உன் மறதிகளுக்கு என் வாழ்த்துக்கள்


எழுத எண்ணும் எதுவும் தாள்களில் ஒட்டாமல் தூர நிற்கின்றன.
உன் நினைவுகள் போல,

நலமாய் இருக்கும் உன்னிடம் மிண்டு கேட்க எதுவும் இல்லை
இருந்தும் கேட்கின்றேன் – என் தொல்லைகள் இன்றி சுகமாய் இருக்கின்றாயா?
சுவர்க்கோழிகள் கூவும் இரவொன்றில், உன் நினவுகள் என்னைத் தட்டி எழுப்பிற்று.
பெரும் பிரயத்தனங்களுடன் உன் பிம்பம் தேடி கண்களினை இறுக மூடியும்,
எம் காதலின் இறுதி ஊர்வலம் மட்டுமே மீண்டெழுகின்றது.

சொல்ல வேறொன்றுமில்லை,
உன் மறதிகளினை வாழ்த்துவதை தவிர!


Comments

அக்கரைப்பற்று நண்பருக்கு வணக்கம்
நன்றிகள் ஹரீஸ்..

வணக்கம் மகா! நீங்கள் ஆரையம்பதியா? மிக்க மகிழ்ச்சி,, தொடர்பில் இருங்கள்
////சொல்ல வேறொன்றுமில்லை,
உன் மறதிகளினை வாழ்த்துவதை தவிர!///
வாழ்த்துக்கள் சகோதரா என்னை சொல்ல தானே...
THOPPITHOPPI said…
இன்னும் சொல்வேன்...........


சொல்லுங்க
//THOPPITHOPPI said...
இன்னும் சொல்வேன்...........


சொல்லுங்க//

எதுக்கு அவசரம்? அதான் சொல்வேன் என்னு சொல்லி இருக்கேன்ல! சொல்வேன் சொல்வேன்..


நன்றிகள் சுதா!

உம்மைச் சொல்லவில்லை ;)
கண்டிப்பாக கேட்க தயாராயுள்ளோம் சொல்லிக்கொண்டே இருங்க
நானும் உங்கள் பகுதியைச்சேர்ந்தவன்

http://hafehaseem00.blogspot.com/

சொல்லுங்கள்

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.