நீ நலம் தானே அம்மா

சுகமாய்தான் இருக்கிறேன் அம்மா.
நீ சுகமா?
என் ஒவ்வொரு காலையும் இப்போது
உன் சத்தங்கள் இல்லாமல் விடிகின்றன.
உன் ஏச்சுக்களை கேட்டவாறு தூங்கும்
அதிகாலை சுகம் இங்கில்லை.


உன் தேனீர் மணம்
இன்னும் என் நாசித்துவாரங்களில்,
என் நாவுகளில் ஒட்டியுள்ள
அதன் இனிமையினை இன்னும் தேடிப்பார்க்கிறேன்.
எங்குமில்லை அம்மா.


உன் சமையலறை சத்தங்களின் லயங்கள்.
பாக்கிஸ்தானி சமையலாளியின் அறைகளில்
நான் கேட்டதில்லை.
நீ நலம் தானே அம்மா?

என் நாட்களினை எண்ணிக்கொண்டிருக்க்கின்றேன்..
நீ பிசைந்த பழஞ்சோறு ஒரு கவளம் உண்பதற்காக.
அதுவரை
நீ அழைக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளுக்கும்
உன்னிடம் நான் பொய்யாய் சொல்லிக்க்கொண்டிருப்பேன்.
நான் சந்தோசமாக இருப்பதாக.

Comments

// நீ அழைக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளுக்கும்
உன்னிடம் நான் பொய்யாய் சொல்லிக்க்கொண்டிருப்பேன்.
நான் சந்தோசமாக இருப்பதாக. //

வலியுடன் வரிகள், வாழ்த்துகள் !

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.