Inception : கனவுத்திருடர்கள் விட்டுச்சென்ற வினாக்களும், சில பிரமிப்புகளும்
Inception திரைப்படம் நேற்று “ கனவு வேட்டை” என்ற பெயரில் தமிழில் பார்க்க கிடைத்தது முன்பு ஆங்கிலத்தில் பார்த்திருந்தாலும் தமிழ் பெயர்ப்பு இன்னும் பட்த்தினை சுவாரசியப்படுத்தியதாகவே எனக்குப்பட்ட்து. இப்படி ஒரு நுண்ணிய கதைக்களம், நுட்பமான கரு என படம் பிரமிக்க வைக்கின்றது. பதிவுலகம் ஏற்கனவே இப்பட்த்தினை போட்டு தேய்த்து எடுத்துவிட்ட்தால் நான் விமர்சனம் செய்ய் வரவில்லை. அதன் அனுபவம் எனக்கு புதிய ஒன்றாக இருக்கின்றது/ இருந்து கொண்டிருக்கின்றது.


எந்த ஒரு கலைப்படைப்பும் வாசகனை/ ரசிகனை தாக்க வேண்டும். அதனால் அவன் சூழப்பட வேண்டும். அந்த வகைஇல் ஒரு ரசிகனாக இத்திரைப்படம் எனக்கு அவ்வனுபவத்தை தந்தது.


உள்ளே….உள்ளே இறங்கிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு திரைப்பட்த்தினை காணும் போது ஏற்பட்டது. கனவு, கனவுக்குள் கனவு. அதற்குள் ஒரு கனவு. அப்ப்ப்பா!!!!!!!!! மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். இப்போது ஆங்கிலத்தில் பார்த்தால் ஓரளவு கதையினை தொடராலாம் என்ற நம்பிக்கை உள்ளது.


சாதாரணமாக நாம் காணும் கனவுகள் அடிமனதின் ஆசைகள் அல்லது எண்ணங்கள். ஆகவே அது தனி ஒருவரின் பிரத்தியேகமான விடயம். ஆகவே அதனை திருடலாம் என்ற சிந்தனை சுவாரசியமான ஒரு திரைப்படத்தினை தயாரிக்க மூலமாக இருந்திருக்கலாம். அதன் உள்ளடக்கங்கள் மிக மிக நுண்மையாக உள்ளது.


இத்திரைப்படத்தினை பார்த்த பின் பல கேள்விகள் ஓடி மறைகின்றன. அதில் முக்கியமான ஒன்று – இப்படியான கனவுத்திருடர்கள் உண்மையில் இருக்கின்றார்களா?? இருந்தால்…. எப்படியானவர்கள் அவர்களின் இலக்காக இருப்பார்கள். சிந்திக்கும் போது கிர்ர்ரென்று சுத்துகின்றது.


திரைப்படத்தில் வரும் அவர்களின் இலக்கான பிஸர் ன் ஆழ்மனத்துக்குள் நுழைய முயயற்சிக்கும் போது, அங்கு அவனால் உருவாக்கப்பட்ட அவனது உள்ளுணர்வுகள் இவர்களுக்கு எதிராக திரும்புவதும். இவற்றை எல்லாம் எதிர்பார்த்து முன்னரே பயிற்றப்பட்ட ஒரு நபராக பிஸர் காட்டப்படுவதும் திடீர் திருப்பம். இங்கும் ஒரு கேள்வி முளைக்கின்றது. அப்படியானால், கனவுகள் திருட்டப்படலாம் அல்லது தமது உள்ளுணர்வை பிறர் ஆக்கிரமிக்கலாம் என எண்ணும் பெரிய பண முதலைகள், உலக தலைவர்கள் அதற்கென விசேட பயிற்சிகள் ஏதும் பெற்றுக்கொள்கின்றார்களா?


ஆழ்மனத்தினை அடக்க, தனது கட்டுப்பாடுக்குள் வைத்திருக்க முடிகின்ற ஒரு செய்ன் முறை/ அல்லது சக்தி பற்றிய ஒரு பகுதியை இப்படம் தொட்டுச்செல்கின்றது. அவ்வாறு செய்ய முடிகின்றவர்கள் தங்களது கனவினை தாங்களே வடிவமைத்துக் கொள்கின்றார்கள். அதைத்தான் கோர்ப் செய்கின்றான் அவனது மனிவிக்கும் அவனுக்குமான பிரத்தியேக உலகினை சிருஸ்டித்து வாழ்ந்ததாக கூறுகின்றான். கனவுலகம் கனவுலகம் என நம் கவிஞ்சர்கள் எழுதும் சரக்கு இதுதானோ??


ஒருவரின் கனவிற்குள் மற்றொருவர், அதுவும் அற்முகமான ஒருவர் நுழைந்து அவருக்காக உதவுவது. கோர்ப் கூட இருக்கும் அப்பெண் செய்கின்றாள்.


நேரம் பற்றி கொடுக்கப்படும் வியாக்கியானக்களும் சற்று ஆச்சரியப்பட வைக்கின்றன. கனவில் பல மணிகளாக காணப்படும் காலம் நிஜ உலகில் மிகக்ககுறுகிய ஒரு கால இடைவெளியாக இருக்கின்ரதாக சொல்லப்படுகின்றது. மூளையானது ஓய்வில் இருக்கும் போது மிக வேகமாக செய்ற்படுவதாக சொல்லப்படுகின்றது. அதிலும் கனவிற்குள் அவர்கள் காணும் கனவில் பாலத்திலிருந்து வாகனம் விழுகின்ற ஒவ்வொரு அசைவிற்குள்ளும் நடந்தேறும் சம்பவங்கள். சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த கணங்கள்..


கனவில் இருந்து விழித்தெழ, கனவுலகில் உயிரைப்போக்குவது யுக்தியாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் ஆழ் உறக்க நிலையில் கன்வுக்குள் கொல்லப்படும் நபர் நிஜ உலகில் வேறொரு நினைவலகளால் தாக்கப்பட்டு, நிஜ உலகினை நம்ப மறுக்கலாம் ( கோர்ப் ன் மனைவிக்கு நடந்தது போல.. ) அதனை லிம்போ என குறிப்பிடுகின்றான் நாயகன்.  இந்த லிம்போ என்பது கோமா நிலையா? அப்படியானால் அவர்கள் வேறொரு உலகில் வாழ்கின்றார்களா?


கடைசிக்காட்சி திரைப்படத்தின் தாக்கம் ரசிகனின் மீதான முழு தாக்கத்தினையும் செலுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கின்றேன். அக்காட்சி முடிந்து திரைப்படம் முடிகின்ற போது ஏற்படுகின்ற ஓர் உணார்வு ஒரு போதும் நான் அனுபவித்தறியாத ஒன்று, திடீரென எங்கிருந்தோ உறக்கம் வந்து என்னைச் சூழ்ந்தது போல இருந்த்து. ஒரு வகையான உணர்வு அதை எழுத்தில் சொல்ல முடியுமா என தோன்றவில்லை.


இது போன்ற ஒரு திரைப்படம் தமிழில் வருமா? என்ற ஏக்கம் கூட இல்லாமல் இல்லை. நாம் இப்போதுதான் விஞ்ஞான புனைகதைகளின் முதல் பக்கத்தினை திறந்துள்ளோம் என்று நான் கூறினால் யாராவது மறுத்துரைப்பீர்களா??
அதோடு இது போன்ற திரைப்படங்கள் தமிழில் வருமானால் வியாபார ரீதியான வெற்றியை பெறுமா என்பதும் கேள்விக்குறி. நாம் இப்போது திறமை கலை என்பதை தாண்டி எவ்வளவு போட்டால் எவ்வளவு கிடைக்கும் என்ற கூட்டல் கழித்தலிலேயே குறியாய் இருக்கின்றோம். ஆகவே இது போன்ற நுண்மையான கதைகள் திரைக்கு வருவது கனவு போலவே தற்போதைய தமிழ் சினிமா சூழல் உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.Comments

THOPPITHOPPI said…
பார்த்திட வேண்டியதுதான்
நல்ல அலசல் ஒன்று அனால் நான் இன்னும் பார்க்கல....
இன்னும் பார்க்கலியா தல/// சீக்கிரம் பாருங்கோ!!!!!!!!!! சூப்பர் படம்

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!