இது எங்க தமிழ்… நீ உள்ளே வராதே!!!!!!!!!வெண்ண..
ங்கொய்யால..
ஆணி புடுங்குறது..
போடாங்க்..
ஆட்டைய போடுறது
ஜொள்ளு
லொள்ளு
கலாய்க்கிறது
கும்முறது.

தெல்லாம் என்ன எங்கிறீங்க… நம் மக்கள்ஸ் அன்றாடம் பாவிக்கின்ற வார்த்தைகள்தான். வலையுலகம் பரிச்சயமானவர்களுக்கு இவை ஒன்றும் புதிதல்ல. ஏன் தமிழ் சினிமாக்களில் கூட இவை புழக்கத்தில் அதிகமாகவே உண்டு. இவற்றிற்கெல்லாம் அர்த்தம்!!!!!!!!!!!! விளக்கம் !! தெரியாது. ஆனாலும் சில இடங்களில் இவற்றினை சொல்லும் போது அதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பொருந்திப்போகின்றது.

சில வேளைகளில் இவை பகிடி போல தோன்றினாலும், பல நேரங்களில் இது போன்ற வார்த்தைகளின் நதி மூலம் ரிஷி மூலம் பற்றி எல்லாம் மண்டையினை போட்டு உருட்டி இருக்கின்றேன், ஆனாலும் பலன் பூச்சியம்தான். 

எனது முன்னறையில் தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் இது பற்றி நேண்டலாம் என பேச்சுக்கொடுத்தேன்.

“றாசில்!”

“என்ன சொல்லுங்க?” என்றார்.

“வெண்ண என்டா என்ன?” எனக் கேட்ட என்னை மேலும் கீழுமாக ஒரு மாதிரி பார்த்தார்.

என்னடா தப்பா கேட்டுட்டோமா என யோசித்துக்கொண்டே, “ இல்ல, இந்த சினிமாக்களில, எல்லாம் ஏசுறதுக்கு வெண்ண என்டு சொல்லுவாங்களே அதான் கேட்டேன்” என்றேன்.

அவருக்கும் சரியாக விளங்கவில்லை என்பது அவரின் குழப்பமான பார்வையிலேயே புரிந்தது. “ வெண்ண ன்னா………… ச்சும்மா சொல்றதுதான்..” என்றவாறு இழுத்தார்.

சரி அவருக்கும் விளக்கம் தெரியவில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

திடீரென கனவில் இருந்து விளித்தவர் போல, “ ஏசுறதுன்னா என்னங்க?” என்று என்னை நோக்கி ஒரு கேள்வியினை எறிந்தார்.

‘கிழிஞ்சது போ!!’ என மனதுக்குள் எண்ணியவாறு, 

“திட்றது” என பதில் சொன்னேன்.

இதன் பின் அவரிடம் சொல்லுக்கு விளக்கவுரை கேட்பதை நிறுத்திவிட்டேன். நாம ஏதாவது கேட்கப்போய், அவருக்கு அதில் ஏதாவது சந்தேகம் வந்து, திரும்ப அதை அவர் நம்ம பக்கம் திருப்பி விட்டார் என்றால்…. இந்த வினையே வேண்டாம்.

புதிதாக வந்த தமிழ் சினிமா ஒன்றில், ஒரு இன்ஸ்பெக்டர் ஒருவர், “ அம்மா வை சொல்ற ஆத்தா எங்கிற வார்த்தையையே கெட்ட வார்த்தையாக்கினவங்கதானேடா “ எனப்பொருள்பட சொல்லுவார். அவர் குறிப்பிடுவது சென்னைத்தமிழை என நினைக்கின்றேன். அது உண்மைதான் என்பது எனக்கு அந்த வார்த்தையினை சிலர் இங்கு பிரயோகிக்கும் போது புரிந்தது. “ அம்மா” என்பதைல் உள்ள பரிவினை விட “ஆத்தா” என்பதில் உள்ள பிடிப்பு , பரிவு மிக அதிகமாக இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. ஆனாலும் அதை கெட்ட வார்த்தையாக பிரயோகிகின்றோம் எனும் போது கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருக்கின்றது அல்லவா??

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், கொஞ்சம் கலப்படமின்றி தமிழில் பேசுகின்ற இலங்கையர்களும் இப்போது, தமிழ் சினிமாவின் உபயத்தால் இது போன்ற வார்த்தைகளுக்கு பழக்கமாகிவிட்டனர். அது எமது பதிவுலகு வரை நீண்டுள்ளது. இது ஒரு குறை என்று சொல்லவில்லை, அதன் பாதிப்பு பற்றி பதிவு செய்கின்றேன் அவ்வளவே..


Comments

Niroo said…
நயனா நீ ஒன்னியும் மேர்சலவாத .
//நயனா நீ ஒன்னியும் மேர்சலவாத//

நயன் எதுக்கு மெர்சலாவுறா???

ஹா...ஹா...

( வருகைக்கு நன்றி சகா! )
Niroo said…
நயனா மீன் பிரதர்
ஹி.ஹி இந்த தமிழுக்கு இன்னொரு பேரு இருக்கு.. அதான் செந்தமிழ்..
:-)
// ஹி.ஹி இந்த தமிழுக்கு இன்னொரு பேரு இருக்கு.. அதான் செந்தமிழ்..
:-) //

ஓ!!! இதானா அது.. இவ்வளவு நாளும் தெரியாம போச்சே சகா!!
ஒண்ணுமே புர்ல தலீவா...

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!