நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி!!! கேள்விகள் இதோ!


நம்மவர்களுக்கு ஒலக அறிவு மத்த அறிவு என என்னென்ன அறிவு இருக்கோ எல்லா அறிவையும் தட்டி கொட்டி கொட்டி தொறந்து பார்க்க நம்ம சூர்யா குதிச்சிருக்காரு. என்னா கேள்வி!! என்னா கேள்வி!! ச்சும்மா பார்க்கும் போதே புல்லரிக்குதே!

இனி ஒவ்வொரு தமிழனும் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தோடதான் உலாவ வரும் போல கிடக்கு. என்னவோ போடா மாதவா!!!!

ஆரம்பிக்கும் போது கொடுத்த பில்டப்பு எல்லாம் டப்புக்குத்தான்னு இப்பதானே புரியுது. பைசாதான் மேட்டர் னாலும் அதுக்கு இப்படியா மொளகா அரைக்கிறது?

இது இன்னொரு வகையில் சூர்யாவின் மீது இருக்கின்ற அபிமானத்தை குறைத்துவிடுமோ என்றும் அஞ்சக்கிடக்கின்றது. சிகரம் அறக்கட்டளை” அது இது என ஒரு மாற்று பிம்பம் சூர்யா பற்றி இருக்கும் என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு. இந்நிகழ்ச்சி கொஞ்சம் அல்ல நிறைய அதிர்ச்சிதான்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – கவனமா கீழே உள்ள கேள்விகளைப் பார்த்து, விடைகளை சரியா தயார் பண்ணிக்கோங்கோ மக்கள்ஸ், விடை தெரியாட்டி, பக்கத்துல இருக்கிற லைப்ரரி/ வெப்சைட்/ என தேவையான எல்லா வளங்களையும் பயன்படுத்த தயங்க வேண்டாம். வாழ்த்துக்கள் இனி ஒரு கேடி.. சே!! Sorry… கோடி உங்களுக்குத்தான். ))


திரைப்படத்தின் பெயர் ஒழுங்கு படுத்த சொல்றாரு . இதுக்கு நீங்க பிரிட்டானிக்கா வால்யூம் மூணுல 7 வது சாப்டர ரெஃபர் பண்ணனும்


சே! இதுக்குத்தான் சொல்றது, அனிமல் ப்ளானட் பாரு .. பாரு ன்னு இப்ப கர்சிக்கிற எது ன்னு யாருக்கிட்ட கேப்பேன்!! எங்க பக்கத்து வீட்டு பொடிசு சொல்லுது - சிங்கம் னு. ம்ஹூம்... இத நம்ப நான் ஒன்னும் முட்டாப்பயலா? சூர்யா சாருக்கே தெரியல.. ஏன் அம்மாம் பெரிய விஜய் டீவிக்கே தெரியல இந்த பொடிசுக்கு தெரிஞ்சிருமாக்கும்!!


நாம எல்லாத்துலயும் சொதப்புவோம் னு இத கேட்டிருப்பனுகளோ, அஞ்சாவதா - மேற்கூறிய அனைத்தும் னு ஒரு ஆப்சன் வச்சிருக்கலாம்


என்னத்த சொல்ல!! எங்க ஊர்ல எல்லாம் கால் தீபாவளிதான் இப்பல்லாம். பெற்றோல் விற்கிற வெலைக்கு வெற என்ன செய்றதாம்!!


மெதுவடை ன்னு ஒரு பண்டிகை நாங்க கொண்டார்ரோம் சார் ! இது சலாமியா தேசத்துல வருசத்துல ஒவ்வொரு மாசமும் நடக்கும்.

கேள்விகளை கவனமா பார்த்து விடைகளை அவசரம் இல்லாம நிதானமா கண்டுபிடிங்கோ மக்கள்ஸ்!Comments

நல்ல வேளை...உங்களுக்கு முன்னாடியே இந்த பதிவை போட்டு விட்டேன் ...http://kovaineram.blogspot.in/2012/03/blog-post.html

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!