எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..


நாட்டிற்கு சென்று திரும்புகின்ற ஒவ்வொரு தடவைகளும், கையில் கிடைக்கும் நூற்களினை காவிக்க்கொண்டு வருவது பழக்கமாகிவிட்டது. அலுவலகத்திலும் சரி, அறையிலும் சரி நேரம் கிடக்கின்ற போது வாசித்து முடித்துவிடுவேன். சில புத்தகங்கள் அலுப்பினை தந்தால் அதை மூடி வைத்து விட்டு, எப்போதாவது மீண்டும் திறப்பது வழக்கம். சில் நூற்கள் சுவாரசியமாக இருக்கும் கையோடு காவிச்சென்று கொண்டே இருக்க தோன்றும்.

அண்மையில் அப்படி வாசித்த ஒரு நாவல் – “கிழவனும் கடலும்” மீனோடு போராடும் அந்த முதிய மனிதன் பற்றிய சிந்தனைகளும் அது தொடர்பான விவரணங்களும் எங்கோ என் வாழ்க்கையின் சில இடங்களுக்குள்ளும் பொருந்திப் போவது போல ஒரு பிரம்மை. தமிழில் மிக அருமையாக பெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பெயர் நினைவில் இல்லை(. 

அலுவலகத்தில், பிரயாணத்தில், அறையில் என ஒரு வாரம் முழுவதுமாக அந்த நாவல்தான். பக்கங்கள் குறைவென்றாலும் கிடைக்கின்ற கால இடைவெளியினைப் பொறுத்துத்தானே வாசிக்க முடியும். இது வரை அந்த நாவலின் பாதிப்பினை விட்டு என்னால் மீண்டு வர முடியவில்லை.

இது இப்படி இருக்க, இப்போது தொடங்கி இருக்கும் வாசிப்பு –
“ நம் காலத்து நாவல்கள்” – எஸ் ரா அவர்களின், உலக இலக்கியங்களில் முக்கிய இடம் பிடித்த நாவல்கள் பற்றிய அறிமுகங்கள். மிக அருமையான விளக்கங்களுடன் இருக்கின்றன.

Les Misérables பற்றிய வர்ணனை அதன் பின்னணி என ஆரம்பிக்கும் முதலாவது அத்தியாயம். தொடர்ச்சியான வாசிப்பனுபவத்திற்கு என்னை தயார்படுத்துவதாகவே உணர்கின்றேன். விக்டர் ஹியூகோ பற்றிய தேடல் எஸ் ரா மூலமாக ஆரம்பமாகியுள்ளது. 

இதன் முதன்மையாக, இந்நாவலினை தழுவி வந்துள்ள திரைப்படத்தினை தரவிறக்கும் முடிவில் இருக்கின்றேன். 1998ல் வந்துள்ள வர்ண திரைப்படத்தினை காணலாம். கறுப்பு வெள்ளையில் ஏதோ ஒரு விதமான சோகம் படர்ந்திருப்பது போன்ற உண்ரவு எனக்கு அடிக்கடி உண்டாவதால் அதை பார்ப்பதில் இருந்து எப்போதும் தவிர்த்தே வந்துள்ளேன்.

Les Misérables நாவலின் தமிழாக்கம் ‘ குற்றமும் தண்டனையும்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதோடு அந்த நாவலின் அளவினை எஸ்ரா விவரிக்கின்றதைப் பார்த்தால், வாசிக்கும் ஆர்வத்தினை தாண்டிய இன்ன பிற சூழ்நிலைகள் , அதற்கான சாத்தியங்கள் இப்போது மிக குறைவே என்பதை சொல்லுகின்றன. ஓடியாடி ஓய்ந்த வேளைகளில் வாசிக்க இருக்கட்டுமே- உயிரோடிருந்தால் ))

ஒவ்வொரு நாவல் பற்றிய எஸ்ராவின் விவரணைகள் அந்நாவலின் மீதான காதலை தூண்டுவதோடு, அது பற்றிய தேடலினையும் கூட்டுகின்றது. இனி ஒவ்வொரு நாவல் பற்றிய அவரின் விளக்கங்களோடு, அந்நாவலினையும் படித்து விடுவது அல்லது அதை தழுவி வந்துள்ள திரைப்படங்களினை பார்ப்பது என்ற முடிவுடன் இப்போது ஆரம்பிக்கின்றேன்.

முதலில் - Les Misérables.. இது ஏதோ புது விதமாக இருக்கும் போல இருக்கின்றது. பார்ப்போம் ))


Comments

Kumaran said…
நான் கேள்வியேப்படாத நாவல்.
நல்ல பதிவு.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!