அலுத்துக் களைத்து அறை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.. இருப்பது 6 வது மாடியில் என்பதால், படிக்கட்டுகளைப் பற்றி எப்போதும் எண்ணிப்பார்ப்பதில்லை. (உடம்பு இளைத்தால் என்ன ஆவது!! ) பல நேரங்களில் லிப்டிற்குள் இடம் பிடிப்பதென்பது அக்கரைப்பற்று கல்முனை பஸ்ஸில் சீட் கிடைப்பது போல ரொம்ப அபூர்வம். ஆனால், இன்று ஏனோ யாரும் இல்லை. தனியனாக லிப்டினை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன்.
வாய் பிளந்து நின்ற லிப்டில் ஏறி, கதவை மூட முயலும் போது, மூச்சிரைக்க இரைக்க ஒரு நடுவயது மதிக்கத்தக்க நபர், கைகளை ஆட்டியவாறு வாயில் பக்கம் இருந்து லிப்டினை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். பார்க்கும் போது, பாவமாக இருந்ததால், லிப்டினை மூடாமல் அதன் விசையினை அவருக்காக அழுத்திக் கொண்டிருந்தேன். அடடா! நமக்கும் ஒரு பொதுச்சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்ற எண்ணம் இன்னும் நெஞ்சை விம்மச் செய்திருந்தது.
அருகில் வந்தவர், கைகளில் வைத்திருந்த பொதி ஒன்றினை அவசரத்தில் தவறவிட்டார். உள்ளிருந்த ஐந்தாறு ஆப்பிள்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதற, அதைப் பொறுக்கி எடுப்பதில் மும்மூரமாக இருந்தார். உண்மையில் அவருக்காக காத்திருந்த அந்த நேரத்தில் நான் எனது அறையை சென்றடைந்திருக்கலாம் ஆனாலும், இன்றைக்கு இந்தப் பொதுச்சேவைக்கான வாய்ப்பை தவறவிடுவதில்லை என்ற பிடிவாதத்தில் இன்னும் அவருக்காக லிப்டினை திறந்தவாறே வைத்திருந்தேன்.
ஒருவழியாக, லிப்டினுள் ," மிக்க நன்றி " என்றவாறு பிரவேசித்தவர் , லிப்டின் 1 ஐ அழுத்திவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார். நானும், உள்ளே அழுதுகொண்டே லேசாக சிரித்தேன். பக்கத்தில் நின்ற பொதுச்சேவை சத்தமாக நக்கலுடன் எகத்தாளமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு தெளிவாக கேட்டது.
மான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம்.
அதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,
1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள் 2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு 3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்...
கை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்
பின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கராத்தே கைகூட நாளாகலாம். பின் குறிப்பு (2) :நீங்க சிவ கார்த்திகேயனை தேடி வந்திருந்தீங்கன்னா அதுக்கு கம்பனி பொறுப்பேற்காது.. சாரி...
முழுவதும் மீசை ,தாடி , கர கர என குரல்கள் என கேட்டுக் கொண்டிருந்த எங்களது அலுவலகத்திற்கு புதிதாக ஒரு குயில் கூவ வந்திருந்தது. ஆகா……. இருந்த வாலிப வயோதிப அன்பர்கள் அனைவருக்கும் ஏக குஷி! அது ஏனோ தெரியவில்லை. பால் ஈர்ப்பு என்பது எப்போதும் ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமோ என பல தடவைகளில் எண்ணியதுண்டு.
அவள் – 25 வயதுக்குள் இருக்கும். அழகியும் இல்லை, சுமாராகவும் இல்லை. பொறுத்துக் கொள்ளலாம் ;). இருப்புக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு (Inventory Control) வந்திருந்தாள் – மும்பையை சேர்ந்தவள். நுனி நாக்கு ஆங்கிலமும், அதிகாரமும் கொஞ்சம் தூக்கலாக இருந்தன. ஆனாலும், ரசிகர்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. அதிலும், சிலர் தீவிர விசிறியாக அல்லது விசிறியாக்கப்பட்டிருந்தனர். அந்த தீவிர விசிறிக்கூட்டத்தில் ஒருவர் எனது நண்பர். நண்பர் காணும் போதெல்லாம், அவளைப்பற்றிய துதிபாடல்களை பாடிக்கொண்டே இருந்தார். அதற்கு இன்னும் ஒரு காரணம் அவளின் மேசைக்கு பக்கத்து மேசைக்காரர் நண்பர். இது எங்கு போய் முடியப்போகின்றதோ என்ற எண்ணம் எனக்கு.
கடந்த சிலவாரங்களில் நண்பரிடம் துதி குறைந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்ததில் முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கதைக்க சந்த்தர்ப்பம் பார்த்திருக்கும் நண்பர் இப்போது சுவாரசியம் இன்றி இருப்பதும் புரிந்தது. ஆச்சரியம்! என்னவென்று கேட்டுவிடவேண்டும். ! பணி முடிந்து போகும் போது மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
“பிறகு எப்படி போகுது கரெனுடனான வேலைகள்?” என்றவாறு கண்ணடித்தேன். ( அவள் பெயர் - கரென்)
நண்பர் கொஞ்சம் பதட்டப்பட்டது போல பிரமை தட்டியது. சுதாரித்துக் கொண்டே,,
“இல்லை ச்சும்மாதான் கேட்டேன்” என்றேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவர், கொஞ்ச குழப்பமான முகத்துடன் என்னை உற்றுப் பார்த்தார். எதையோ சொல்ல முயற்சித்து முடியாமல் விழுங்குகின்றர் என விளங்கியது.
அதோடு அதை முடித்துவிட்டு நகரத்தொடங்கினோம். கொஞ்சநேரத்தின் பின் ஏதோ விழித்துக் கொண்டவர் போல,
“ அவள் எப்போதும் பெர்பியூமுடனே திரிகின்றாள்” என்றார்.
இப்போதுதான் கதையினை ஆரம்பிக்கின்றார் என எண்ணிக்கொண்டு மெதுவாக திரும்பிப்பார்த்தேன்.
“அதனாலென்ன? , அவள் நாகரீகமான பெண். அதானால் இருக்கும்” இது நான்.
சொல்லிமுடிக்கு முன்,, “ ஆனால் உடுத்திருக்கும் ஜீன்ஸ் க்கு எதற்கு பெர்பியூம்?” சடாரென அவரிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் குழம்பினேன்.
அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் ஒருவித விசமம் பரவிக்கிடந்தது. திடீரென பல்ப் எரிந்தது. இதழோரத்தில் புன்னகை ஒன்று எட்டிநிற்க அவரைப்பார்த்தேன். எனக்காக காத்திருந்தவர் போல பெரும் சத்தத்துடன் சிரிக்க தொடங்கினார். நானும் கலந்து கொண்டேன்…
இப்போதெல்லாம், பெர்பியூம் விசிறும் சத்தங்கள் – புன்னகையினை தந்து கொண்டிருக்கின்றன ;)
என்ன ஆச்சரியமாக
இருக்குதா? உண்மைதான். நம்ம தலைவரின் ஸ்டைலினை வைத்து நிறைய கெப்ஸன்கள் இப்போது பேஸ்புக்கில்
வலம் வர ஆரம்பித்துள்ளன. எல்லாம் ரசிக்கும் படி உள்ளதோடு. நகைச்சுவையாகவும் இருக்கின்றன.
தலைவா!! YOU
ARE GREAT……..
எனக்கு பிடித்த சில உங்கள் பார்வைக்கு..
கண்ணா உன்னால முடியாது. ரொம்ப வாலாட்டினா அமெரிக்கா கூட ஜூஜூபி....
அழுதுவடிக்கும்
சீரியல் கொடுமைகளை தாண்டி விஜய் டீவி வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை தருவதால் அதன் நிகழ்ச்சிகளில்
எப்போதும் பரீட்சயம் உண்டு. முக்கியமாக – ஜூனியர் சுப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா?
இரு நிகழ்ச்சிகளும்
முன்பிருந்ததை விட தற்போது வேறுபாதையில் செல்வது போல இதன் நெடுங்கால பார்வையாளர்களுக்கு
தோன்றக்கூடிய சாத்தியங்கள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன. அத்லும் சுப்பர் சிங்கர்
ஜூனியர் 3 ன் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சி மீதான
எனது தனிப்பட்ட பற்றினை குறைத்துக் கொண்டே வருவதாக படுகின்றது. இது என்னைப் போன்ற பலரின்
கருத்தாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
டொப் 10 போட்டியாளர்கள்
தற்போது 7 ஆக குறைந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு
முறையும் வெளியேற்றப்படுகின்ற போட்டியாளர்கள் இருப்பவர்களை விட சிறப்பாக பாடக் கூடியவர்கள்
என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
-ஆஜித்
-ரக்சிதா
-செபி
-அகிலேஷ் போன்ற
நல்ல திறமை உள்ள
குழந்தைகள் தட்டிக்கழிக்கப்பட்டு யாரோ ஒருவருக்காக இப்போது இந்நிகழ்ச்சி கொண்டு செல்லப்படுவதாக
எண்ணத் தோன்றுகின்றது.
ஆஜித் – அந்த
சிறுவன் பாடுவது மட்டுமல்ல அவனது ஸ்டைல் அங்க சைஅவுகள் என அனித்தும் ரசிக்கும் படி
இருக்கும். தனிப்பட்ட வகையில் எனக்கு மிக பிடித்த இவன் நடுவர்களால் போட்டியிலிருந்து
வெளியாற்றப்பட்டதற்கு காரணம் பாடல் வரிகள் மற்ந்து போனதே! பாடுகின்ற திறமை என்பது குரல்வளம், மற்றும் இன்ன
பிற சங்கீதத்துடன் தொடர்பான சமாச்சாரங்கள்தானே அதில் மனனமும் வருகின்றதா? என்ற கேள்வி,
இவனது வெளியேற்றத்தின் போது எனக்குள் எழுந்தது. அதேவேளை, பாடும் போது வரி மறந்து மூச்சுவிட்டு
பாடிய அஞ்சனா இன்னும் போட்டியில்! ஆஜித்தின் “போ நீ போ..” பாடல் இன்னும் இந்நிகழ்ச்சியில்
ஒரு மகுடம். ஆனால் அவன் இன்று போட்டியில் இல்லை!
அதே போல ரக்சிதா!
சிறப்பாக பாடிய சிறுமி. இன்று போட்டியில் இல்லை. சொல்லப்படுகின்ற காரணம் ½ மார்க் கம்மியாம்!
டொப் 10 க்குள் வரக் கூடிய அனைத்து திறமையும் தகுதியும் இருந்தும் செபிக்கு அந்த வாய்ப்பு
மறுக்கப்பட்டது. தட்டையாக பாடிக்கொண்டிருக்கும் கவுதம் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார்.
கௌதத்துடன் ஒப்பிடும் போது ஆஜித் எவ்வளவோ திறமைசாலி!
அகிலேஷ் – மேடைக்
கூச்சமற்ற சிறுவன். அவனது பாடல்களில் தெரிகின்ற உற்சாகம் வேறு யார் பாடும் போதும் வருவதில்லை.
அவன் வெளியேற்றப்பட்டமைக்கும் நடுவர்கள் எதையோ காரணமாக சப்பைக் கட்டு கட்டினர்.
இப்போது உள்ள
போட்டியாளர்களில், நடுவர்களின் அருள் பார்வை எப்போதும் ஒருவரை நோக்கியே இருக்கின்றது.
அது பிரகதி. அவருக்கு சாக்லேட் அடைமழையாக பொழிகின்றது.
அதோடு மட்டும் நின்றுவிடாமல் பாராட்டு மழை. அப்ப்ப்ப்ப்ப்ப்பா!! நடுவர்கள் - அவரை மட்டும் பாராட்டுவதோடு நிற்காமல்
அவரது அம்மாவையும் பாராட்டி தள்ளுகின்றார்கள். இது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாக
தெரிகின்றது, சுப்பர் சிங்கரில் மற்ற குழந்தைகள் பிரதான நிகழ்ச்சிக்கு வருமுன்னர் பல்வேறு
தடகளை தாண்ட வேண்டி இருக்க, இவர் மட்டும் திடீரென சுப்பர் சிங்கருக்குள் முளைத்தார்.
அதாவது எந்தவித முதற்கட்ட சோதனைகளும் இன்றி.. அன்றிலிருந்து இன்று வரை இவருக்கான இடத்தினை
நடுவர்கள் எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றனர், இது நடுவர்கள் மட்டுமன்றி
இந்த நிகழ்ச்சி மீதான நடுநிலையினைப் பற்றிய கேள்வியிஅனி எழுப்புகின்றது. இவருக்கு மட்டுமான
முன்னுரிமைக்கு என்ன காரணம்? நடுவர்கள் வாய்கிழிய புகழும் அளவிற்கு இவரிடம் பாடும்
திறமை உள்ளதா??
தற்போது உள்ளதில்
யாழினி மற்றும் சுகன்யாவுடன் ஜெயந்த் ஆகியோர் இறுதிச்சுற்று வரை செல்லும் தகுதியுடன்
தெரிகின்றனர். ஆனாலும் யாழினியின் திறமைகள் நடுவர்களால் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படவில்லையோ
என்ற எண்ணம் அவர்களின் கருத்துக்கள், அடிக்கடி அந்த்க்குழந்தை டேஞ்சர் சோனுக்குள் வருவதை
வைத்து எண்ண தோன்றுகின்றது.
இப்போது இந்நிகழ்ச்சி
– முன்மொழியப்பட்ட யாரோ ஒருவருக்கு ஜூனியர் சுப்பர் சிங்கர் பட்டத்தினை கொடுக்க நடாத்தப்படுகின்ற
ஒரு செட்டப் கேம் போலவே எனது பார்வைக்கு படுகின்றது.