
Saturday, December 31, 2011
Gulliver's Travels - நேற்றைய மாலைப் பொழுதில்

நேற்றைய விடுமுறையினை சினிமாவுடன் கழிப்பதென
முடிவெடுத்த பின், காணக்கிடைத்த படம் - Gulliver's
Travels. வித்தியாசமான ஒரு திரைப்பட அனுபவம். அதுவும் பழைய
நினைவுகளுடன் பார்க்க வேண்டியதாகிவிட்டது.
பாடசாலைக்கால
நினைவுகளும் இதன் கூட ஒட்டிக்கொண்டது இன்னும் சுவாரசியம். ஆங்கில இலக்கியத்தில்
அப்போதைய பாடத்திட்டத்தில் ஒரு பாடம் Gulliver's
Travels. அது மூலக்கதை.
ஆனால், 2010ல்
வெளியான இந்த திரைப்படம் வேறுவிதமான அனுபவத்தினை எனக்கு தந்தது. ஒரு கொண்டாட்ட
மனநிலையுடன் இருக்கும் அந்த நாயகன் தொடர்பான ஈர்ப்பு அவரது மற்ற திரைப்படங்களையும்
பார்க்க தூண்டுகின்றது. உண்மையில் மிக அருமை. அதுதான் அவரின் இயல்போ என சில
தடவைகளில் எண்ண தோன்றுகின்றது.
குள்ள
மனிதர்களின் உலகில் அவர் செய்கின்ற அடாவடிகள், குறும்புகள் என அனைத்தும் ரசிக்கும்
படி இருந்தன. அதிலும், பிரபலமான அனைத்து திரைப்படக்கதைகளையும் தனது கதை என சொல்லி
அந்த சிறிய மனிதர்களை நம்ப வைப்பதையும். அதே போல் அந்த திரப்படங்களுக்கு தனது
பெயரினை ஒத்தவாறு தலைப்பிட்டு திரையிடுகின்ற நகைச்சுவை அபாரம். Avatar க்கு
Gavatar.. )) அது மட்டுமன்றி அவர்களுக்கு I Pad னை G pad என எல்லாம்
அதகளப்படுத்துகின்றார்.
சிறிய
மனிதர்களையும் Gulliver னையும்
உயர அளவிடையில் காட்சிப்படுத்துகின்ற இடங்கள் மிக அருமை. அனிமேசன் காட்சிகளில்
எந்த ஒரு செயற்கைத்தனமும் தெரியவில்லை. மிக நேர்த்தியாக உழைத்திருக்கின்றனர்.
என்னை அசத்திய ஒரு காட்சி – உயரமான தூண் ஒன்றில் அந்த சிறிய மனிதர்கள் மூட்டைகளை
ஏற்றுகின்றனர். இன்னொருவர் அதை எங்கோ கொட்டுகின்றார். காட்சி பின்னோக்கி
செல்லுகின்ற போதுதான் தெரிகின்றது. அது காபி மெசின் என்பது. மிக அருமையான
காட்சியமைப்புக்கள்.
உண்மையில் Gulliver's Travels மிக
அருமையான ஒரு காட்சியனுபவத்தினை எனக்கு நேற்று அளித்தது.
நீங்களும் காண
: http://torrentbutler.eu/38745-gulliver-s-travels
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இனிய ஆங்கில்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி நண்பா!!
உமக்கும் உரித்தாகட்டும்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment