Wednesday, December 01, 2010

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் - உன் தயவினால்…




மெல்லத் தொடங்கும் சம்பாசனைகள் – நேரம் சுருங்க,
மீதி ஏதோ சொல்லவில்லை என்பது போல் முடியும்.
மீண்டும் தொடங்க எதுமின்றி
குரல் கேட்டு சிலிர்த்து,
மௌனங்கள் மட்டும் பேசி
காலங்கள் கரையும்..
ஏதுமில்லா இனிமைகளில் என் உலகு அமிழ
தொடர எண்ணும் வேட்கையுடன் விடைகொள்வாய்.

கண இடைவெளியில்
மீண்டும் தொடரும் – இனிமைகள்
இப்போது எழுத்தாக..
வாழ்த்தாக, காதலாக , சிரிப்பாக , உன் கனவுகளாக
நம் காதலின் ஜோதியில் எழுத்துக்கள் ஜொலிக்க,
உறங்க அனுமதிப்பாய் - ஓர் ஈர முத்தத்தோடு..

படுக்கை முழுக்க இனிமைகள், கனவுகளோடு இறைந்து கிடக்க,
காலைகள் உன் சுக விசாரிப்புகளோடு விடியும்.
இரவின் மீதி இனிமைகள் இன்றைய நாளுக்காய் கடத்தப்பட,
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன்
உன் தயவினால்…



4 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தனே சுடு சோறு ..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

அரமையாக உள்ளது....

Admin said...

அதுக்கென்ன சுதா.. உங்களுக்குத்தான் சுடு சோறு... சுட்ட கருவாடும் தேங்காய்ப்பூவும் சேர்த்தே தருகின்றேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே..

Jana said...

மதிசுதாகூட ஒவ்வொருநாளும் சுடுசோறுவாங்க புதிதாய்த்தான் பிறக்கின்றார்போல!
அருமையாக உள்ளது துயரி..

ஹரிஸ் Harish said...

நல்லாருக்கு..
இன்னும் சொல்லுங்க...