். நாம் எந்தளவு அவநம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்பதை எண்ணும் போது வெட்கமாக இருந்தது. கைகளோ காலோ இல்லாத அந்த மனிதரின் தன்னம்பிக்கை மலைக்க வைக்கின்றது. பார்த்து முடிந்த பின் உலகில் முடியாது என்பது எதுவுமில்லை என்று எனக்கு தோன்றியது. நிச்சயமாக உங்களுக்கும் தோன்றும் இவ்வாறான மனிதர்களால்தான் கொஞ்சமாவது தன்னம்பிக்கை பிறக்கின்றது.
இலங்கையில் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் உரிமைகள், அவர்களது பிரச்சினைகளினை தீர்ப்பதற்காக ( ??? !@#@ ) ஆளுங்கட்சிக்கு தாவியுள்ளதொடு அமைச்சுப் பதவிகளினையும் பெற்றுள்ளது. இனி இலங்கை முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். போனமுறை மாறும் போதும் இதைத்தானே சொன்னார்கள் என திருப்பிக் கேட்க்ககூடாது.. அது போன மாசம்.. இது இந்த மாசம்..
புத்தகங்கள் பற்றி யாருக்கு தெரியும்/ கழுதைகள் அறியாதல்லவா? அதுதான் ஒரு முறை நடந்தது. மத்தியகிழக்கு நாடுகளின் பிரம்மச்சாரிகளின் ஒட்டுக்குடித்தன வாழ்க்கை பற்றி சொல்லத்தேவை இல்லை. அப்படி ஒரு அறையில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பெருமதி மிக்க புத்தகங்களினை, அறையில் வசிக்கும் இன்னொரு வெங்காயம் அறையினை சுத்தம் செய்கின்றேன் பேர்வழி என அள்ளி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தனக்கு சொந்தமில்லா பொருட்களை எதற்கு நாம் சீண்டுவான் என்ற பொதுப்புத்தி அற்று அனைத்து நூற்களும் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டன. எப்படி ஆத்திரம் வரும். ஆனாலும் எதுவும் செய்யமுடியாது! குப்பைத் தொட்டிக்குள்ளும் அவை இல்லை. யாரோ எடுத்துச்சென்றுவிட்டார்கள். ஒரு பகலின் அரைவாசியினை அக்குப்பைத்தொட்டி அருகே கழித்தும் அந்நூற்கள் கிடைக்கவில்லை. கழுதைகள் அறியாது நூற்களின் அருமை பற்றி..
வீதிக்கடவைகளினை கடக்க முயலும் போது, வாகன ஓட்டுனர்களின் பிரதிபலிப்புகளினை கவனிப்பது இப்போது எனக்கு ஒரு பழக்கமாக தொற்றிக்கொண்டுவிட்டது. சிரிப்பாக இருக்கின்றதா? இல்லை உண்மையாகத்தான் சொல்கின்றேன். மிக சுவாரசியமாக இருக்கும். சிலர், வாகனத்தினை மெதுவாக நிறுத்தி மிக்க பணிவாக கைகளினை உயர்த்தி காட்டுவர். அவர்களுக்கு நாமும் ஒரு புன்னகையோ , சிறு கையசைப்போ செய்துவிட்டு செல்வேன். சில நாட்களில் காலையில் இவ்வாறான நிகழ்வு நடக்கின்ற போது அன்றைய நாளே மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வேன். இன்னும் சிலர், ஏதோ மந்தைகளை நோக்குவது போல கைகளினை அசைப்பர். முகத்தில் தெரியும் அலட்சியம், அவசரம், வீதியினை கடக்கும் பாதசாரிகள் ஏதோ அற்பங்கள் என நோக்குவது போல இருக்கும். அன்றொருநாள் , ஒரு பிலிப்பினி காரின் உள்ளிருந்து எதோ ஆடு மாடுகளினை விரட்டுவது போல கையினை அசைத்துக் கொண்டிருந்தான் முகம் விகாரமாக இருந்தது. அவனைப்பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. இறங்கி வரமாட்டான் என்று உறுதி செய்து கொண்டே, பாதையினைக் கடக்கும் போது நடுவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு வந்தேன்… ஹா…..ஹா…….
2 comments:
nalla sinthanai parattugal vazhththugal
polurdhayanithi
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்.
Post a Comment