இனி நான் அந் நுண்மைக்குச் சொந்தக்காரன்.
கருமை படர்ந்து கண்களில் காதல் அப்பி,
எப்போதும் படர்கின்ற நுண்மைகளில் வாழ பழகுகின்றேன்,
என் வானில் கருமை படர்ந்து, வெப்பம் தகிக்கும் வேளைகளில்
எப்போதும் போல், அவற்றினை சுற்றி காதல் காப்பாற்றுகின்றது.
இடையில் மழை போல கனிவு மாற மீண்டும் அவை படர்கின்றன.
அடம்பிடித்து அழ ஆரம்பிக்கும் நுண்மைகளின் மீதான கோபங்கள்,
அதற்கான காரணங்களறிந்து பறந்து விட,
கொடிக்கம்பாய் நான் மாறி,
படரும் காலங்கள் பற்றி அதோடு புகாரிடத்தொடங்குகின்றேன்.
4 comments:
அருமை
அந் நுண்மைக்குச் சொந்தக்காரரே
நன்றிகள் ஜனா!
அருமையாக வடித்துள்ளீர்கள்...
நன்றிகள்... சுதா!!
Post a Comment