Wednesday, November 10, 2010

அலுவலக பரபரப்பினை ஆசுவாசப்படுத்தும் ஆங்கில கேலிச்சித்திரங்கள். தமிழில் எப்போ??

காலைப்பரபரப்புக்கள் எல்லாம் முடிந்து கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கொள்ளும் அவகாசம் காலை வேளைகளில் ஒரு 10 மணியளவில் கிடைக்கும். ஒரு கப் தேனீரோடு, பத்திரிகையினை புரட்டுகின்ற நேரம் அது.


செய்திகளினை பார்க்கும் முன் நான் பார்க்கின்ற ஒன்று, கார்ட்டூன்கள்/ கேலிச்சித்திரங்கள், மிக இயல்பான நகைச்சுவையோடு காணப்படும் அக்காமிக்ஸ் கார்ர்ட்டூன்கள் முழு நாளினையும் இயல்பாக்குவதாக நான் உணர்கின்றேன்


எளிய ஆங்கில நடையில் அதில் காணப்படுகின்ற எள்ளல் நினைத்துச்சிரிக்கும் ரகம்.. Garfield, The Wizard of ID, Andy Capp , Calvin and Hobbes, Dilbert என்பன இங்குள்ள பத்திரிகைகளில் வெளிவருகின்ற எனக்குப்பரிச்சயமான காமிக்ஸ் கேலிச்சித்திரங்கள், Nancy என்றொரு காமிக்ஸ் கேலிச்சித்திரம் பற்றிய நினைவுகளும் உண்டு.

Garfield ஒரு சோம்பேறிப்பூனை, அதன் உரிமையாளச் சிறுவனும் அப்பூனை போலத்தான். Jon Arbuckle அவனது நாய் Odie என்பவற்றின் அதகளம்தான் Garfield காமிக்ஸ். அப்பூனையினால் Jon படும் பாடுகள். அச்சோம்பேறி பூனை அவன் வளர்க்க முனையும் மீனினை லபக்கும் முயற்சிகள், Garfield க்கும் எலிகளுக்கும் இடையிலான நட்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயத்துடன் மிக ரசனையான ஒரு காமிக்ஸ் இது. தற்போது Garfield ஒரு வியாபார சின்னமாகி பொருளாதார ரீதியிலும் முக்கியம் பெற்றுள்ளதாக தெரிகின்றது.


அதேபோலத்தான்  The Wizard of ID, ID எனும் கற்பனை ராச்சியத்தை ஆளும் மன்னர் மற்றும் அவரது பிரதானிகள் என நகைச்சுவையாய் செல்கின்றாது. இவர்களின் ராச்சியத்தினை எதிர்து போர் புரியும் இன்னுமொரு காட்டுவாசிகள் குழுவ்க்கும் இவர்களுக்குமான போர்கள், மன்னர் மக்களுக்கு விதிக்கும் சட்டதிட்டங்கள்என அனைத்தும் கேலியின் முழு வடிவம். ID மன்னரின் மந்திரவாதியினால் நடாத்தப்படும் பரிசோதனைகள் இன்னும் சிரிப்புத்தருகின்றன.



Andy Capp ஒரு சோம்பேறி கணவனும் அவரது மனைவி பற்றிய கேலிச்சித்திரம்.. எப்போதும் பார் தூக்கம் என்றிருக்கும் அவர், வீட்டு வேலை இடைக்கிடையே தனது அழகு என்பன பற்றிய கவலை கொள்ளும் அவர் மனிவி என செல்கின்றது இது. மனைவி வேலையில் மூழ்கி இருக்க, அவரோ ஷோபா வில் துன்ங்கிக்கொண்டோ குடித்துக்கொண்டோ இருப்பார். அதோடு இல்லாமல் அவர் கொடுக்கும் கமண்டுகள் சிரிக்க விஅக்கும். இக்கேலிச்சித்திரங்களை காணும் போது எமது சமூகத்தின் கணவன் மனிவி உறவு, ஆண் மேலாதிக்கம் பற்றிய சிந்தனைகள் கொஞ்சம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியாதுள்ளது.




Calvin and Hobbes பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கலாம். Calvin 6 வயது சுட்டி, சுட்டி என்றால், குறும்பு, கொஞ்சம் சோம்பேறித்தனம், சுயநலம், அடாவடி, Creative, சமயோசிதம் என அனைத்தும் கலந்த கலவை. அவனது புலி பொம்மையின் பெயரே Hobbes. அதோடு விளையாடும் போது அதனோடு உரையாடுவான். அதுவும் அவனோடு பேசிக்கொள்ளும். இருவரும் சேர்ந்து Calvin ன் பள்ளி மற்றும் பக்கத்து வீட்டு தோழியான Susie ஐ கலாய்ப்பார்கள். அதோடு, Calvin வீட்டினை ரணகளப்படுத்துவான். அவனது பெற்றோர் படும் பாடுகள் கூட சிரிக்க வைக்கும். மிக ரசிக்கும் படியான Calvin ன் குறும்புகள்.

இவையே என்னை அவ்வப்போது அலுவலக் தொல்லைகளில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுகின்றன.

மேலும் இவ்வாறான கேலிச்சித்திரங்கள் தமிழில் தொடர்ச்சியாக வருகின்றதா என்றால் அது மிக அருமையாகவே உள்ளது. தமிழில் எனக்குத் தெரிந்து, பிரபலமான கேலிச்சித்திர பாத்திரங்கள் ஓவியர் மதனினால் ஆனந்த விகடனில் வரையப்பட்ட சில.. “ ரெட்டைவால் ரெங்குடு” , “முன் ஜாக்கிரதை முத்தண்ணா” , சிம்புத்தேவனின் , இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்றவை மட்டுமே.. அவையும் தற்போது இல்லை..

ஆனால் நான் மேற்குறிப்பிட்ட ஆங்கில கேலிச்சித்திரங்களின் வரலாறுகளை பார்க்கின்ற போது அவை காலம் கடந்து நிற்பது எம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 

மேற்குறிப்பிட்ட அனைத்து கேலிச்சித்திர பாத்திரபடைப்புகளின் வயது 30 வருடங்களினையும் தாண்டியது என அறியமுடிகின்றது. The Wizard of ID 1930 களில் அறிமுகமானது என்பது எவ்வளவு ஆச்சரியமான விடயம். அதிலும் அவை அனைத்தும் இன்னும் சாகாவரம் பெற்று உலவுகின்றன. ஏன் அடுத்த தலைமுறையினையும் அவை குஷிப்படுத்தும் என்பதிலும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்காது. ஆனால் தமிழில்???




3 comments:

Riyas said...

நல்ல பதிவு.. இவ்வாறான நகைச்சுவை சித்திரங்கள் நானும் படிப்பதுண்டு..

ARV Loshan said...

நல்லதொரு பகிர்வு :)

உங்கள் ஏக்கம் சரியே.
தமிழில் நகைச்சுவை உணர்வு குறைவென்பதல்ல, ஆனால் இவாறான தொடர் மெல்லிய கேலிச் சித்திரங்கள் ஏனோ குறைவாகவே இருக்கின்றன.

Calvin and Hobbs , Garfield என்னுடையதும் Favourites:)

LOSHAN
www.arvloshan.com

Admin said...

நன்றிகள் றியாஸ் மற்றும் லோசனுக்கு..

@லோசன் : உங்கள் கருத்த்துச்சரியானதுதான். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.. நன்றி லோஸன்