Sunday, June 20, 2010

யூனிவர்சிட்டி போன முதல் நாள்

போறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு..... 

அப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம். பாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான்.

பாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான்? இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்? என்ற என் ஈனக்குரலுக்கு, திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.

ஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....

பல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள் வருமுன் அனுப்பமாட்டானா என நேர ஆரம்பிக்கும் போது எல்லாம் முடிந்து விட்டது. கிட்ட வந்துட்டானுகள். இனி ஒண்டும் நடக்காது. சலாம் வரிசைதான் என எண்ணி திரும்பினால்.................

அட! நம்ம ஜாதி...... சே! அப்பாடா!...ம்...போடாங்.... மனசுக்குள் ஆயிரம் பீலிங்க்ஸ் ஓடி மறைந்தது..
நீங்களும் பெஸ்ட் இயரா? நாங்களும்தான்.. உள்ள தனிய போக பயமா இருக்கு அதான் உங்கள கூப்பிட வந்தம்.. என்றான் வந்தவர்களில் ஒருவன் ( அவன்தான் சம்மாந்துறை சறூக்- பிற்காலங்களில் எனது வலது கை இடது கை. எல்லாம். பிற்காலங்களில் கென்ரீனில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் அவனை கொறிப்போம்)

அஸ்கரினை பார்த்தேன்.... தற்காலிக நிம்மதி .........

பக்கத்தில் இருந்த ஆட்டோவினை வாடகைக்கு அமர்த்தி உள்ளே போனோம்.
__________________

No comments: