Sunday, August 14, 2011

அதென்ன டெஸ்ட் கிரிக்கட்???




நேற்று இந்தியா டெஸ்டிலும் தோற்றுவிட்டது, தனது முதலிடத்தினையும் பறி கொடுத்துவிட்டது.

இன்னிக்கு ஆபிஸ்ல நல்ல அவல்தான், 

மாட்டினீங்கடா மலையாளிகளா! இதோ வர்ரன் என கறுவிக்கொண்டே ஆபிஸ் சென்றேன். 

ஏனிந்த கொலைவெறி என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் அவனுகள்ர ஆட்டம்தான், வேல்ட்கப் பறி கொடுத்ததன் பின் இவனுகள் போடும் ஆட்டம் சகிக்க இயலவில்லை. இனி கிரிக்கட்டில் இந்தியாவை எவனாலும் வீழ்த்த முடியாது அது, இது ன்னு வெட்டி ஜம்பம் வேற..

இருங்கடா வர்ரன்,
ஆபீஸ் நுழைந்தால், அனைவரும் வேலையில் படு மும்மூரம். 

காலையிலேயே இவ்வளவு அமைதியா ஒரு நாளும் இருந்ததே இல்லை.
வணக்கம் வைத்தாலும், கொம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே பதில் வணக்கம் சொல்றானுகள்.

..ஆஹா, பசங்க முன் ஏற்பாடுகளோடதான் வந்திருக்கானுகள், எப்பிடி ஆரம்பிக்கலாம்? என யோசித்துக் கொண்டே , எப்போதும் சந்தைக் கடை போலவே இருக்கும், விற்பனை பகுதியை பார்த்தால், வெறிச்சோடி கிடந்தது. ஒரே ஒரு பிலிப்பினி மட்டும் கணினியில் லேட்டஸ்ட் கணினி விளையாட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“ஹாய்!” என்றவாறு அவனிடம், “ எங்கே மற்றவர்கள் ? “ என வினவினேன், 

அனைத்து தன்மான சிங்கங்களும் தமது வாடிக்கையாளர்களை சந்திக்க போய்விட்டதாக பதில் கிடைத்தது.

அடப்பாவிகளா! காலையில், வெட்டி அரட்டை , அது இது ன்னு பொழுத போக்காட்டி விட்டு 10 மணிக்கு பிறகே , போறதா வேண்டாமா ன்னு யோசிக்கிற பயலுக, இன்னிக்கே காலங்காத்தாலேயே கெளம்பிட்டானுகளே!

சே! சூட்டோட சூடா பசங்கள கடுப்பேத்தலாம்னு பார்த்தா ஒருத்தனும் சிக்கமாட்டான் போலருக்கே! என்ன வாழ்க்கைடா!!! என என்னை நானே நொந்து கொண்டேன்.

“” காலையில் என்ன இந்தப்பக்கம், ஏதாவது விசயம் உண்டா” என்றவாறு என் சிந்தனையினை கலைத்தான் , அங்கிருந்த பிலிப்பினி.

பரவாயில்லை வந்ததுக்கு இவனிடமாவது சொல்லி கொஞ்சம் தேத்திக்குவோம், என்று எண்ணிக்கொண்டே,

“ நேற்று நடந்த டெஸ்ட் கிரிக்கட்ல இன்கிலாந்திடம் இந்தியா தோத்திடுச்சு, உனக்கு தெரியுமா?” என்றேன்.

“ஓ! அப்படியா “ என்றான் வெகு சுவாரசியமாக,

ஆஹா பயல் ரொம்ப சுவாரசியமாகிட்டான், விசயத்த இவனுக்கிட்ட சொல்லி இன்னும் அவனுகள கடுப்பேத்தலாம் எனும் நம்பியார்த்தனத்துடன்,

“உனக்கு தெரியுமா, அவர்கள் டெஸ்ட்டில் தனது முதலிடத்தையும் இழந்து விட்டார்கள்” என்று பூரிப்புடன் மேலும் தொடர எத்தனித்த என்னை குறுக்கிட்டு,

“கொஞ்சம் பொறு, எனக்கு, கிரிக்கட் ஒரு விளையாட்டு என்று தெரியும், அது என்ன டெஸ்ட்?? “ என்றான்.

கடுப்பு இப்போது என்னை தேடி வந்து கொண்டிருந்தது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!




15 comments:

Unknown said...

ஹிஹி சிக்கினானுக பயலுக!

Unknown said...

ஹிஹி சிக்கினானுக பயலுக!

Unknown said...

தமிழ்மணம் இணைக்கப்படவில்லை சகோ!

Unknown said...

தமிழ்மணம் இணைக்கப்படவில்லை சகோ!

Mohamed Faaique said...

same feeling...

இந்தியா வெற்றி அடைந்தால் டி.வி சத்தம் Maximum limit'ல வச்சி கடுப்பேத்துவானுங்க... தோத்துப் போயிட்டா, இரவாக முன்னாடியே இழுத்து போத்திடு தூங்கிடுவானுங்க....

Raja said...

Ha . . Ha . . Sema bulb a?Ha . . Ha . . Sema bulb a?

rajamelaiyur said...

Ha. . Ha. . Sema bulb a?

ARV Loshan said...

same blood.. same feel ;)


கடுப்பேத்திக் கொண்டாடுவதில் அப்படியொரு சுகம்ம்ம் ;)

மூன்று பிரிவினரை மிக இலகுவாக சூடேத்தலாம்.. அவர்கள் சூடாகி சண்டை போடுவதைப் பார்க்க ஜாலியாகவும் இருக்கும்..
இந்திய அணியின் ரசிகர்கள்
ரஜினி பைத்தியங்கள்
விஜய் விசர்கள் ;)

Anonymous said...

நான் அழுதுருவன்ன்ன்னன்.........

Admin said...

//மைந்தன் சிவா said...
ஹிஹி சிக்கினானுக பயலுக!//


எங்க சிக்கினானுங்க... கடைசியில மாட்டிக்கிட்டது நான்தான் நண்பா! ((((((((

Admin said...

// Mohamed Faaique said...
same feeling...

இந்தியா வெற்றி அடைந்தால் டி.வி சத்தம் Maximum limit'ல வச்சி கடுப்பேத்துவானுங்க... தோத்துப் போயிட்டா, இரவாக முன்னாடியே இழுத்து போத்திடு தூங்கிடுவானுங்க.... //

உண்மைதான் .. இதுவரைக்கும் ரொம்ப ஆட்டம் போட்ட ஒரு மலையாளிய தேடுறான்.. அகப்படமாட்டேன்கிறான்பா!!

Admin said...

// LOSHAN said...
same blood.. same feel ;)


கடுப்பேத்திக் கொண்டாடுவதில் அப்படியொரு சுகம்ம்ம் ;)

மூன்று பிரிவினரை மிக இலகுவாக சூடேத்தலாம்.. அவர்கள் சூடாகி சண்டை போடுவதைப் பார்க்க ஜாலியாகவும் இருக்கும்..
இந்திய அணியின் ரசிகர்கள்
ரஜினி பைத்தியங்கள்
விஜய் விசர்கள் ;) //

நீங்க சொல்வது 100% உண்மை லோசன்.. வளாக நாட்களில் என்கள் குரூப்பில் ஒரு ரஜனி பக்தன் இருந்தான், டைம் போக வில்லை என்றால், ரஜனிக்கொரு திட்டு. முடிஞ்சது... அன்றைய நாள் ச்சும்மா கல கல என,,, கழியும் )))))))))

Admin said...

// என் ராஜபாட்டை"- ராஜா said...
Ha. . Ha. . Sema bulb a? //

என்னா செய்றது, கடுப்பேத்த போயி பல்பு வாங்கின கதை இது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Admin said...

// Reverie said...
நான் அழுதுருவன்ன்ன்னன்........//

ஏன் தலைவரே ?? அழாதீங்க... இன்னொருநாள் வராமலா போயிடும் ;)

கார்த்தி said...

ஆய் ஏமாந்தீங்களா ஏமாந்தீங்களா? அவங்களே செற் பண்ணி பிலிப்பைன்ஸ் காரன அந்தக்கேள்வி கேக்க வைச்சிருப்பாங்களா??? ஹிஹிஹி
என் இவ்வளவு கடுப்பு இந்தியாக்காரங்களோட?