Sunday, July 01, 2012

வித்தியாசமான விளம்பரம் : தமிழை தமிழுக்கு மொழிபெயருங்கள்



கீழுள்ள விளம்பரம், இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளி வந்த வேலை வாய்ப்புக்கான அறிவித்தல். இதில் உள்ளது புரிகிறதா என முகப் புத்தகத்தில் நண்பர் ஒருவர் வினவினார். முயற்சி செய்து தமிழை தமிழுக்கே மொழி பெயர்த்திருக்கின்றேன். பாருங்கள்.

தமிழை தமிழுக்கே மொழிபெயர்த்த முதல் ஆள் நான்தான் என நாளைய வரலாறு சொல்லட்டும். 


மேல் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபை
வேலைத் திட்ட அதிகாரி பதவிக்காக இணைத்துக் கொள்ளல்.

  •  காகித கைக்குட்டை உற்பத்தி தொடர்பான பயிற்சியையும், அனுபவத்தையும் பெற்றிருத்தல்.

  • காகித கைக்குட்டை உற்பத்திக்கான இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அறிவும் அனுபவத்தினையும் கொண்டிருத்தல்.

  • காகித கைக்குட்டைகளை மூலப் பொருளாக கொண்ட உற்பத்திகளை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அது தொடர்பான பயிற்சி அளிக்கும் திறனை கொண்டிருத்தல்.

  • கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும். விஞ்ஞான பாடம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும்.

  • சிறந்த சுக தேகியாக இருத்தல் 


உங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை சுயவிபரக் கோவையுடன் இணைத்து
2012.06.21 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் காட்டப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

தலைவர் : மேல் மாகாண கைத் தொழில் அபிவிருத்தி சபை, காகித கைக்குட்டை திட்டம். இலக்கம் :4 தசாரத மாவத்தை, கொட்டாவ, நுகேகொடை.

தொடர்புகளுக்கு : 0114936121. 0716037430

( எப்பா!!!!!!!!!! ஆப்பிள் ஜூஸ் ஒன்னு சொல்லுப்பா.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..)


2 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஸ் அப்பா தலை சுத்துதே! படிச்ச எனக்கே இப்படின்னா? உங்களுக்கு ஜூசு தேவைதான்!

அம்பாளடியாள் said...

கண்ணில் பட்ட அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள்
இதைக் கண்டு பிடித்த உங்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை :):)....