பதிவுலகில் காப்பி பேஸ்ட் கலகங்கள்


பதிவரசியல் எங்கிறாங்க.. காப்பி –பேஸ்ட் எங்கிறாங்க! எதுவுமே புரியல! இருந்தும் ஏதோ எனக்கு தோண்றத சொல்றன். பெரியவுங்க தப்பா இருந்தா சொல்லுங்கோ. இந்த சிறுவன மன்னிச்சிடுங்கோ!!

ங்கில தளங்களில் உள்ளதை மொழிமாற்றி தமிழில் வெளியிடுவது தொடர்பான ஒரு சர்ச்சை தற்போது தமிழ் பதிவர்களிடையே தோன்றியுள்ளது. இது பற்றிய எனது கருத்துக்க்ளை பதியலாம் என எண்ணுகின்றேன். தகவல்கள் கடத்தப்பட மொழி ஊடகமாக் இருக்கின்றது. இங்கு தகவல் தகவலினை கொண்டு சேர்ப்பவரும் ( வழங்கி ) அதைப்பெறுபவரும் ஒத்த அலைவரிசையில் இருக்கும் பட்சத்திலேயே அந்த செயன்முறை பூர்த்தி அடைகின்றது / வெற்றி பெறுகின்றது. இங்கு ஒத்த அலைவரிசை என்பது என்னைப்பொறுத்த வரையில் மொழி. அது தெளிவு. ஆகவே கிடைக்கும் தகவல்களினை மற்றவர்களும் பயன்படும் நோக்கில் பொதுவான ஒரு அலைவரிசை ஊடாக மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தவறு எதும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் எனில் தாய்மொழியில் ஒரு விடயத்தினை விளங்குகின்ற / கிரகிக்கின்ற வேகம், ஏனைய இரண்டாம் மொழிகள் மூலம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

அந்த வகையில் பதிவர் சசி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை. பதிவுகளினைஇடுவதில் ஒவொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. சிலர் சமூக ரீதியான விடயங்களை  தொடுகின்றனர். சிலர் நகைச்சுவை, இன்னும் அனுபவம், விளையாட்டு என பல. அந்த வகையில் தொழில் நுட்ப ரீதியான விடயங்களை இலகுவாக்கி தருவதில் பதிவர் சசியின் வலைப்பூ மிக உதவியாக உள்ளது. அவர் சொல்வது போல தொழில்நுட்ப விடயங்களினை புதிதாக கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றால் நடக்க கூடிய சாத்தியமா? இல்லவே!!

ஆனால், மறுதலையாக இந்த காப்பி – பேஸ்ட் ஒருவரின் இலக்கிய படைப்பு தொடர்பில் நடைபெறுவது மன்னிக்க முடியாத ஒன்றாகிவிடும். ஏனெனில் அது ஒருவரின் படைப்பு அதற்கு உரிமை கொண்டாடக்குட்டியவர் உரிய படைப்பாளி தவிர்த்து யாருமில்லையே! எனவே அவரி சிந்தனையை / எண்ணங்களினை அனுமதியின்றி இன்னொருவர் பயன்படுத்த முனைவது மிக கீழ்த்தரமான விடயம். சிந்தனை வரட்சி வந்துவிட்டால் எழுதுவதை நிறுத்தலாம். அதையும் மீறி எழுத வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தால், தனது குறைகளினை நிவர்த்தி செய்து பின் தனது முயற்சியில் எழுத முயல வேண்டும். அது மொக்கையோ, சப்பையோ அது பற்றிய தீர்ப்பினை ஏனையோரிடம் விட்டுவிட வேண்டும். ஒரு நாளும் பிறந்த குழந்தை உடனே எழுந்து நடந்துவிடுவதில்லை அல்லவா?

ஆகவே நண்பர்காள்! பிணக்குகள் மறப்போம்.. ப்ரியம் வளர்ப்போம்.

ஏதாவது தப்பா இருந்தா மன்னிச்சூ…………………..Comments

ஆறுதலுக்கு மிக்க நன்றி நண்பா.
இப்போதைக்கு தேவையான பதிவு
Rosee said…
களவு செய்தாலும் பிடிபடாமல் செய்ய வேண்டும்.

சில செய்திகளை வாசித்துவிட்டு அதை உங்கள் வரிகளில் எழுதினால் அது சில வேளைகளில் முதல் இருந்ததிலும் பார்க்க நன்றாக, விறுவிறுப்பாக இருக்கலாம்.
எனவே சித்திகள் மற்றும் பொதுவான தகவல்களை மீள எழுதலாம். ஆனாலும் அப்படியே கொப்பி - பேஸ்ட் செய்யாதீர்கள்.

கவிதைகள், கதைகள் மற்றும் ஏனைய கலைப்படைப்புகளை எதுவுமே செய்யாதீர்கள். உங்கள் தளத்தில் பிரசுரிக்கத்தான் வேண்டுமென்றால் முன் அனுமதி பெறத்தான் வேண்டும். அப்படிப் பெற்றாலும் உரிமையாளரின் பெயரையும், அவரின் தளத்திற்கு செல்ல இணைப்பையும் வழங்குங்கள். அல்லது, குறித்த பதிப்பின் முதல் ஓரிரு வரிகளை கொடுத்துவிட்டு, பிடித்திருந்தால் மீதியை வாசிக்க அப்பதிப்பு உள்ள தளத்திற்கு செல்லுமாறு, உங்கள் வாசகர்களை கேளுங்கள். இது, அக் குறிப்பிட்ட பதிப்பிற்கு ஒரு கூலியில்லா விளம்பரம் போல இருக்கும்.

தமிழ் சினிமா பக்கங்கள்
தேவையான பதிவு.

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.