இனியும் நான் வாழ்வேன்.


இன்னும் எனக்குள் மீதமிருக்கின்றன.
கனவுகளாகவும், லட்சியங்களாகவும்.
உயிர் கழன்று போன பின்னும்,
உன் எல்லைகள் – எங்கள் நிலங்களில்
நிர்ணயிக்கப்பட்ட பின்னும்,
நான் வாழ்வேன்.
உன் திட்டங்களின் எல்லைக்களுக்கப்பால்..

உன்னை விட எனக்கு வாழத்தெரியும் நண்பா,
வீடின்றி, உணவின்றி,
யாதொரு அடையாளம் இன்றிக்கூட..
ஆனாலும், உணர்வுகளுக்கொன்றும் குறைவில்லை.
அதுதான் என்னை சாகடித்தது.
இன்னும் என்னை வாழவைக்கின்றது.
இது – நீ அறியாய். 

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!