Saturday, November 13, 2010

நுண்ணிய உணர்வினை கிளறிவிடும் Vodofone விளம்பரங்கள்

இன்னைக்கு ஒரு விளம்பரம் பார்க்க கிடைத்தது. Vodofone ன் புதிய விளம்பரம்… கொஞ்ச நேரம் பாடசாலைக்காலங்களினையும் பழைய நட்புக்களையும் மீட்டிப்பார்க்க வைத்தது… ஒரு நிமிடத்திற்குள் ஒரு சிறுகதை போல முடிகின்ற அது இன்னும் ஒரு வித உற்சாகத்தை தந்து கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு/

பாடசாலைக்காலங்களில் ஏற்படும் நட்பு வட்டங்களில் விசேடமாக ஒருவன் மட்டும் நம்மில் மிக்க அக்கறையோடு இருப்பான்.. வகுப்பறையில் பக்கத்தில் இடம் பிடித்து வைப்பது, காக்கா கடி , விளையாடும் போது ஏதாவது சண்டைகளில் சப்போர்ட் என எப்போதும் அந்த ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். முக்கியமாக நடைபெறும் கேங்க் வார்கள் பாடசாலைகளில் ரொம்ப முக்கிய அம்சம். சுவாரசியம்தான்.

உண்மையில் நம்மை ஒருவர் முக்கியத்துவப்படுத்துகின்றார் எனும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி எல்லோரும் வேண்டி நிற்கும் ஒன்று. அந்த உணர்வினை மிக குறுகிய நேரத்துள் ஒரு சிறு கதைக்கான நேர்த்தியுடன் படமாக்கியீருக்கும் விதம் அழகு. நீங்களும் பார்த்து மகிழுங்கள்....





2 comments:

சகாதேவன் said...

நானும் சில விளம்பரங்களை ரசிப்பேன். காட்பரீஸ் - மனைவிக்கு தெரியாமல் அவள் அப்பா, அம்மா, தம்பி தங்கையை தீபாவளிக்கு வரவைக்கும் கணவன் - எல்லோரும் அதில் அருமையாக நடித்திருப்பார்கள். நீங்கள் சொன்னது போல அந்த அரை நிமிடக்கதைகள் ரசிக்க முடிகிறது.
சகாதேவன்

Unknown said...

//உண்மையில் நம்மை ஒருவர் முக்கியத்துவப்படுத்துகின்றார் எனும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி எல்லோரும் வேண்டி நிற்கும் ஒன்று. //
உண்மை..