Sunday, October 31, 2010

சொந்த செலவில் அசின் வைத்த சூனியம்

நம் தமிழில் எப்போதும் எதற்கும் பழமொழிகள் உண்டு.. இன்று காலையில் பத்திரிகையில் ஒரு செய்தி படிக்கும் போது ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது. “ பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை” இப்போ அசினுக்கும் அந்த நிலைதான்
வேறொன்றுமில்லை, தமிழ் திரைப்பட்த்துறையினர் இட்ட தடையினை மீறி ( ஆமா!! இப்ப அந்த தடை இருக்கா இல்லியா??? ) படப்பிடிப்பிற்கு இலங்கை சென்ற அசின். படப்பிடிப்போடு தனக்கு தெரியாத வேலையை நிறுத்தியிருக்கலாம். நல்லது செய்கின்றேன் பேர்வழி என்று.. வட மாகாணத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து. தனது கலைச்சேவையின ( ??!@#@) இன்னும் கொஞ்சம் விரிவாக்கி, தமிழர்களுக்கு கண்சிகிச்சை முகாம் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து, தனக்கு “கலைச்சேவை” மட்டுமல்ல சமூக சேவை யிலும் ஆர்வமுண்டு என உலகுக்கு உரைத்தார் அசின்.

ஆனால் சனி இப்போது அவரது சமூக சேவை வடிவில் திரும்பி உள்ளது. விசயம் இதுதான், அம்மையார் சொந்த செலவில் நடாத்திய கண்சிகிச்சை முகாமில் சிகிச்சை மற்றும் கண்ணறுவை சிகிச்சை பெற்ற பத்து தமிழர்களின் பார்வை முற்றாக போய்விட்டதாகவும் மேலு பலருக்கு பல விதமான பக்க விளைவுகள் உண்டாகியுள்ளதாகவும் இலங்கையின் பிரபல நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு, யாழில் உள்ள இந்து மக்கள் கட்சி அசினுக்கு எதிராக வழக்கு தொடரவும் உத்தேசித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் அரசியல் ஆதாயத்திற்காகவும் , சுய விளம்ப்ரத்திற்காகவும் மேற் கொள்ளப்பட்ட இச்சிகிச்சை முகாம் மூலம் பாதிக்கப்பட மக்களுக்கு நஸ்ட ஈடு அளிக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொந்த செலவில் அசின் வைத்த சூனியம் இப்போது அவரை சூழ ஆரம்பித்துள்ளதா? பார்க்கலாம். 

3 comments:

ம.தி.சுதா said...

சகோதரம் இதையும் கொஞ்சம் பாருங்க... இந்தத் தகவல் வலைத் தளம் மூலம் தான் உலகை அடைந்தது
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Admin said...

மகிழ்ச்சி சுதா.. இது நான் ஞாயிறு வீரகேசரியில் வாசித்தேன்... அதை ஒட்டி இப்பதிவினை வெளியிட்டேன்.. அவ்வளவே.....

ம.தி.சுதா said...

சகோதரா தப்பாக புரிந்த கொண்டு விடாதீர்கள் நான் சும்மா ஒரு தகவலாகத்தான் சொன்னேன்...
(ஒரு விடயம் தெரியுமா 9 தளங்கள் இதை அப்படியே களவாடி தமது பெயரில் போட்டுள்ளது..)
இதோ லிங்

http://namvaergall.blogspot.com/2010/09/blog-post_24.html
http://www.thamizharsenai.com/2010/09/blog-post_24.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=76454
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18520-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/
http://www.newjaffna.com/fullview.php?id=NDg3
http://onelanka.wordpress.com/2010/09/page/2/
http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=tami&article=247