பேனைகளையும் கையெழுத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்

 ழுதி ரொம்ப நாளாச்சு………

தலைப்பை பார்த்ததும் ஏதோ ஓரு பெரிய எழுத்தாளர் / பிரபல பதிவர் போல பீல வுடறான்ன்னு எண்ண வேண்டாம் நண்பர்காள்,,ஒன்னுமில்ல இன்னைக்கு காலைல வேலை விடயமாக பார்ம் ஒன்று நிறப்பும் போது ஏற்பட்ட ஒரு உணர்வுதான்….

“ எழுதி ரொம்ப நாளாச்சில்ல….”

அதேதான், பேனையினால் எழுதுவதைத்தான் சொல்கின்றேன்….
எல்லாம் கணினி மயமான இன்றைய உலகு, கையினால் எழுதுகின்ற பழக்கத்தினை மறப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. உண்மைதான் இல்லையா..எல்லாம் கணணிமயப்படுத்தப் படுகின்றது / பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒப்பமிடுவதில் கூட கணினியின் செல்வாக்கு உள்ளதை அனேக நண்பர்கள் அனுபவித்திருக்கலாம். மனேஜர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் கூட இப்போது எழுத்தில் இல்லை…. யாவும் கணினி கணினி…


பாடசாலை சென்ற காலங்கள் பற்றிய அசை போடல்களில் கட்டாயம் முதல் வகுப்பு பற்றிய நினைவுகள் எழுதப் பழகிய சம்பவங்கள் இன்றி வர சாத்தியமில்லை. வெள்ளை மணலில் சீராக துளாவி டீச்சர் கை பிடித்து எழுதப்பழக்கும் நினைவுகள் ஒரு அழிந்த புகைப்படம் போல இன்னும் நினவுகளில் உண்டு இல்லையா! நான்கு கோட்டு தாள்களில் டீச்சர் எழுதித் தரும் அகரத்தினை அப்படியே எழுதுகின்ற அந்த காலங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனாலும் இது தொடருமா என்றால்.. எதையோ இழப்பது போலவே உணருகின்றேன்.

ஆறாவது விரலாய் முளைத்து நிற்கும் பென்சில்கள்! கிரீடம் வைத்தது போல ரப்பர் வைத்து புதிய பென்சில்கள் கைகளில் கிட்டும் போது ஏற்படுகின்ற சந்தோசம்… அப்பா… அதிலும் கார்ட்டூன் படங்கள் கொண்ட பென்சில்கள் கிடைத்தால் இன்னும் இரட்டிப்பு.. அவை கிடைக்கின்ற போது எப்போதும் எச்சரிக்கையும் கூடவே கிட்டும் – உடைக்க கூடாது. கவனம் அது இது என! முதல் முறையாக பென்சில் சீவும் போது ஏற்படுகின்ற குதூகலம் அதில் எழுதும் போது எழுத்திலும் தெறிக்கும்.. கூர்கள் உடைந்து பென்சில் சிறுக்கும் போது அடுத்தது பற்றிய சிந்தனைகளில் இது பொருட்டின்றி போய்விடும்..

வகுப்புகள் ஏறும் போது, பேனைகள் பற்றிய பிரமிப்புக்கள் மெல்ல ஆரம்பித்து, எப்போது பேனையால் எழுதுவோம் என்ற ஏக்கம் எழும். பேனைகள் எழுதினால் அழியாது என்பது ஒரு பிரமிப்பு.. அதுவும் வர்ணப்பேனைகள் கறுப்பு சிவப்பு என… கொப்பிகளில் சிவப்பால் தலைப்பிட்டு கறுப்பால் எழுதுவது.. அதிலும் சேர்மார் எப்போதும் போடும் V.good கொப்பிகளில் சிவப்பால் இருப்பது ஏதோ ராணுவ வீரனுக்கு கிடைக்கும் பதக்கங்கள் போல.. போட்டி போட்டுக்கொண்டே அதை எண்ணிய காலங்கள் எல்லாம் உண்டு….அது மட்டுமா, அழகான கையெழுத்து என பாராட்டுக்கள் கிடைக்கின்ற போது ஒரு பெருமிதம், எழுத்துப்பிழை இல்லை என்ற பாராட்டுக்கள் வேற இன்னும் நினைவில் உள்ளன.. 


இன்றும் கையெழுத்துக்களும் பேனைகளும் பாடசாலைகளில் உயிர்ப்புடன் இருந்தாலும் ஏனோ அவை மறைந்து போகலாம் என்ற அச்சம் இன்றைய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நோக்குகின்ற போது வருகின்றது…  


அதுதான், பேனைகளையும் கையெழுத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியுமா என்ற வருத்தம் அனேகருக்கு என்னைப்போல் இருக்கலாம்…………. Comments

எங்கள் பள்ளிக் கால நினைவுகளை அருமையான பதிவின் மூலம் மீட்டியிருக்கிறீர்கள் சகோ.

உண்மையில் கொப்பியில் பத்துக்குப் பத்து வாங்கியதும், வெரி குட் வாங்கியதும் இப்போது மட்டும் நினைவுகளாய்.
ஹிஹி நாலாம் ஆண்டில் இருந்து அஞ்சாம் ஆண்டுக்கு போபாயில் மகிழ்ச்சி,பேனை பாவிக்கப்போறம் எண்டு...
Lakshmi said…
ஆமாங்க, உண்மைதான்.
// நிரூபன் said...
எங்கள் பள்ளிக் கால நினைவுகளை அருமையான பதிவின் மூலம் மீட்டியிருக்கிறீர்கள் சகோ.

உண்மையில் கொப்பியில் பத்துக்குப் பத்து வாங்கியதும், வெரி குட் வாங்கியதும் இப்போது மட்டும் நினைவுகளாய்.//

மறக்க கூடிய காலங்களா அவை...

வருகைக்கு நன்றிகள் நிரூ.. இணைந்திருப்போம்
// மைந்தன் சிவா said...
ஹிஹி நாலாம் ஆண்டில் இருந்து அஞ்சாம் ஆண்டுக்கு போபாயில் மகிழ்ச்சி,பேனை பாவிக்கப்போறம் எண்டு...//

உண்மைதான் சிவா.. அதுவும் பேனை கைகளில் கிடைக்கும் போது, ஏதோ உலகை வென்ற மகிழ்ச்சி ...

நன்றி உங்கள் கருத்துரைக்கு நண்பா
// Lakshmi said...
ஆமாங்க, உண்மைதான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அம்மா..
உண்மைதான்...

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!