என் முதல் பிரமிப்பு நீதான் அப்பா

உனக்கு என் அக்காள்கள் வைத்த பெயர்-
அவனின் புகார் பெட்டி.
இன்றுவரையிலுந்தான்.

அம்மா சொல்வாள்
இப்பவும் குழந்தைப்பிள்ளையா அவன் என...
நீ சிரிப்பாய்.
அப்போது உன் கண்ணில் மின்னும் ஒளி 
இன்றுதான் அதன் அர்த்தம் புரிகிறது.

எல்லோருக்கும் சம பங்கு
என்னைத் தவிர..
உன்னதும் எனக்குத்தானே...

கண்டிப்பான கணக்கு வாத்தியார்- பள்ளியிலே
ஆனால் எனக்கும்..
நீ ஆசான் தான்
எத்தனை பாடங்கள் உன்னிடமிருந்து கற்றேன்?

உன் கைகள் தலையணையாகி,
உன் அருகில் தூங்கிய நாட்கள்

எப்போதாவது அடித்துவிட்டு,
இரவு முழுதும்
தூக்கம் மறந்து முற்றத்தில் உலவுவாய்..
அதன் பின்னும் 
என் கோபம் மறைய நீ செய்யும் பிரயத்தனங்கள்.

என் முதல் பிரமிப்பு நீதான் அப்பா
உனக்கான உன்னதங்களில்
நான் பொக்கிழம்.
எனக்கு தெரியும்
உனக்காக நான் செய்வதெல்லாம் ஒரு பிரார்த்தனை
என் இறைவனே!
அவரை என்னோடு இருக்க வை.
என் ஒரே ஒரு தோழனையும் என்னிடமிருந்து எடுத்துவிடாதே
__________________

Comments

அருமையான கவிதை பாசம் நேசம் அப்பா வாழ்த்துக்கள்...
Riyas said…
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..
வணக்கம்!
உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன்.தந்தை நண்பனாக கிடைப்பது மிக அரிது. அதைப் நீங்கள் பெற்றுள்ளீர்கள். பொறமையாய் இருந்தது.
தொடர்ந்து எமுதுங்கள்

நட்புடன்
சஞ்சயன்

என் அப்பா பற்றிய பதிவுகள்:

அப்பா
http://visaran.blogspot.com/2009/01/blog-post_11.html


அப்பாவும் சைக்கிலும் நானும்
http://visaran.blogspot.com/2010/05/90.html

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!