7,000,000,000 : நீருக்காக சண்டையிட தயாராகுங்கள்..


இன்றிலிருந்து உலகின் சனத்தொகை இதுதான்- 700 கோடி!!! ஒவ்வொரு முறையும் சனத்தொகை கோடிகளைக் கடக்கின்ற தருணங்களில், அனைவரும் பேசுகின்ற விடயங்கள்,
     
வளப்பற்றாக்குறை.


இதோ இப்போதும் ஆரம்பித்துவிட்டது. இன்றைய நாளிதழ்கள் அனைத்தினை திறந்தாலும் இதுவே செய்தி / தலைப்பு புள்ளிவிபரங்கள் , படங்கள், எதிர்வு கூறல்கள் ,அறிஞர்களின் கருத்துக்கள் என அமர்க்களப்படுகின்றது. இவை எல்லாம் ஒரு வித திருவிழா மூட் போல, இரு தினங்களுக்கு பின் அனைத்தும் மறந்து அவரவர் அன்றாட தலையிடிகளுக்குள் அடங்கிவிடுவோம்.

வளப்பற்றாக்குறை தொடர்பான கவலை நமக்குள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது. அதற்கு காரணம். வளம் தொடர்பான நமது கண்ணோட்டம். தண்ணீர் ஒரு வளம் என்றால், நமது ஊர்களில் என்ன சொல்லுவார்கள்?? சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் இப்போது மிக முக்கியமாக பேசப்படும் வளப்பற்றாகுறைகளில் நீர்வளம் தொடர்பான பிரச்சினைகள் முதன்மை பெறுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி,
     
  • நீர் வளப்பற்றாக்குறையினால் உலகில் உள்ள சனத்தொகையில் மூவருக்கு ஒருவர் பாதிக்கபடுகின்றனர்.
  • கிட்டத்தட்ட 1.2 Billion உலக சனத்தொகையினர் நீரினை பெற்றுக்கொள்வதில் பௌதீகரீதியான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
  • அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் உலக சனத்தொகையின் காற்பங்கு மக்கள், அங்குள்ள, சீரற்ற உட்கட்டுமானங்களினாலும், இன்ன பிற குறைபாடுகளினாலும் நீரினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
  • மேலும், சுத்திகரிக்கப்படாத , சுகாதாரமற்ற் நீரினை குடிநீராக பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர்.என உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் சுகாதாரமற்ற நீரினை அதிகமான மக்கள் குடிநீராக பயன்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது. சூடானில் 12.3 மில்லியன் மக்கள் இவ்வாறான நீரினையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுத்தமான குடிநீரினை பெற இப்போது உலக நாடுகள் பல்வேறு திட்டங்களையும் நிடியினையும் செலவிட்டு வருகின்றன. இஸ்ரேல் சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற நாடுகள் வடிகட்டல் செயன்முறக்கான பெரிய கூடங்களை நிறுவி தமது நீர் வள நெருக்கடிக்கான குறைந்தளவான மாற்றீடுகளை பெறமுயற்சிக்கின்றன. இதே போல் இந்தியா சீனா போன்ற நாடுகளும் இவ்வாறான செயன்முறைகளில் கவனம் செலுத்தி வருவதோடு சிறியளவில் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கான மூல காரணம் வளத்தட்டுப்பாடே,
கிணற்றிலிருந்து சும்மாதானே கிடைக்குது என நாம் எண்ணிக்கொண்டால் அது மிக தவறு. அதுவும் ஒரு வளம் என்பதை புரிந்து இனி வரும் நாட்களில் சிக்கனாமாக செலவளிப்போம்.

எனவே தோழர்களே நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~

இனி வரும் காலங்கள் யுத்தங்களுக்கான காரணம் எண்ணை என்பதை தாண்டி நீராக இருக்கலாம் என யாரோ சொன்னது நினைவு கூரத்தக்கது.

நன்றி – WHO , Wikipedia .Google


Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!