நீண்ட நேர போராட்டத்திற்கு
பின் அழைப்புக்கு வந்தான் அவன்,
“குட் மோர்னிங்க்
சேர்! ஐ அம் கோலிங்க் ப்ரம் xxxxxxx கம்பனி, இஸ் தேர் எனி செக் போர் அஸ்?”
என்ற என் பணிவான
குரலுக்கு
“ நோ “ என்றவாறு
பதிலுக்கு காத்திராமல் தொலைபேசி அறைந்து சாத்தப்பட்டது.
என்ன செய்வது…
பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். பொங்கினால் வீட்டில் உலை பொங்காதே!
எங்களது , Receivable
கணக்காளர் வராத தருணங்கள் எனக்கு சத்திய சோதனைதான். பொறுமைக்கான பரீட்சை.. நிறைய நேரங்களில்
சித்தியடைந்தாலும், இன்றைய சம்பாசனை என்னை மஞ்சள் விளக்கிற்கு தள்ளிவிட்டது.
மாதம் மூன்றாகியும்
இன்னும் அவர்கள் தங்களது கொடுப்பனவை முடிக்கவில்லை என்பதால், எனது மனேஜர் மொத்தமாக
அனைவருக்கும் சேர்த்து கத்திக்கொண்டிருந்தான் (ர்).
இதே கத்தலை கஸ்டமிரிடம்
கத்திப்பார் என சொல்ல தோன்றினாலும் எதிர்கால தொழில் ஸ்திரம் கருதி விட்டுவிட்டேன்.
அது நடக்காது என்பது தெரியும்தானே! நேரத்திற்கு கொடுப்பனவுகளை தராவிட்டாலும் ஒரு நல்ல
கஸ்டமரை இழக்க இவர்கள் விரும்பமாட்டார்கள்.
இன்றைய நாள்..
ஆற்றாமையுடனே விடிந்துள்ளது.
திடீரென, எனது
இன்ரகொம் அலற,
எதிர்முனையில்,
“ ஹலோ சர்ஹூன், மிஸ்டர் xxx , ப்ரொம் XXXXXX கொம்பனி” என்றது பிலிப்பினியின் குரல்.
தொடர்பை இணைத்தேன்.
“ஹலோ சேர் , குட்
மோர்னிங்க், ஐ அம் கோலிங்க் ப்ரம் XXXXX கம்பனி,
இஸ் தேர் எனி பேய்மன்ட் ?” என்றது எதிர்முனை.
கம்பெனி பெயரினை
திரும்பவும் உறுதிப்படுத்திய பின் , கணினி மூன்று மாதத்திற்கு மேல் நிலுவை உள்ளதாக
காட்டியது.
அதோடு ஒரு மாதம் முன்பு வரைந்த கசோலை இன்னும் எனது முகாமையாளனின் அனுமதிக்காக
காத்திருப்பதாக மேலதிக தகவல் சொன்னது.
எதிர்முனைக்கு
என்ன பதில் சொல்வது??
“ஹலோ”
“எஸ் ஸேர்” எதிர்முனை
ஆவலுடன் உயிர்ப்பானது.
“நொற் யெற் ரெடி”
என்றவாறு ரிசீவரினை அறைந்து சாத்தாமல், மெதுவாய் துண்டித்தேன்… இது மாத்திரம்தான் என்னால்
முடிந்தது..
இப்போது , அவனது
முறை…
1 comment:
good story but expected climax.
---
Ramesh
Post a Comment