Wednesday, July 13, 2011

பதிவுலகில் நட்பை பெற, மனதை திறந்து வையுங்கள்…


நண்பர்கள் எனக்கு தேவை. ஆனால், நான் அவர்களுக்கு கிடைக்க கூடியதாய் இருக்கின்றேனா?

நிதர்சனம் அப்படித்தான் இருக்கின்றது தோழர்காள்! பள்ளிக்கால நட்பு, கல்லூரி நட்பு, ஊர் நட்பு என பல வட்டங்கள் தாண்டி இங்கு நான் சொல்ல வருகின்ற நட்பு – வலையுலக நட்புக்கள். இன மத நாடு போன்ர எல்லைகளுக்கு அப்பால்  நின்று நட்பினால் பின்னப்பட்ட இந்த வலாஇயுலகில் நானும் ஒரு சிறு அங்கம் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இன்னும் உள்ளே உண்டு. அது – நான் தலைப்பாக இட்டுள்ள கேள்விதான்!! இங்கு எப்போதும் ஒரு வாசகனாய் இருப்பதில் எனக்கு நிறைய சௌகரியங்கள் இருக்கின்றன. பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள் எதுவும் தேவையில்லை எனும் அளவிற்கு எனக்கு அவர்களை தெரியும், ஆனால் எத்தனை பேருக்கு என்னை தெரியும்???


நிச்சயமாக இதற்கு காரணம் நான் தான்..அதுவும் எனக்கு தெரியும். நிச்சயமாக இந்தப் பதிவு என் போல் உள்ள பல பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம். அதற்காகவே இதை எழுதுகின்றேன். தனிப்பட்ட ஒருவரின் குண நலன்கள் இப்பதிவுலகில் – பதிவர்கள் என்றவகையில் பிரதிபலிக்கின்றன என்றால் மறுப்பதற்கில்லை அல்லவா?? இது என்னை வைத்துத்தான் சொல்கின்றேன்..


மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் சிறிது தயக்கம் கொண்ட என் போன்றவர்களால், இணைய உலகில் ஒரு நட்பு வட்டத்தினை உண்டாக்குவதென்பது முடியாத காரியம். மற்றவர்களிடம் சென்று தானே நட்பினை உண்டாக்கும் அளவிற்கு திராணி எனக்கு இது வரைக்கும் வந்ததில்லை. (இப்போது என்னவோ ஒரு வேகம் வந்துள்ளது பார்க்கலாம்!!) இது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மைதான் அல்லவா/ மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என எண்ணுவதிலேயே என் போன்றவர்களின் காலம் கழிந்து விடுகின்றது ((.


ஆனாலும் எதிர்பார்ப்புகளிற்கு பஞ்சம் இல்லாமல் இல்லை. நாம் எழுதும் பதிவுகளுக்கு மற்றவர்கள் எதீர்வினை செய்ய வேண்டும் என எண்ணுகின்ற நியாயம் நாம் ஏன் அதை செய்வதில்லை என்ற கேஎள்விக்கு, நம்ம கருத்தெல்லாம் ஒரு பெரிய விசயமா என்ற சமாதானப்படுத்தலுடன் முற்றுப் பெறுகின்றது. இது பலருக்கு புரியலாம்.

ஆரோக்கியமான பதிவுலக நட்புக்கள், அவர்களுக்கிடையிலானுறவுப் பிணைப்புக்கள் என எல்லாம் பார்க்கின்ற போது நாமும் அதற்குள் இணைய மாட்டோமா என்ற ஏக்கம் எழத்தான் செய்கின்றது. ஆனாலும் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்கின்ற யதார்த்தம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்கத் தொடங்கியுள்ளது,

என் போன்றுள்ள பதிவர்காள் கேளுங்கள், ஆரோக்கியமான நட்புக்களை பதிவுலகில் பெற வேண்டுமா ஒன்றும் செய்ய தேவை இல்லை,

முதலில் – தாழ்வுச்சிக்கலோ, நான் பெரியவன் என்ற மமதையோ இன்றி திறந்த மனசுடன் ஆரம்பிக்கலாம் , வாசல் கதவு திறந்திருந்தால்தானே விருந்தாளிகள் உள்ளே வருவார்கள்??

இன்னும், பாராட்டு என்பது அனைவருக்கும் தேவையானது, வேண்டி நிற்பது. அதை செய்ய ஒரு போதும் தயங்க கூடாது. எனக்கும் அது தேவை எனும் போது, நானும் கொஞ்சம் கொடுத்தால்தானேஎ, எனக்கும் கிடைக்கும். நான் எனதை என்னிடமே வைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது நியாயமில்லை அல்லவா?

புதிதாக வருகின்ற சில பதிவர்கள் வெகு சீக்கிரத்தில் தமக்கென்று ஒரு தனி முத்திரையினை பதிப்ப்பதை அவதானிக்கலாம். அவர்களை அவதானித்தால் மேற் சொன்ன இரு விடயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
இது இத்தனை வருட எனது தனிப்பட்ட பதிவுலக அனுபவங்களில் இருந்து நான் படித்தது. இன்னும் நான் இதை பின் பற்றவில்லை. இனி நானும் முயலப் போகின்றேன்..

நண்பர்களே காத்திருங்கள் இதோ ஒருவன் உங்களை தேடி வரப் போகின்றான்.. கூடை நிறைய நட்புக்களோடு…

நட்போடு மகிழ்ந்திருப்போம்….   




10 comments:

Angel said...

வணக்கம் ...Welcome .

தங்க முகுந்தன் said...

நான் ரெடி!

கவி அழகன் said...

வணக்கம் நண்பா அருமையான யோசனை

Admin said...

// angelin said...
வணக்கம் ...Welcome . //

நன்றி நன்றி,,,,

Admin said...

// தங்க முகுந்தன் said...
நான் ரெடி! //

நானும் ரெடி முந்தன்,, இதோ...

நன்றிகள் தோழரே...

Admin said...

// கவி அழகன் said...
வணக்கம் நண்பா அருமையான யோசனை //

நன்றி நண்பா... நட்போடு மகிழ்ந்திருப்போம் வாருங்கள் ))))

நிரூபன் said...

பாஸ், உங்களுக்குப் பிடித்தவர்களோடு, உங்கள் ரசனைகளோடு ஒத்துப் போகும் நபர்களோடு இணைந்து கொள்ளுங்கள். காலப் போக்கில் உங்களுக்கென்றே தனியான ஒரு நட்பு வட்டம் உருவாகும்.

மனம் திறந்து மகிழ்ச்சியோடு வரும் உங்களை வருக வர்க என்று வரவேற்கிறேன்.

Mahan.Thamesh said...

வாங்க பாஸ் . வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சம்பத்குமார் said...

வணக்கம் சகோ..

இது என் முதல் வருகை..

பகிர்வு அருமை..

வாருங்கள்.. ஓன்றிணைவோம்.நம் கருத்துக்களை சுதந்திரமாய் பகிர்வோம்

நட்புடன்
சமப்த்குமார்