சந்தை
விலையினை விட குறைந்த விலையில் பொருட்கள் சேவைகள் கிடைக்கின்ற போது யாராவது வேண்டாம் என்பார்களா? அதைத்தானே மக்கள் நாள்தோறும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் நுகர்வோரின் இந்த மனநிலையினை வைத்துக் கொண்டுதானே நிறுவனங்கள் “ விலக்கழிவு” “ “தள்ளுபடி விற்பனை” “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் “என்றெல்லாம் கூறிக்கொண்டு நுகர்வோரை கவர்ந்திழுக்கின்றன.
இவ்வாறான
நடவடிக்கைகள் நுகர்வோரின் மனநிலையுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. குறைந்த விலையில் கிடைக்கின்றதே என்ற காரணம் ஒன்றே நுகர்வோரினை தேவை இல்லாத சந்தர்ப்பங்களைக் கூட தேவைக்குரியதாக மாற்றிவிடுகின்றது. இதுவே நிறுவனங்களின் வெற்றி என்றே கூறலாம்.
அமீரகத்திலும் மற்றைய
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களும் இவ்வகையான சந்தர்ப்பங்களை நிச்சயம் சந்தித்தே
இருப்பார்கள். அதுவும் ஆசிய நாட்டவர்களுக்கு நாட்டுக்கு போகின்ற போது பொருட்கள் கொள்வனவென்பது எழுதப்படாத விதி. அவ்வாறான வேளைகளில் இது வெற்றியளிக்கும். இது பெரும்பாலும் பண்டங்கள் சார் விலைக் கழிவோ தள்ளுபடியோ வாகவே இருக்கும்.
அதே
வேளை, சேவை சார்ந்த விலைக் கழிவுகளை பெறுகின்றதற்கான வழிவகைகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை பார்த்தால். இருக்கின்றது. அதற்கான வழிமுறைகளை தர , பெற, இப்போது இணையத் தளங்கள் பல வந்துவிட்டன. இதில்
சேவைகள் மட்டுமன்றி பொருட்களுக்கான விலைக்கழிவு கூப்பன்களும் கிடைக்கப் பெறுகின்றன.
அமீரகத்தினை
பொறுத்தவரையில்
இவ்வாறான விலைக் கழிவுக் கூப்பன்களை விற்கும் பிரபலமான இணையத்தளங்கள் பல உள்ளன. அவை நிறுவனங்களிடமிருந்து அவர்களின் பொருட்கள் சேவைகளுக்கான விலைக் கழிவினை பெற்று தமது பயனர்களுக்கு அளிக்கின்றது.
இதன் மூலம், நிறுவனம் புதிய நுகர்வாளர்களைப் பெறுவதோடு, அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக்குவதற்கான வாய்ப்பினையும் பெற்றுக் கொள்கின்றது.


AED9.00
க்கான கரும்பு ஜூஸ் கேன் ஒன்றினை AED 3.00 ற்கு கொள்வனவு செய்தேன். ( காசு போனாலும் மூணு திர்ஹம்தானே!!)
அதிலிருந்து
இன்றுவரைக்கும்
பல உணவகங்களுக்கான விலைக்கழிவு கூப்பன்கள், கையடக்க தொலைபேசி, போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கான கூப்பன்களும் கொள்வனவு செய்து உபயோகித்திருக்கின்றேன்.
அனுபவத்தில்
சொல்வதென்றால், உணவகங்களுக்கான் கூப்பன்களை பெறுவதில் மிக்க நன்மையும் லாபமும் உண்டு. சில உயர்தட்டு உணவகங்களுக்கு
நாம் செல்ல இது போன்ற விலைக்கழிவு கூப்பங்களும் ஓரளவுக்கு உதவி செய்யத்தான் செய்கின்றது.
அதே
போல், இது ஐக்கிய அரபு ராச்சியத்தில் மட்டுமன்றி பல்வேறு நகரங்களிலும் இச்சேவை உள்ளது.
விரும்புபவர்கள் இணைய
தளங்களில் தேடி இச்சேவையினை தரும் தளங்களை கண்டு அதன் நம்பகத்தன்மைகளை நன்றாக
விசாரணை செய்து அதன் சேவைகளை அனுபவியுங்கள்.
No comments:
Post a Comment